களத்தில் இறங்கிய கலெக்டர்.. பம்பை அடித்து, ஒயிலாட்டம் ஆடி அசத்திய கோவை ஆட்சியர்.. மக்கள் உற்சாகம்!
கோவை : கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் நடைபெற்ற ஒயிலாட்ட நிகழ்ச்சியில் பம்பை இசைத்து கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் உற்சாகத்துடன் ஒயிலாட்டம் ஆடியது பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது.
கோவை மாவட்டம் கருமத்தம்பட்டியில் பாரம்பரிய கலைகளை மீட்டெடுக்கும் நோக்கில் ஒயிலாட்ட நிகழ்ச்சி அரங்கேற்றம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், சூலூர் எம்.எல்.ஏ கந்தசாமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.
இதில் ஒயிலாட்ட பாடல்களுக்கு சிறுவர், சிறுமியர் மற்றும் பெண்கள் நடனமாடியதை ரசித்த ஆட்சியர் சமீரன், ஒயிலாட்டம் ஆடும் இடத்திற்கு வந்து அங்கு பம்பை அடித்துக் கொண்டிருந்தவரிடம் பம்பையை வாங்கி அடித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். பின்னர் நடனக் கலைஞர்களுடன் இணைந்து ஒயிலாட்டம் ஆடினார்.

ஒயிலாட்டம்
கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள கருமத்தம்பட்டியில் நேற்று சுதந்திர தின அமுதப் பெருவிழாவையொட்டி, சங்கமம் கலைக்குழு சார்பில் ஒயிலாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன், கௌமார மட ஆலய ஆதீனம் குருமரகுருபர சுவாமிகள், சூலூர் எம்எல்ஏ கந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டு, ஒயிலாட்ட அரங்கேற்றத்தை தொடங்கி வைத்தனர்.

பம்பை அடித்த கலெக்டர்
இதில் சங்கமம் கலைக்குழுவில் பாரம்பரிய நடனங்களான ஒயிலாட்டம், காவடியாட்டம் உள்ளிட்ட நடன பயிற்சி முடித்த சிறுவர்கள், சிறுமியர்கள் மற்றும் பெண்கள் உள்பட ஏராளமானோர் பல்வேறு பாடல்களுக்கு பாரம்பரிய நடனங்களை ஆடி அசத்தினர். நிகழ்ச்சியை ஆர்வமுடன் கண்டுகளித்த ஆட்சியர் சமீரன், பின்னர் பம்பை அடித்தும், குழுவினருடன் இணைந்து நடனமாடியும் அவர்களை உற்சாகப்படுத்தினார். ஓயிலாட்ட கலைஞர்களுடன் இணைந்து ஆட்சியர் நடனமாடிய நிகழ்வு பார்வையாளர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. இசைக்கு ஏற்ப ஆட்சியர் சமீரன் நடனம் ஆடியது அங்கிருந்த பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

பாரம்பரியக் கலை
நிகழ்ச்சி குறித்து பேசிய ஆட்சியர் சமீரன், பாரம்பரிய ஒயிலாட்டக் கலையினை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல, ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு எவ்வித கட்டணமும் இல்லாமல் அர்ப்பணிப்பு உணர்வுடன் கற்றுக்கொடுத்து வரும் அரசுப் பள்ளி ஆசிரியர் கனகராஜுக்கு தனது வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்வதாக கூறினார்.

சமீரன்
கோவை மாவட்ட ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன், திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தவர். 2012 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரியான சமீரன், பரமக்குடியில் சார்-ஆட்சியராகவும், ராமநாதபுரத்தில் கூடுதல் ஆட்சியர் ஆகவும், பால்க் வளைகுடா திட்ட இயக்குநராகவும், மீன்வளத்துறை இயக்குநராகவும் பணியாற்றியவர். தென்காசி மாவட்ட ஆட்சியராகவும் பணியாற்றியுள்ளார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications