Coimbatore: கோவையில் சம்பவம் செய்த அதிமுக.. வரலாற்றை மாற்றுமா திமுக?
கோவை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. நேற்றுடன் பிரச்சாரம் ஓய்ந்துவிட்டது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுகவும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுகவும் போராடி வருகிறார்கள். கோவையில் செந்தில் பாலாஜி, வேலுமணி இடையே அதிகார போட்டி உச்சத்தில் உள்ளது. கோவையின் நிலவரத்தை உற்று நோக்கி வருகிறார்கள். கடந்த 3 சட்டமன்ற தேர்தல்களில் கோவை யாருக்கு சாதகமாக இருந்துள்ளது, 2026 தேர்தலில் யாருக்கு சாதகமாக இருக்கும். இதோ விபரம்.
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் கோவை அரசியல் களத்தை மாநிலமே உற்று நோக்கி வருகிறது. கோவை மாவட்டம் சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு சாதகமாக இருந்துள்ளது. எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் தொடங்கி கடந்த 2021 தேர்தலில் எடப்பாடி பழனிசாமி காலம் வரை அதிமுக இங்கு சொல்லியடித்துள்ளது. திமுக எதிர்ப்பு அரசியல் தான் இந்த மண்ணில் அதிகம் எடுபட்டுள்ளது.

வரலாற்றை மாற்றி கோவையில் திமுக கொடியை பறக்கவிட செந்தில் பாலாஜியை அனுப்பியுள்ளனர். கோவையை தங்களின் கோட்டையாக தக்க வைப்பதற்கு அதிமுக வேலுமணியும் மல்லு கட்டுகிறார். அவர்களிடையே நடைபெறும் அதிகார போட்டி கோவை அரசியல் களத்தை சூடுபிடிக்க வைத்துள்ளது. கோவையில் திமுக கூடுதல் கவனத்தை செலுத்தி வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகமுறை வந்தது கோவை. ஏராளமான திட்டங்களையும் செயல்படுத்தியுள்ளனர்.
அதிமுகவும் கடந்த 50 வருடங்களில் இல்லாத வளர்ச்சியை 5 வருடங்களில் செயல்படுத்தியுள்ளோம் என்று தெம்பாக பிரச்சாரம் செய்கிறார்கள். பாஜக கூட்டணியும் அவர்களுக்கு கோவையில் கூடுதல் பலமாக உள்ளது. வரலாற்றை மாற்றுவோம் என்று செந்தில் பாலாஜியும், அதிமுகவின் வெற்றி தொடரும் என்று வேலுமணியும் கோவையில் அதிகார போட்டியில் ஈடுபட்டுள்ளனர். கோவையில் கடந்த 3 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தன.
2011 தேர்தல் முடிவுகள்
திமுக எதிரான அதிருப்தி அதிகம் இருந்த 2011 சட்டமன்ற தேர்தல் அது. தேமுதிக, கம்யுனிஸ்ட்கள் என்று அதிமுக பிரம்மாண்ட கூட்டணியை அமைத்திருந்தனர். கோவையில் உள்ள 10 தொகுதிகளில் தேமுதிக, சிபிஐ கட்சிகளுக்கு தலா ஒரு தொகுதியை கொடுத்து, மீதியுள்ள 8 தொகுதிகளில் அதிமுக போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளை வழங்கிவிட்டு, 8 தொகுதிகளில் திமுக போட்டியிட்டது.
அந்த தேர்தலில் கொங்குநாடு முன்னேற்ற கழகம் என்கிற கட்சி தனித்து போட்டியிட்டது. கோவையின் 10 தொகுதிகளிலும் அதிமுக தான் வெற்றி பெற்றது. திமுக படுதோல்வியடைந்தது. சூலூர், பொள்ளாச்சி உள்ளிட்ட தொகுதிகளில் கொமுக இரண்டாம் இடம் பிடிக்க, திமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது.
2016 தேர்தல் முடிவுகள்
மக்கள் நலக்கூட்டணி தாக்கத்தை ஏற்படுத்திய தேர்தல். அதிமுக, பாஜக தனித்து போட்டியிட்டன. கோவையில் உள்ள 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி இல்லாமல் தனித்து களம் கண்டது. திமுகவில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு ஒரு தொகுதியும் வழங்கினார்கள். தேர்தல் முடிவில் 10 தொகுதிகளில் 9 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. சிங்காநல்லூர் தொகுதியில் மட்டும் திமுக வெற்றி பெற்றது.
2021 தேர்தல் முடிவுகள்
கருணாநிதி, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நடைபெற்ற 2021 சட்டமன்ற தேர்தலில் கோவையில் உள்ள 10 தொகுதிகளில், அதிமுக 9 தொகுதிகளிலும் 1 தொகுதியில் பாஜகவும் போட்டியிட்டனர். திமுக காங்கிரஸ், சிபிஐ, கொமதேக என்று 3 தொகுதிகளை கூட்டணிக்கு விட்டு 7 தொகுதிகளில் போட்டியிட்டனர். மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் தனித்து போட்டியிட்டார். தேர்தல் முடிவில் திமுக, கமல் தோல்வியடைந்தனர். 10 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி தான் வெற்றி பெற்றது. இந்த தேர்தல் முடிவு திமுகவை அதிகம் யோசிக்க வைத்தது.
2026 தேர்தல் எப்படி இருக்கும்
தவெக வருகை தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படும் தேர்தல். கோவையில் திமுகவை வெற்றி பெறவைத்து, திமுக தொடர்ந்து 2 முறை ஆட்சியமைத்ததில்லை என்கிற வரலாற்றை மாற்ற முயற்சிக்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக 9 தொகுதிகளிலும், பாஜக ஒரு தொகுதியிலும் போட்டியிடுகிறார்கள். திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகள், கொமதேகவுக்கு 1 தொகுதி வழங்கியுள்ளனர். முடிவு எப்படியிருக்கும் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.
-
தாத்தா காலத்து பாலிடிக்ஸ் வேலைக்கு ஆகாது! உதய் போடும் மாஸ்டர் ப்ளான்! இனி Gen Z ஸ்டைல் தானாமே! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
“ஒரு இயக்கம்.. இன்னொரு இயக்கத்தின் சின்னத்தில் போட்டியிடக்கூடாது” - துரை வைகோ!












Click it and Unblock the Notifications