கோவை கல்லூரி மாணவர்கள் வட மாநில தொழிலாளர்கள் மோதல்..பெற்றோர்கள் அச்சம் வேண்டாம்..முதல்வர் விளக்கம்
கல்லூரியில் இயல்பு நிலை திரும்பியுள்ளதாகவும் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை எனவும் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார்.
கோவை: வடமாநில தொழிலாளர்களுக்கும் மாணவர்களுக்கும் மோதல் எதுவுமில்லை எனவும் கல்லூரியில் இயல்பு நிலை நிலவுவதால் பெற்றோர்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். மொழி புரியாத காரணத்தால் மாணவர்கள் வட மாநில தொழிலாளர்களிடையே வாக்குவாதம் மட்டுமே ஏற்பட்டதாகவும் கல்லூரி முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
கோவையில் தனியார் கல்லூரி கேன்டீனுக்குள் நுழைந்து உருட்டுக்கட்டைகளுடன் வடமாநில தொழிலாளர்கள் தாக்கும் காட்சியும், மாணவ, மாணவிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடும் காட்சியும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கோவை மாவட்டம் சூலூரில் தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த கல்லூரி கேன்டீனில் தினமும் 700-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் உணவருந்தி வருகின்றனர். இந்த கேன்டீனில் 15க்கும் மேற்பட்ட வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். இந்த நிலையில், கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கும்,கேன்டீனில் பணிபுரியும் வடமாநில தொழிலாளர்களுக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
அப்போது வடமாநில தொழிலாளர்கள் உருட்டுக்கட்டைகளுடன் மாணவர்களைத் துரத்தி, துரத்தி தாக்கினர். இதனால் மாணவ, மாணவியர் கேன்டீனில் இருந்து அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகம் சூலூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸார், இருதரப்பினரையும் சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த தாக்குதல் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியது.
இதனிடையே இந்த மோதல் சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் ஒருவித அச்சத்தை ஏற்படுத்திய நிலையில் தனியார் கல்லூரி முதல்வர் விஜயன் விளக்கம் அளித்துள்ளார். கேன்டீனில் சிக்கன் பரிமாறிய போது மாணவர்கள் சிலர் அங்கு வேலை செய்யும் தொழிலாளர்களிடம் கேட்டதாகவும் மொழி புரியாத காரணத்தால் அது சண்டையாக மாறி விட்டது. இந்த சண்டையில் இரண்டு தொழிலாளர்களுக்கும், இரண்டு மாணவர்களுக்கும் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டுள்ளது. தற்போது கல்லூரியில் இயல்பு நிலை நிலவுவதால் பெற்றோர்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் கல்லூரி முதல்வர் விஜயன் தெரிவித்துள்ளார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications