நான் யார் தெரியுமா? கோவை "பப்பில்" நெஞ்சை நிமிர்த்திய பாஜக புள்ளி! குமுறிய பவுன்சர்கள்! என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: கோயம்புத்தூரில் உள்ள பப் ஒன்றில் பாஜக நிர்வாகி மோசமாக தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொதுவாக பல பப்புகளில் ஜோடியாக செல்ல மட்டுமே அனுமதி அளிக்கப்படும். உள்ளே பெண்கள், ஆண்கள் என்று பலரும் ஆடுவதால் பப்களில் பொதுவாக இந்த ரூல்ஸ் இருக்கும். அதே சமயம் சில பப்களில் மட்டும் ஆண்கள் தனியாக சென்றாலும் அனுமதிக்கப்படுவார்கள்.

தமிழ்நாட்டில் தற்போது பல மாநகராட்சிகளில் பப்கள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான் கோவையில் உள்ள பப் ஒன்றில் பாஜகவினர் மோதல் செய்த சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 கோயம்புத்தூர்

கோயம்புத்தூர்

கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் அந்த பப் செயல்பட்டு வருகிறது. இங்கே ஆண்கள், பெண்கள் ஜோடியாக வருவதற்கு மட்டுமே அனுமதி உள்ளது. இந்த நிலையில் பாஜக சிறுபான்மைப் பிரிவு செயலாளர் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் கும்பலாக இங்கு நடந்த நடன நிகழ்விற்கு சென்றுள்ளனர். ஆனால் இந்த குழுவில் பெண்கள் யாருமே இல்லை. ஆண்கள் - பெண்கள் வந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும் என்று மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜோடி

ஜோடி

நீங்கள் ஜோடியாக வரவில்லை. அதனால் உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று மறுத்துள்ளனர் அங்கு இருந்த பவுன்சர்கள். ஆனால் பாஜக நிர்வாகி ஜான்சன்.. அதெல்லாம் முடியாது. நான் யார் தெரியுமா? இப்பவே எங்களை உள்ளே விடு.. இல்லை என்றால் நடப்பதே வேறு என்று மோசமாக கத்தி இருக்கிறார். அதோடு அங்கு இருந்த நிர்வாகிகளிடம்.. நான் பெரிய இடம்.. உள்ளே விடலைனா இந்த பப் இருக்காது என்று மிரட்டியும் இருக்கிறார்.

பாஜக ஜான்சன்

பாஜக ஜான்சன்

இதை தொடர்ந்து அங்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. தகராறு பெரிதான நிலையில் பப் நிர்வாகிகள் சார்பாக ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் ஜான்சன் மற்றும் அவரது நண்பர்கள் லட்சுமணன், டேவிட், ஜெரிஷ் ஆகியோர் மீது வழக்கு பதியப்பட்டது. இந்த விஷயம் கேட்ட ஜான்சன் கோபம் அடைந்து அந்த பப்பிற்கு மீண்டும் சென்றுள்ளார். அங்கு இருந்த நிர்வாகிகளை கடுமையாக திட்டி உள்ளார். என் மேலே கேஸ் போடுறியா என்று சண்டைக்கு சென்றுள்ளார்.

பவுன்சர்

பவுன்சர்

இதில் ஏற்பட்ட மோதலில் பவுன்சர் அந்த பாஜக நிர்வாகி ஜான்சனையும், அவரது ஆட்களையும் அங்கேயே துவைத்து எடுத்தனர். பாஜக நிர்வாகி சண்டை போட்டதால் பதிலுக்கு பவுன்சர்கள் அவரை தாக்கினர். அங்கேதான் பாஜகவின் காரும் நிறுத்தப்பட்டு இருந்தது. பாஜக ஜான்சன்தான் தேவையின்றி மோதலில் ஈடுபட்டதாகவும், பவுன்சர்கள் பாதுகாப்பு கருதியே திருப்பி தாக்கியதாகவும் பப் தரப்பு தெரிவித்து உள்ளது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+