கோவையில் சொந்த வீடு வச்சிருக்கீங்களா?.. மாநகராட்சியின் அசத்தல் அறிவிப்பு.. நோட் பண்ணுங்க
கோவை: கோவை மாநகராட்சிப் பகுதியில் சொந்த வீடு வைத்திருக்கும் மக்கள் தங்கள் பகுதிகளிலேயே சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி உள்ளிட்ட வரிகளை செலுத்தும் வகையில் சிறப்பு முகாம் இன்று, நாளை (பிப்ரவரி 22, 23) பல்வேறு பகுதிகளில் நடைபெறவுள்ளது. எந்தெந்த பகுதிகளில் எல்லாம் நடைபெறவுள்ளது என்பது குறித்து பார்க்கலாம்.
கோவை மாநகராட்சிக்கு வருவாய் வழங்குவதில் முக்கியப் பங்கு வகிப்பது சொத்துவரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம் மற்றும் வரியில்லா இனங்கள் உள்ளிட்ட வரிகள்தான். இந்த வரிகள் மூலமாகத்தான் கோவை மாநகராட்சிக்குத் தேவையான அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில், சொத்து வரி ஆறு மாதத்துக்கு ஒருமுறையும், குடிநீர் கட்டணம் இரு மாதத்துக்கு ஒருமுறையும் வசூலிக்கப்படுகிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடப்பு 2024-25 ஆம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான கோயம்புத்தூர் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர் கட்டணம் முதலிய அனைத்து வரியினங்களை பொதுமக்கள் செலுத்துவதற்கு ஏதுவாக சிறப்பு வரிவசூல் முகாம் அனைத்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுகிழமைகளில் (அரசு விடுமுறை நாட்கள் நீங்கலாக) நடைபெற்று வருகிறது.
மேலும், அனைத்து மண்டல வரிவசூல் மையங்கள் மற்றும் சிறப்பு வரிவசூல் முகாம்கள் பிப்ரவரி 22, 23 ஆகிய தேதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்.
சிறப்பு வரிவசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்:- வார்டு எண் 5க்கு டவுன் & சிட்டி அப்பார்ட்மெண்ட், வளியாம் பாளையம்., வார்டு எண் 6க்கு திருமுருகன் நகர் விநாயகர் கோவில் வீரியம்பாளையம் ரோடு, வார்டு எண் 51க்கு ஆர்.ஆர் தர்ஷன் அப்பார்ட்மென்ட் (R.R.Dharshan Apartment) (GV Residency), வார்டு எண் 56க்கு
சுங்கம் மைதானம். ஒண்டிப்புதூரிலும் முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 57 & 58க்கு மாநகராட்சி ஆரம்பப் பள்ளி, நெசவாளர் காலனி மாநகராட்சி நடுநிலைப்பள்ளி பொங்காளியூர், வீரகேரளத்திலம் (22-02-2025 சனிக்கிழமை மட்டும்), வார்டு எண் 33க்கு மூவர் நகர் நூலகம், கவுண்டம் பாளையத்திலும் (23.022025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 75க்கு மாரியம்மன் கோவில் மைதானம், சீரநாயக்கன்பாளையத்திலும் முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 16க்கு லூனா நகர், டி.வி.எஸ் நகர், சரவணா நகரிலும் (Mobile Camp), வார்டு எண் 15க்கு அங்கன்வாடி மையம், சுப்பிரமணியம் பாளையத்திலும், வார்டு எண் 19க்கு அம்மா உணவகம். மணியகாரம்பாளையத்திலும், வார்டு எண் 25க்கு அரசு உயர் நிலை பள்ளி, அரசு உயர் நிலை பள்ளி, காந்திமாநகரிலும் (Govt.High.school), வார்டு எண் 28க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office),காமதேனு நகரிலும் நடைபெறவுள்ளது.
வார்டு எண் 11க்கு மாநகராட்சி ஆரம்பப்பள்ளி, ஜனதா நகரிலும், வார்டு எண் 87க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), குனியமுத்தூரிலும், வார்டு எண் 89க்கு சுகாதார ஆய்வாளர் அலுவலகம் (SI Ward office), சுண்டாக்காமுத்தூரிலும், வார்டு எண் 88க்கு மாநகராட்சி பள்ளி, ரைஸ் மில் ரோடு, குனியமுத்தூரிலும் (22-02-2025 சனிக்கிழமை மட்டும்) முகாம் நடைபெறுகிறது.
வார்டு எண் 97க்ரு ஹவுசிங் யூனிட் பேஸ்-2, பிள்ளையார்புரம் (23.02.2025 ஞாயிற்றுக்கிழமை மட்டும்), வார்டு எண் 32க்கு சிறுவர் பூங்கா, நாராயணசாமி வீதி, சங்கனூரிலும், வார்டு எண் 63க்கு பெருமாள் கோவில் வீதி, நியூ கலெக்ஷன் சென்டரிலும், வார்டு எண் 80க்கு ஒக்கிலியர் காலனி ஸ்கூல், கெம்பட்டி காலனியிலும் முகாம் நடைபெறவுள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வரிவசூல் மையங்கள் மற்றும் மேற்கண்ட சிறப்பு வரிவசூல் முகாம்களும் சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 22, 23) ஆகிய இரண்டு நாட்களிலும் வழக்கம்போல காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை செயல்படும். எனவே, பொதுமக்கள் இவ்வசதியைப் பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியினங்களை செலுத்துமாறு மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications