போதை குறித்து புகார்.. கோவை கல்லூரி மாணவனை கொடூரமாக கொன்ற 20 பேர் கொண்ட கும்பல்.. 5 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை கல்லூரி மாணவர்களிடம் போதை பொருள் பயன்பாடு அதிகரித்து வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் அமுதன் (19). இவர் கோவை ஒத்தக்கால் மண்டபத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கல்லூரி ஹாஸ்டலில் உள்ள சமையலர் ஒருவரை தாக்கியதால் அமுதன் கல்லூரியில் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். போதை பொருள் குறித்து புகார் தெரிவித்த அமுதனை 20 பேர் இணைந்து படுகொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 17 வயது சிறுவன் உள்பட 5 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து அமுதனின் தந்தை செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "என் மகனை யாரோ அடித்துவிட்டார்கள் என்று கல்லூரியில் புகார் சொல்லியுள்ளான். அதைப்பற்றி கேட்காமல் வேறு எதையோ பேசியுள்ளனர். கல்லூரி முதல்வர், துறை தலைவர் எல்லாரும் இணைந்து என் மகனிடம் ஒரு வாக்குமூலம் வாங்கிட்டாங்க சார். ஹாஸ்டலில் திருப்பி சேர்க்க சொல்கிறோம், நீ இங்கே யார் யாரெல்லாம் போதை பொருள் விற்கிறார்களோ அவர்களின் பெயர்களை சொல் என்று மகனிடம் கேட்டுள்ளனர்.

Coimbatore student drug

கல்லூரி நிர்வாகம் சதி

என் மகன் பயத்தில் மற்ற பசங்க பெயரை எல்லாம் சொல்லிவிட்டான். இது உனக்கும், எனக்கும் தான் தெரியும். ரகசியமாக வைத்து கொள்கிறோம். நீ எதற்கும் பயப்பட வேண்டாம். நாங்கள் காட்டிக் கொடுக்க மாட்டோம். தைரியமாக போயிட்டு வா என்று அனுப்பி வைத்துள்ளனர். என் மகனும் நம்பிக்கையுடன் வந்துள்ளான். என் பையனை ஒரு வாரம் கழித்து கல்லூரிக்கு சென்றால் போதும். ஊருக்கு வா என்று நாங்கள் சொன்னோம்.

இன்டர்நெல் எக்ஸாம் நடப்பதால், பிரெண்ட் வீட்டில் தங்கி முடித்துவிட்டு அப்படியே ரூம் பார்த்துட்டு வரேன் என்று மகன் சொன்னான். என் மகனும், அவன் நண்பன் ஸ்டீபன் என்பவனும் கல்லூரிக்கு கிளம்பியுள்ளனர். ரூமை விட்டு வெளியே வரும்போதே விபரீதம் ஆகியுள்ளது. என் மகன் சொன்னதை ரகசியமாக பாதுகாப்போம் என்று கல்லூரி நிர்வாகத்தில் சொன்னார்கள். ஆனால் அவர்களை பற்றி என் மகன் பெயருடன் எழுதி கொடுத்து அப்ரூவர் ஆகிவிட்டான் என்று சம்பந்தப்பட்டவர்களிடம் சொல்லியுள்ளனர்.

மாணவன் படுகொலை

20 பேர் பைக்கில் வந்து மகனிடம் பிரச்சனை செய்துள்ளனர். ஸ்டீபனை அடித்தவுடன் அவன் ஓடிவிட்டான். என் பையனை பைக்கில் உட்கார வைத்து, கிரவுண்டுக்கு அழைத்து சென்றனர். இரும்பு ராடாலும், கத்தியாலும் குத்தி துடிதுடிக்க என் பையனை கொன்னுட்டாங்க சார். நண்பன் ஒருவன் மறைந்திருந்து பார்த்து வாக்குமூலம் சொல்லிவிட்டான். அவன் யாரையும் அடிக்கவில்லை. எந்த பிரச்சனையும் செய்யவில்லை. என்னிடம் எல்லாமே சொல்லிவிடுவான். என் கண் முன்னால் கொன்னார்கள் என்று வாக்குமூலம் அளித்தான்.

ஹெச்.ஓ.டி, பி.டி சார் எல்லாரும் தான் என் பையனுக்கு மனை உளைச்சலுக்கு ஆளாக்கி அவனிடம் வாக்குமூலம் வாங்கினார்கள். அதனால் தான் என் பையனை அடித்து கொன்றனர். அவர்களிடம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு நீதி வேண்டும். இனிமேல் சமுதாயத்தில் இதுபோன்ற பிரச்சனைக்காக யாரும் படுகொலை செய்யப்படக் கூடாது சார். என் மகனை கொன்று ரூமில் வந்து போட்டுவிட்டனர். பிறகு தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நீதி வேண்டும்

தனியார் மருத்துவமனை செல்லும்போதே அவன் இறந்துவிட்டான். இறுதியாண்டு, இரண்டாமாண்டு மாணவர்கள் 20 பேர் இணைந்து அவனை கொன்றுள்ளனர். எப்ஐஆரில் அவர்களின் பெயர்களை இணைத்துள்ளனர். 20 பேர் என் பையனை மிதித்து ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளனர். மாணவர்களுடன் வெளியாட்களும் சேர்ந்து கொன்றுள்ளனர். கல்லூரியில் இருந்து ஆசிரியர், முதல்வர், ஹெச்.ஓ.டி யாரும் வரவில்லை. என் பையன் அங்கே தான் படிக்கிறான்" என்றார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக, 17 வயது சிறுவன் உட்பட 5 மாணவர்களை செட்டிபாளையம் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். ஆரமுதன்,அரவிந்த், சிவரோகித்,மணி பாலு மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

இந்த கொலை சம்பவம்,சீனியர், ஜூனியர் மோதல், செல்போன் விவகாரத்தில் செய்யப்பட்ட கொலை என்றும், போதைப் பொருள் தொடர்பான நோக்கில் கொலை நடைபெறவில்லை என்றும் எஸ்பி பவன்குமார் தெரிவித்துள்ளார்.

முதல்கட்ட விசாரணை குறித்து போலீசார் கூறுகையில், ஒத்தக்கால்மண்டபம், மலுமிச்சம்பட்டி அருகே கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அமுதனின் நண்பர்கள் பலர் அறை எடுத்து தங்கி, கல்லூரியில் படித்து வருகின்றனர். அமுதன் தனது நண்பர்களின் அறைக்கு அடிக்கடி சென்று தங்குவது வழக்கம். இந்நிலையில், கல்லூரியில் நான்காமாண்டு படித்து வரும் மாணவர்கள் தங்கியுள்ள விடுதிக்கு மூன்றாமாண்டு படிக்கும் 9 மாணவர்கள் ஆகஸ்ட் 9 ஆம் தேதி காலையில் முகமூடி அணிந்தபடி சென்றுள்ளனர்.

அங்கிருந்த மாணவர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டி செல்போன்களை பறித்துச் சென்றுள்ளனர். இந்த மாணவர்களுடன் அமுதனும் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது, அமுதன் முகத்தில் அணிந்து இருந்த முகமூடி விலகியதால் அவரை மற்ற மாணவர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இதன் காரணமாக அவர்கள் அமுதனை தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் நான்காமாண்டு மாணவர்களிடம் செல்போன்களை பறித்தது தொடர்பாக 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று கூறினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+