Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

New Year Celebration: கோவையில் புத்தாண்டு கொண்டாட்டம்.. மாநகர போலீஸ் முக்கிய அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

கோவை: 2025 ஆம் ஆண்டு நிறைவடைந்து புத்தாண்டு பிறக்கப் போகிறது. புத்தாண்டு தினத்தையொட்டி கொண்டாட்டங்கள், கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்துவது மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள் தொடர்பாக கோவை மாநகர காவல் துறை சார்பில் முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

1. புத்தாண்டு தினத்தையொட்டி கேளிக்கை மற்றும் விருந்துகளுக்கு ஏற்பாடு செய்துள்ள ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகள் ஆகியவற்றின் நிர்வாகங்கள் அவர்கள் நடத்தும் நிகழ்ச்சிகள் தொடர்பான விஷயங்களில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாவண்ணம் இருக்கத் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பாக அறிவுறுத்தப்படுகிறது.

coimbatore-city-police-department-has-issued-important-instructions-regarding-new-year-celebrations

2. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகளுக்கு வரும் வாகனப் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தவும் நிகழ்ச்சிகளில் பங்கேற்போர் மற்றும் அவர்களது சொத்துக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த பாதுகாப்பு காவலர்களை (Security Guard) நியமிக்க வேண்டும். அதேபோன்று கேளிக்கை விருந்துகளுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு (Parking) சிறப்பு ஏற்பாடுகள் செய்து போக்குவரத்து நெரிசல் இன்றி பார்த்துக்கொள்ள வேண்டும்.

3. புத்தாண்டு தினத்தின்போது தங்கள் நிர்வாகத்திற்கு உட்பட்ட இடங்கள் மற்றும் கட்டிடங்களில் ஏதேனும் சந்தேகத்திற்கிடமான பொருட்கள், விசயங்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் நடமாட்டம் குறித்து தெரியவந்தால் உடனடியாக அதுகுறித்த தகவலை காவல் துறைக்கு தெரிவிக்க வேண்டும்.

4. பத்தாண்டு தினத்தன்று மது விருந்துகளுக்கு அரசால் அனுமதிக்கப்பட்ட வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்ற சம்மந்தப்பட்ட நிர்வாகங்கள் அனுமதிக்க வேண்டும். புத்தாண்டு விருந்துகளின்போது மது அருந்திவிட்டு வாகனம் இயக்குவதை தடுக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சிகளின் ஏற்பாட்டாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.

5. தேவைப்படும் பட்சத்தில், புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்சிக்கு வரும் விருந்தினா் ஒருவர் அவரது வீட்டிற்கு பாதுகாப்புடன் செல்வதற்கு தேவையான ஓட்டுநருடன் கூடிய மாற்று வாகனத்தை ஏற்பாடு செய்து தரவேண்டியது சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.

6. புத்தாண்டு தின கேளிக்கை நிகழ்ச்சிகள் மற்றும் கொண்டாட்டங்கள் அனைத்தும் இரவு 12.30 மணிக்குள் முடிக்கப்பட்டு சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர், விருந்தினர்கள் மற்றும் நிகழ்ச்சியில் பங்கேற்பாளர்களை 1.00 மணிக்கு முன்பு வெளியேற்றிட வேண்டும்.

7. புத்தாண்டு தின கேளிக்கைகளுக்கு ஏற்பாடு செய்துள்ள நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் தங்களது நிறுவனத்தில் பணிபுரியும் பெண் ஊழியர்களை பணி முடிந்ததும் அவர்களின் வீட்டிற்கு அவர்களை பாதுகாப்பாக அனுப்புவதற்கு தேவையான வாகன வசதிகள் ஏற்பாடு செய்து தர வேண்டும்.

8. அனைத்து ஹோட்டல்கள், கேளிக்கை அரங்குகள் மற்றும் தங்கும் விடுதிகளில் நிறுவப்பட்டுள்ள CCTV கேமராக்களின் செயல்பாடுகளை பரிசோதித்து அவைகள் முழுமையாக இயங்குவதையும், CCTV கேமராக்கள் பதிவுகள் முழுமையாக பாதுகாக்கப்பட்டு சேமித்து வைக்கப்படுவதையும் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தினர் உறுதி செய்ய வேண்டும். காவல் துறையினர் கோரும் பட்சத்தில் CCTV கேமரா பதிவுகள் காவல் துறை வசம் ஒப்புவிக்கப்பட வேண்டும்.

9. ஷாப்பிங் மால்கள், உள்ளரங்கு பொழுதுபொக்கு இடங்கள், ஹோட்டல் மற்றும் விடுதி நிர்வாகங்களால் நடத்தப்படும் புத்தாண்டு தின கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கைகளுக்கு மேலாக அனுமதிச் சீட்டோ அல்லது கூப்பன்களோ வழங்குதல் கூடாது.

10. ஹோட்டல்கள், ஷாப்பிங் மால்கள், விடுதிகள் மற்றும் உள்ளரங்குகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தாண்டு விருந்து கொண்டாட்டங்களின் போது அநாகரிகமாவும். ஆபாசத்தன்மையுடனும் கூடிய நிகழ்ச்சிகள் ஏதும் நடைபெறாமல் இருக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் மேற்கொள்ளவேண்டும்.

11. புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் சட்டவிரோதமாக போதைப்பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ஹோட்டல் / விடுதி நிர்வாகத்தினர் உறுதி செய்யவேண்டும். மேலும் இதுகுறித்து தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு நிர்வாகம் தடுக்க தவறி அதன் மூலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

12.புத்தாண்டு தினத்தின்போது போக்குவரத்து விதிமீறல்களை தடுப்பதற்காக போக்குவரத்து மற்றும் உள்ளூர் காவல்துறையினர் இணைந்து நகரம் முழுவதும் வாகனத் தணிக்கையில் ஈடுபடவுள்ளார்கள். மதுஅருந்திவிட்டு பிரச்சனையை ஏற்படுத்துபவர்கள், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபவர்கள், குறிப்பாக மதுபோதையில் வாகனம்

ஓட்டுபவர்கள், வாகனப் பந்தயத்தில் (Racing) ஈடுபடுபவர்கள், இருசக்கர வாகனங்களில் சைலன்சர்களை நீக்கிவிட்டு அதிக சத்தத்துடனும் ஒலிப்பான்களை ஒலிக்கச்செய்துகொண்டும் வாகனம் ஓட்டுபவர்கள், பொதுமக்கள் நடமாட்டத்திற்கும், வாகனப்போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாக அதிவேகமாகவும் அஜக்கிரதையாகவும் வாகனம் ஓட்டுபவர்கள் ஆகியோர் மீது உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

13. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது மோட்டார் வாகனச் சட்டப்பிரிவு 185ன் படி தண்டிக்கத்தக்க குற்றமாகும். போக்குவரத்து காவல்துறையினர் சார்பாக அனுமதிக்கப்பட்ட வரையரைக்கு மேலாக மது அருந்திவிட்டு வாகனம் இயக்குபவர்களை Breath Analyser மூலம் கண்டறிந்து தக்க சட்டப்பூர்வ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுவதோடு அவர்களது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

காவல்துறை நடவடிக்கைக்குள்ளான நபர், புத்தாண்டு தினத்தையடுத்த வேலைநாளில் அவரது வாகனம் தொடர்பான ஆவணங்கள் மற்றும் ஓட்டுநர் உரிமம் ஆகியவற்றுடன் காவல்நிலையத்தில் ஆஜராக வேண்டும். காவல்துறை வாயிலாக பெறப்படும் அழைப்பாணையைப் பெற்று சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி அவரது வழக்கை முடித்துக்கொள்ளவேண்டும்.

14. கோவை மாநகரில் வாகனப் போக்குவரத்தை கண்காணிக்கவும், விபத்துக்களை தடுக்கும் விதமாகவும் மற்றும் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காகவும் 35 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு சட்டம் ஒழுங்கு காவல்துறை குழுக்கள் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன. அதே போன்று, போக்குவரத்து காவல் துறை சார்பாக 35 இடங்கள் கண்டறியப்பட்டு அங்கு போக்குவரத்து காவல்துறையினர் மூலம் வாகனத் தணிக்கை செய்யப்படவுள்ளன.

15. கோவை மாநகரில் உள்ள வடகோவை மேம்பாலம், அவினாசி சாலை பழைய மேம்பாலம், சத்தி சாலை டெக்ஸ்டூல் பாலம், ஆவாரம்பாளையம் மேம்பாலம் ஆகியவை தவிர பிற மேம்பாலங்கள 31.12.2025-ஆம் தேதி இரவு 09.00 மணிக்கு மேல் புத்தாண்டு தினத்தன்று போக்குவரத்து தடைசெய்யப்பட்டுள்ளது.

16.வாகன விபத்து உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் பாதிக்கப்பட்டோரை மீட்க நகரின் முக்கிய இடங்களாகிய அவிநாசி செல்லும் சாலையிலுள்ள அண்ணா சிலை, கொடிசியா சந்திப்பு, ஆர்.எஸ்.புரத்தில் D.B.ரோட்டில் தலைமை தபால் நிலையம் அருகில் மற்றும் உக்கடம் ஆத்துப்பாலம் சந்திப்பு ஆகிய இடங்களில் ஆம்புலன்ஸ் வாகனங்கள் நிறுத்தப்படும்.

17. வெளியூரில் இருந்து கோவை மாநகருக்குள் நுழையும் எல்லைகளில் 11 இடங்களில் எல்லைப்புற வாகனச் சோதனைச் சாவடிகளில் 24 மணிநேரமும் வாகனத் தணிக்கை தொடரப்பட்டு நகரினுள் நுழையும் அனைத்து வாகனங்கள் மற்றும் அதில் பயணிக்கும் வெளியாட்கள் கண்காணிக்கப்படவுள்ளார்கள்.

18. புத்தாண்டு நிகழ்வுகளின்போது குற்றச் செயல்களை தடுக்கும் விதமாக பழங்குற்றவாளிகள் குறிப்பாக செயின் பறிப்பில் ஈடுபடுபவர்கள், பிக்பாக்கெட்டில் ஈடுபடுபவர்கள் மற்றும் கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபடுபவர்கள் ஆகியோர்களின் செயல்பாடுகள் தீவிரமாக காவல்துறையால் கண்காணிக்கப்பட்டு தக்க குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

19. காவல் நிலையம் வாரியாக காலியாக உள்ள பொது இடங்கள், குடியிருப்பு பகுதிகளை ஒட்டியுள்ள காலியிடங்கள் மற்றும் திடல்கள் ஆகியவை கண்டறியப்பட்டுள்ளது. புத்தாண்டு தினத்தன்று மேற்படி இடங்களில் தனி நபர்கள் அல்லது குழுவினர்கள் மது அருந்துவதை அல்லது பொதுஅமைதிக்கு இடையூறு விளைவிக்கக்கூடிய செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் விதமாக சுற்றுக் காவல் ரோந்து பணி மேற்கொள்ளப்படும்.

20. பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்களை தடுக்கும் விதமாகவும், பிற குற்றச்செயல்களை தடுக்கும் விதமாகவும் குறிப்பாக செயின் பறிப்பு போன்ற குற்றச் சம்பவங்களை தடுக்கும் பொருட்டும் கோவை மாநகரில் 28 நான்கு சக்கர வாகன ரோந்துகளும் 59 இரு சக்கர வாகன ரோந்துகளும் மற்றும் 7 Pink Patrol ரோந்து வாகனங்களும் ரோந்து பணியில் ஈடுபடும்.

21. அனைத்து Patrol வாகனங்கள் தொடர்பு எண்கள் All in one என்ற OR code மூலமாக கோவை மாநகர காவல்துறையின் சமூக வலைதளப்பக்கத்தில் உள்ளது. அதை ஸ்கேன் செய்வதன் மூலம் சம்மந்தப்பட்ட பகுதியின் Patrol வாகன எண்ணை கண்டறிந்து அவச உதவி தேவைப்படுவோர் அதனை தொடர்பு கொண்டு உதவி பெற்றிடலாம்.

22. புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாநகரில் மக்கள் அதிகம் வருகைதரக்கூடிய 10 இடங்கள், 40 முக்கிய சந்திப்புகள, 84 சர்ச்சுகள் மற்றும் 16 கோவில்கள் ஆகியவை கண்டறியப்பட்டு மேற்படி இடங்களில் போக்குவரத்தை சரிசெய்வதற்கும் பொது அமைதியை காவல்துறையினரின் எண்ணிக்கை பேணுவதற்காகவும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

23. புத்தாண்டு தினத்தையொட்டி, கோவை மாகநரில் உள்ள 7 பேருந்து நிலையங்கள், 6 ரயில்வே நிலையங்கள் ஆகிய இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

24. அவிநாசி ரோடு, திருச்சி ரோடு, பொள்ளாச்சி ரோடு, தடாகம் ரோடு, பாலக்காடு மெயின் ரோடு, ரேஸ் கோர்ஸ் ரோடு, கவுலி பிரவுன் ரோடு, மருதமலை ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தியமங்கலம் ரோடு. RG வீதி, VH ரோடு சாலை, பூ மார்க்கெட் ரோடு, திவான் பகதூர் ரோடு மற்றும் பிற முக்கியமான சாலைகள் ஆகிய இடங்களில் அதிக அளவிலான காவல்துறையினரைக் கண்காணிப்பும் பலப்படுத்தப்படவுள்ளது.

25.அவரசகால தேவைக்கென்று நகரின் முக்கிய பகுதிகளான கொடிசியா சந்திப்பு, தாமஸ் பார்க், LIC சந்திப்பு, உக்கடம் சந்திப்பு, ஆத்துப்பாலம் சந்திப்பு, ஆர்.எஸ்.புரம் தலைமை தபால் அலுவலகம் ஆகிய இடங்களில் 6 அதிவிரைவுப்படைகள் நியமிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

26. 4 காவல் துணை ஆணையர்கள், 2 கூடுதல் காவல் துணை ஆணையர், 14 காவல் உதவி ஆணையர்கள், அனைத்து காவல்நிலைய காவல் ஆய்வாளர்கள், உதவி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலாகள், 2 அணி தமிழ்நாடு சிறப்பு காவல்படை காவல் ஆளிநர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினர் உள்ளிட்ட சுமார் 1600 பேர் புத்தாண்டு தின பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

27. பொதுமக்கள், காவல் துறையின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தருவதோடு, புத்தாண்டு தின கொண்டாட்டம் குறித்த ஏதேனும் அசம்பாவிதம் அல்லது குற்றச்செயல்கள் தொடர்பான தகவல் தெரிந்தால் அவற்றை உடனடியாக கோவை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண் 04222300970 மொபைல் எண் 9498181213 மற்றும் வாட்ஸ்ஆப் எண்: 8190000100 ஆகிய எண்களுக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு கெட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகவல் தருபவர்கள் பற்றிய விபரம் ரகசியம் பாதுகாக்கப்படும். பெண்கள் அவசர உதவி தேவைப்படும் பட்சத்தில் மகளிர் அவசர உதவி எண் 109 ஐயும் தொடர்பு கொள்ளலாம்.

28. மேலும், பொதுமக்கள் அவசர காலத்தில் தமிழக காவல் துறையால் உருவாக்கப்பட்டுள்ள "காவல் உதவி" செயலி மூலமாகவும் காவல் துறையின் உதவியை நாடலாம்.

29. பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை நண்பர்கள் மற்றும் சுற்றத்தாருடன் மகிழ்ச்சியுடனும் பாதுகாப்புடனும் கொண்டாடுவதற்கு தடையேதும் இல்லை. கோவை மாநகர காவல் துறையும் சட்டம் ஒழுங்கிற்கு பாதகமில்லாத வகையில் பொதுமக்கள் புத்தாண்டு தினத்தை கொண்டாடுவதை வரவேற்கிறது. இருப்பினும் புத்தாண்டு தின கொண்டாட்டம் என்ற பெயரில் பொதுமக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறு செய்யும் விதமாகவும், பொது அமைதிக்கும் சட்டம் ஒழுங்கிற்கும் குந்தகம் விளைவிக்கும் செயலிலும் ஈடுபடுவோர்கள்.

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட போக்குவரத்து விதிமீறல்கள் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள், போதைப்பொருட்களை உபயோகிப்பது தொடர்பான விசயங்கள் ஆகியவற்றில் கோவை மாநகர காவல் துறையானது எவ்வித சமரசத்திற்கும் இடம் கொடுக்காது என்பதையும் அத்தகையோர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்பதை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+