கோவையில் சிதறிய ஆணுறைகள்.. ஒரு பெண்ணையும் விடல.. விக்கித்த கோயம்புத்தூர் போலீஸ்.. இப்படியொரு ரோமியோ?
கோவை: கோவையில் நடந்துள்ள பாலியல் அக்கிரமத்தை கேள்விப்பட்டு, ஒட்டுமொத்த மக்களும் அதிர்ச்சியில் உறைந்துபோயிருக்கிறார்கள்.. யாரிந்த இளைஞர்? என்ன நடந்தது கோயம்புத்தூரில்?
மாணவர்: இவருடன் தன்னுடைய காலேஜில் படித்து வந்த 19 வயது மாணவியுடன் நட்பாக பழகினார். பிறகு காதலிப்பதாக சொல்லி, அந்த மாணவியை தான் தங்கியிருந்த வீட்டிற்கு அடிக்கடி அழைத்து சென்றிருக்கிறார்.. அங்கே மாணவியுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட்டதாக தெரிகிறது.

இதற்கு பிறகு, அடுத்த சில மாதங்களில் 21 வயதான இன்னொரு மாணவியுடன் நெருங்கி பழகியிருக்கிறார் தர்ஷன்.. அந்த பெண்ணையும் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து சென்று உறவு வைத்துக்கொண்டதாக தெரிகிறது.
கறார் முடிவு: பிறகு, இன்னொரு மாணவியை காதலிப்பதாக சொல்லி வந்துள்ளார்.. அந்த பெண்ணையும் வீட்டுக்கு வரும்படி அழைத்து வற்புறுத்தினாராம்.. ஆனால், அந்த பெண்ணோ இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.. யாருமில்லாத வீட்டிற்கு, தனியாக வரமாட்டேன் என்று கறாராக சொல்லிவிட்டாராம். இருந்தாலும், விடாமல் அந்த பெண்ணை தன் வீட்டிற்கு அழைத்து கொண்டே இருந்தாராம்.
இதற்கு நடுவில், ஏற்கனவே காதலித்த 2 மாணவிகளுக்கு, தர்ஷனின் சுயரூபம் தெரியவந்துள்ளது. இதற்கு மேலும் தர்ஷனால் ஏமாந்துவிடக்கூடாது என்பதற்காக, அவரிடமிருந்து உறவை முற்றிலும் துண்டித்து கொண்டதாக தெரிகிறது. இதையறிந்த தர்ஷனோ, அந்த பெண்களையே மறுபடியும் பாலியல் உறவுக்கு வற்புறுத்தி வந்துள்ளார். ஆனால், அந்த பெண்கள் மறுத்ததற்கு, பகிரங்கமாகவே எல்லார் முன்னிலையும் ஆபாசமான வார்த்தைகளில் கேவலமாக பேசினாராம்.
பாலியல் உறவு: அத்துடன், பாலியல் உறவு கொள்ளும்போது ரகசியமாக எடுக்கப்பட்ட வீடியோ தன்னிடம் இருப்பதாகவும், அதை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துவிடுவதாகவும் கூறி அந்த 2 பெண்களை மிரட்டியதாகவும் தெரிகிறது.
அனைவர் முன்னிலையிலும் தர்ஷன் இப்படி மிரட்டியதால், இந்த விஷயம் காலேஜ் முழுக்க பரவி அதிர்ச்சியை தந்தது. இதற்கு பிறகு தர்ஷனை விடக்கூடாது என்று நினைத்த பாதிக்கப்பட்ட 2 மாணவிகளும் குனியமுத்தூர் போலீசில் புகார் தந்தனர்.. இதையடுத்து போலீசார் ஸ்ரீ தர்ஷனை கைது செய்தனர்.
வாடகை வீடு: பிறகு தர்ஷன் தங்கியிருந்த அந்த வாடகை வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர்.. அப்போது வீட்டிற்குள் ஏராளமான ஆணுறை பாக்கெட்டுகள் கிடந்ததாம்.. புகார் தந்த 2 பெண்கள் மட்டுமல்லாமல், இதற்கு முன்பு 20க்கும் மேற்பட்ட மாணவிகளை இப்படி வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்கிறார்கள்.
இதன்பிறகு, தர்ஷனின் செல்போனை போலீசார் ஆய்வு செய்தனர்.. அப்போது, மாணவிகளின் போட்டோக்கள், வீடியோக்கள் போன்றவை அதில் வைத்திருந்ததும் தெரியவந்தது.. ஆனால், இவைகளையெல்லாம், தன்னுடைய நண்பர்களுக்கு அனுப்பியிருக்கிறாரா? என்ற கோணத்திலும் விசாரணை நடக்கிறது.
ஆண் நண்பர்: இதுவரைக்கும் ஒரேயொரு ஒரு ஆண் நண்பரைகூட, தன்னுடைய வீட்டுக்கு தர்ஷன் அழைத்து வந்ததில்லையாம்.. வெறும் பெண்கள் மட்டுமே இதுவரை வந்து சென்றிருக்கிறார்களாம்.
அப்படி பெண்ணை வீட்டுக்கு அழைத்து வரும்போது, வீட்டின் அக்கம்பக்கத்தில் யாராவது இருக்கிறார்களா? இல்லையா? என்பதையெல்லாம் கண்காணிப்பாராம்.. வீட்டின் அருகே யாருமில்லை என்று உறுதியான பிறகே, அந்த பெண்ணுக்கு போன் செய்து, வீட்டிற்கு வரவழைத்து உல்லாசத்தில் ஈடுபடுவாராம்.
தர்ஷன் பேச்சு: ஆனால், இதில் பெரும்பாலான பெண்களை, காதலிப்பதாகவே சொல்லி வீட்டிற்கு அழைத்து சென்றிருக்கிறார்.. ஒருகட்டத்தில் தர்ஷனை பற்றி இந்த பெண்களுமே தெரிந்ததுமே, தங்களது எதிர்காலம் பாழாகி விடும் என்ற பயத்தில், இதையெல்லாம் வெளியே சொல்லாமல் இருந்துள்ளனர்.
காலேஜ் பெண்கள் என்றில்லாமல், தான் வசித்து வந்த ஏரியா பெண்களையும் தர்ஷன் விட்டுவைத்ததில்லையாம்.. தர்ஷனின் செல்போனில் இருந்த மெசேஜ்களை எல்லாம் பார்த்து, கோவை போலீசார் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்..
இதில் ஒரு ஹைலைட் என்னவென்றால், தன்னுடைய வீட்டில் எப்போதுமே சமத்து பிள்ளை போலவே தர்ஷன் நடந்து கொள்வாராம்.. "நான் நல்லா படிக்கிறேன்.. நிறைய மார்க் வாங்குவேன்.. நான்தான் கிளாஸிலேயே முதல் மார்க்" என்றெல்லாம் சொல்வாராம்.. இதையெல்லாம் கேட்டு, தர்ஷனின் அம்மா, அப்பாவும் அப்படியே நம்பி விடுவார்களாம்..!!!
வழக்கு பதிவு: முன்னதாக, இந்த கல்லூரி மாணவிகள் 2 பேரும், ஒரே மாதிரியான புகார்களை தந்திருந்தனர்.. அதில், ஸ்ரீதர்ஷனை காதலித்ததாகவும், வேறு சில பெண்களுடன் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்ததும், விலகிவிட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த தர்ஷன், காதலிக்கும்போது எடுத்த போட்டோக்களை காட்டி சொல்கிறபடி நடக்கவில்லையானால், அவைகளை வெளியிடுவதாகவும் மிரட்டுவதாகவும் புகார் கூறியிருந்தனர்.
தங்கள் குடும்பத்தினரையும் தரக்குறைவாக திட்டிய தர்ஷன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பெண்கள் புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார்களாம்.












Click it and Unblock the Notifications