அதிகனமழையால் நிரம்பும் பில்லூர் அணை.. கோவை பவானி ஆற்றில் பெருகும் வெள்ளம்.. எச்சரிக்கும் கலெக்டர்
கோவை: கனமழையால் பில்லூர் அணை நிரம்பத்தொடங்கியுள்ளது. அணையின் பாதுகாப்பு கருதி விநாடிக்கு 6000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால் பவானி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தென்மேற்கு பருவமழை மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்களில் அதீத கனமழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் அதிகபட்சமாக 38 செமீ மழை பதிவாகியுள்ளது. நடப்பாண்டில் அதிகபட்ச மழையாக அவலாஞ்சியில் பதிவாகியுள்ளது.

நீலகிரி மாவட்டம் மற்றும் கேரளாவில் பெய்து வரும் அதி கனமழை காரணமாக பில்லூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 14,000 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் வட்டம் பில்லூர் அணையின் மொத்த நீர்மட்டம் 100 அடியில் தற்போதைய நிலவரப்படி நீர்மட்டம் 94 அடியை எட்டி உள்ளது.
இதன் காரணமாக பில்லூர் அணையில் இருந்து வினாடிக்கு 6000 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ள காரணத்தினால் பவானி ஆற்று கரையோர மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருந்திடவும், சிறுவர்கள் ஆற்று பக்கம் செல்ல வேண்டாம் என கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications