காதலுனுக்கு புது KTM பைக்! பார்க்க கூடாத வேலையை பார்த்த கோவை மாணவி! இப்படி சிக்கிட்டாங்களே!

Subscribe to Oneindia Tamil

கோயம்புத்தூர்: காதலனின் மனதை கவர வேண்டும் என்றும், அவர்கள் நண்பர்கள் மத்தியில் தங்கள் காதல்தான் உயர்ந்தது என்று தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோவையை சேர்ந்த மாணவி, அவரது காதலனுக்கு ரூ.2.5 லட்சத்தில் புதிய கேடிஎம் பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார். ஆனால், இதற்கான பணத்தை தனது தந்தையின் நண்பர் வீட்டிலிருந்து திருடிய நகையை விற்றுதான் ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

கோவை பொள்ளாச்சி அருகே உள்ள சங்கம்பாளையத்தை சேர்ந்தவர் ராஜேஷ். இவரது மகள் ஜாய் பிரியன்சி தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். ராஜேஷின் நீண்ட கால நண்பர்தான் மெக்கானிக் தமிழ்செல்வன். தமிழ்செல்வன் வீட்டிற்கு மாணவி ஜாய் அடிக்கடி வந்து செல்வது வழக்கம். இப்படி இருக்கையில் கடந்த ஆக.16ம் தேதி ஜாய் கடைசியாக இவரது வீட்டிற்கு வந்து சென்றிருக்கிறார்.

Coimbatore college student

ஆனால், அதன் பின்னர்தான் தமிழ்செல்வன் வீட்டிலிருந்த சுமார் 9 சவரன் தங்க நகையை காணவில்லை. 9 சவரன் என்றால் சும்மாவா.. தங்கம் விக்கிற விலைக்கு ரூ.9 லட்சம் வரை போகும். எனவே வீட்டையே மொத்தமாக புரட்டி போட்டு நகையை தமிழ்செல்வன் குடும்பத்தினர் தேடியிருக்கின்றனர். சாதாரணமாக ஒரு கம்மல், திருகானி என்றால் கூட.. கீழே விழுந்துவிட்டது.. தொலைந்துவிட்டது என்று நம்மை நாமே சமாதானம் செய்துக்கொள்ளலாம். மொத்தமாக 9 சவரன் எப்படி தொலைந்து போகும்?

எனவே சந்தேகம் எல்லோர் மேலும் திரும்பியது. குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரிடமும் தமிழ்செல்வன் விசாரிக்கிறார். எங்கும் நகை கிடைக்கவில்லை. இந்த விசாரணைக்கு இடையில்தான் ஆக்.16க்கு பிறகு ஜாய் மீண்டும் வீட்டிற்கே வரவில்லை என்று தெரிய வருகிறது. இப்படியாக ஜாய் மீது சந்தேகம் திரும்புகிறது. இருப்பினும் ஜாய் பிரியன்சியின் தந்தை ராஜேஷும், தமிழ்செல்வனும் நீண்ட கால நண்பர்கள். 'முஸ்தபா.. முஸ்தபா' என பாடி வளர்ந்த நண்பர்கள் எப்படி சந்தேகப்படுவார்கள்? இருப்பினும் குடும்பத்தினரின் அழுத்தம் காரணமாக தமிழ்செல்வன் காவல் நிலையத்தில் புகார் அளிக்கிறார்.

புகாரின் பேரில் போலீசார் தங்கள் பாணியில் விசாரணையை தொடங்கினர். மனைவி, மகன், உற்றார் உறவினர் என எல்லாரிடமும் விசாரணையை முடித்துக்கொண்டு.. கடைசியாக ஜாய் பிரியன்சியிடம் விசாரணை நடக்கிறது. கேட்ட கேள்விகளுக்கும் ஜாய் கொடுத்த பதிலுக்கும் பெரிய வித்தியாசம். இதுவே போதுமே.. போலீசார் ஒவ்வொரு விஷயத்தையும் மீண்டும் மீண்டும் கேட்கின்றனர். இதற்கிடையில் ஜாய் பிரியன்சியின் இன்ஸ்டா அக்கவுண்ட்டை செக் செய்திருக்கிறார்கள்.

அங்குதான் விஷயமே தெரிய வந்திருக்கிறது. அதாவது, ஜாய் தனது காதலன் ஜனகன் சிவாவுக்கு புதியதாக கேடிஎம் ஸ்போர்ட்ஸ் பைக்கை வாங்கி கொடுத்திருக்கிறார். அப்படி எனில், அதற்கான பணம் எங்கிருந்து வந்தது? போலீசாரின் கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை. விவசாரணையில் வேறு வழியின்றி ஜாய் உண்மையை ஒப்புக்கொண்டார். நகையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வந்து.. அதை பொள்ளாச்சி கடை வீதியில் உள்ள ஒரு நகைக்கடையில் விற்றிருக்கிறார். 9 சவரனின் மதிப்பு அதிகமாக இருக்கும் என்றாலும், வெறும் ரூ.2.5 லட்சத்திற்கு மட்டுமே அவர் விற்றிருக்கிறார். விசாரணையில் ஒவ்வொன்றாக தெரிய வந்திருக்கிறது.

மொத்த விஷயமும் வெளியில் வந்த நிலையில், ஜாய் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நகையை திருடவும், அதை விற்கவும் உடந்தையாக இருந்த காதலன் ஜனகன் சிவா மற்றும் அவரது 2 நண்பர்களையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தந்தையின் நண்பர் வீட்டில் நகையை திருடி, காதலனுக்கு இளம்பெண் ஒருவர் காஸ்ட்லி பைக் வாங்கி கொடுத்திருக்கும் சம்பவம், ஊரான் வீட்டு நெய்யே.. என்கிற பழமொழியை நினைவுபடுத்துவதாக பலரும் கூறி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+