கோவை கல்லூரி மாணவர் அமுதன் வழக்கில் கூட்டுக்களவாணிகள்.. எவிடன்ஸ் கதிர் பேட்டி

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கல்லூரி மாணவர் அமுதன் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனவும், விவகாரத்தில் தமிழக அரசும் கல்லூரி நிர்வாகமும் கூட்டுக் களவாணிகள் எனவும் எவிடன்ஸ் கதிர் பேட்டி அளித்துள்ளார். 10 லட்சம் கூட தருகிறோம் என் மகனை கல்லூரியால் திருப்பித் தர முடியுமா? கல்லூரியின் பெயர் கெட்டுவிட கூடாது என்பதற்காக என் மகன் கொலை வழக்கில் கல்லூரி நிர்வாகம் பொய் பேசுகிறது என அமுதனின் தாய் சுமதி பேட்டி அளித்துள்ளார்.

கோயம்புத்தூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வந்த 19 வயது மாணவன் அமுதன், கல்லூரியில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு குறித்து கல்லூரி நிர்வாகத்திற்குத் தகவல் கொடுத்தார் என்றும் இதன் காரணத்தால், கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி 20-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஆயுதங்களால் தாக்கி அவனைப் படுகொலை செய்தது என்றும் குற்றச்சாட்டு எழுந்தள்ளது

Coimbatore college student Amudhan case Evidence Kathir accused tn govt and college administration

இச்சம்பவம் குறித்து 'எவிடன்ஸ்' அமைப்பின் உண்மை அறியும் குழுவினர், படுகொலை செய்யப்பட்ட அமுதனின் தந்தை கென்னடி மற்றும் தாயார் சுமதி ஆகியோரைச் சந்தித்துக் கள ஆய்வு மேற்கொண்டனர். கள ஆய்வில் கிடைத்த தகவல்களின் அடிப்படையில், மதுரையில் எவிடன்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர், அமுதனின் பெற்றோருடன் இணைந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநர் கதிர் கூறுகையில், "கோவையில் கல்லூரி மாணவர் அமுதன் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் கும்பல் கலாச்சாரம் அதிகரித்துள்ளதுடன் சட்டம் ஒழுங்கும் சீர்கெட்டுள்ளது. இவ்வழக்கை தமிழக அரசும் கல்லூரி நிர்வாகமும் திசைதிருப்பப் பார்க்கின்றன. கல்லூரி சமையலரை அமுதன் தாக்கவில்லை; உடனிருந்த அஜீஸ் எனும் மாணவர்தான் தாக்கியுள்ளார்.

கல்லூரி நிர்வாகத்திடம் கஞ்சா விற்பனை செய்பவர்களின் பெயர் பட்டியலை அமுதன் வழங்கியிருந்தான். இது கோஷ்டி மோதல் என்றால், அமுதனுடன் சென்ற ஸ்ரீமனை அந்த கும்பல் ஏன் தாக்கவில்லை? 20 மாணவர்கள் கொலைகாரக் கும்பலாக மாறியதற்குச் சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகமே முழுப் பொறுப்பேற்க வேண்டும். இதனை கோஷ்டி மோதல் என அமைச்சர் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது.

தாக்குதலில் ஈடுபட்ட 20 பேரில் 10 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அனைவரும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அடைக்கப்பட வேண்டும். தலித் மாணவரைக் கொலை செய்த கும்பலுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது. மாணவர் அமுதன் கொலை விவகாரத்தில் கல்லூரி நிர்வாகமும் தமிழக அரசும் கூட்டுக் களவாணிகள்.

அமுதன் எழுதிக் கொடுத்த கஞ்சா கும்பலின் பட்டியல் தற்போது காவல்துறையிடம் உள்ளது. அந்தப் பட்டியலை வைத்து காவல்துறை முறையான விசாரணை நடத்த வேண்டும். இதை வெறும் கோஷ்டி மோதல் என முடித்துவிடக் காவல்துறை பார்க்கிறது. சட்டப்பேரவையில் அமைச்சர் என்ன பேசுகிறாரோ, அதன்படியே காவல்துறையும் விசாரணை நடத்துகிறது.

சஸ்பெண்ட் செய்யப்பட்ட அமுதனிடம் கல்லூரி நிர்வாகம் எவ்வாறு கட்டணம் பெற முடியும்? காவல்துறை ஏன் கல்லூரி நிர்வாகத்தை விசாரிக்கவில்லை? கோஷ்டி மோதல் என்பது கல்லூரியால் உருவாக்கப்பட்ட கட்டுக்கதையாகும். அமுதனிடம் விசாரணை நடத்திய 4 பேர் அடங்கிய கல்லூரி நிர்வாகக் குழுவில் ஒருவர்தான், அவன் கொடுத்த கஞ்சா பட்டியலை வெளியில் தெரிவித்துள்ளார்.

ஜூலை 24-ஆம் தேதி அமுதன் சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகக் கூறுகிறார்கள்; ஆனால், ஜூலை 31-ஆம் தேதி வரை அவனைச் விடுதியில் தங்க அனுமதித்துள்ளனர். ஆகஸ்ட் 1-ஆம் தேதியிலிருந்துதான் அமுதன் வெளியில் இருந்து கல்லூரித் தேர்வுக்குச் சென்றுவந்துள்ளான். எனவே கல்லூரி நிர்வாகத்தையும் இவ்வழக்கில் சேர்க்க வேண்டும். அமுதனின் சகோதரருக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும். மேலும், தமிழ்நாடு காவல்துறை மீது நம்பிக்கை இல்லாததால் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும்" எனக் கூறினார்.

தொடர்ந்து அமுதனின் தாயார் சுமதி கூறுகையில், "கல்லூரி நிர்வாகம் எங்களிடம் மூன்று கட்டமாக விசாரணை செய்தது. அப்போது என் மகன் அமுதன் தைரியமாகப் பேசினான். எங்களை வெளியே அனுப்பிவிட்டு, கல்லூரியில் உள்ள கஞ்சா கும்பல் குறித்து அமுதனிடம் கடிதம் மூலம் எழுதி வாங்கிக்கொண்டனர். விசாரணைக்கு அழைத்தபோது ரூ. 25,000 கட்டினோம். உடனடியாக ரூ. 1.5 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்றும் சொன்னார்கள்.

விடுதியை விட்டு வெளியேறிக்கொள்கிறோம் என நாங்கள் எந்தக் காலகட்டத்திலும் எழுதித் தரவில்லை. கல்விக் கட்டணம் தொடர்பாக மட்டுமே கடிதம் கொடுத்தோம். கல்லூரியைச் சேர்ந்த 20 மாணவர்கள் இக்கொலையில் ஈடுபட்டிருக்கும்போது, கல்லூரிக்கு எப்படித் தொடர்பில்லை எனக் கூற முடியும்? கல்லூரிக்கு ரூ. 10 லட்சம் கூடத் தருகிறோம், என் மகனைத் திருப்பிக் கொடுக்க முடியுமா? கல்லூரியின் பெயர் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே அவர்கள் பொய் பேசுகிறார்கள்" என வேதனையுடன் கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+