கோயம்புத்தூர் பாப்பம்பட்டி மசாஜ் சென்டர்களில் உள்ள பெண்கள்.. இப்படியுமா நடக்குது.. பறந்த புகார்
கோவை: கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்துவருவதாக குற்றம்சாட்டும் கிராம மக்கள், நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மறியலில் ஈடுபட போவதாக எச்சரித்தனர்.
விபச்சாரம் என்பது இன்றைக்கு பல்வேறு பகுதிகளில் குடும்பமாக நடத்துகிறார்கள்.இன்னும் சிலர் ஒரு படி மேலே போய் வீடியோக்களை இணையதளங்களிலும் வெளியிட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். குடும்பமாக கூட சில பகுதிகளில் விபச்சாரம் செய்கிறார்கள். அதாவது குடும்ப பெண்களை போல் வாடகைக்கு வீடு எடுத்து விபச்சாரம் செய்வோரும் ஆங்காங்கே இருக்கிறார்கள். சென்னையில் கூட சில மாதங்கள் முன்பு குடும்பமாக விபச்சாரம் செய்த கும்பல் ஒன்று சிக்கியது. அதேபோல் அடுக்குமாடி குடியிருப்புகளில் விபச்சாரம் செய்த கும்பலும் ஆங்காங்கே சிக்கியது.

அதேபோல் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் செய்யும் கும்பல்கள் என்ணிக்கையும் அதிகமாக உள்ளது. ஏனெனில் மசாஜ் என்ற பெயரில் சில இடங்களில் விபச்சாரம் நடந்துள்ளது. அவர்களை போலீசார் கையும் களவுமாக கைது செய்துள்ளனர். அப்படித்தான் கோவை, பாப்பம்பட்டி, கண்ணம்பாளையம் பகுதிகளில் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் நடந்து வருவதாகவும், உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
கோவை பாப்பம்பட்டி பகுதியை சுற்றிலும் 9 மசாஜ் சென்டர்கள் இயங்கி வருவதாகவும், இதில் பணியாற்றக் கூடிய இளம் பெண்கள் சாலையில் நின்று அந்த வழியாக செல்லும் இளைஞர்களை கட்டாயப்படுத்தி விபச்சாரத்திற்கு அழைப்பதாகவும், பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து இந்த பகுதிகளில் கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டமும் இதனால் அதிகரித்து வருவதாக தெரிவிக்கும் அவர்கள், இதுபோன்ற சமூக விரோத செயல்களை உடனே தடை செய்ய வேண்டும் என்று ஊர் கூடி நேற்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்தனர். எங்களின் கோரிக்கை நிறைவேறவில்லை என்றால் பொதுமக்களை திரட்டி சாலை மறியல் போராட்டம் நடத்த உள்ளதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications