2 மகிழ்ச்சி.. "நம்ம கோவை சிட்டிசன் செயலி".. கோயம்புத்தூருக்கு சூப்பர் வசதி! கோவை மாநகராட்சி கலக்குது
கோவை: கோவை மாநகராட்சி தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டின் மூலமும், மக்களின் கவனத்தை பெற்று வருகிறது.. தொழில் துறையில் வேகமாக வளர்ந்து வரும் கோவையில், பொதுமக்களின் பயன்பாட்டுக்காக புதிய வசதியை, மாநகராட்சி கொண்டுவர முடிவு செய்துள்ளது. அது என்ன தெரியுமா?
கோவை மாநகராட்சியை பொறுத்தவரை, ஏராளமான திட்டங்களை முன்வைத்து சிறப்பாக செயல்பட்டு வருகிறது.. எனவேதான், சிறந்த மாநகராட்சியாக கோவை மாநகராட்சி, சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டது...

முதலிடத்தை பிடித்த கோவை மாநகராட்சி நிர்வாகத்துக்கு, சுதந்திர தினவிழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் சிறப்பு விருதையும் வழங்கியிருந்தார். 50 லட்சம் ரூபாய் பரிசும் கிடைத்திருந்தது.
கோவை மாநகராட்சி: அதேபோல,2024-ம் ஆண்டுக்கான கொடி நாள் வசூலில் கோவை மாநகராட்சி ரூ.74 லட்சம் வசூல் செய்து, மாநில அளவில் நிர்ணயித்த இலக்கை தாண்டியிருந்தது. இதன்மூலம், மாநில அரசின் விருதுக்கு, கோவை மாநகராட்சி தேர்வாகியுள்ளது. நாளை குடியரசு தினத்தன்று சென்னையில் கவர்னர் மாளிகையில் நடைபெறும் விழாவில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, இந்த விருதை வழங்குகிறார். முந்தைய ஆண்டும், கொடிநாள் வசூலில் கோவை மாநகராட்சியே முதலிடம் பெற்று, விருது வாங்கியிருந்தது.
இதுபோல பல்வேறு அதிரடிகள் மூலம் கோவை மாநகராட்சி பலரது கவனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், கோவை மாநகராட்சி சார்பில், "நம்ம கோவை சிட்டிசன் செயலி" அறிமுகப்படுத்தப்படுகிறது.
சிட்டிசன் செயலி: "சிட்டிசன் செயலி" என்பது பொதுமக்கள் வசிக்கும் பகுதியை மேம்படுத்துவதற்காக பயன்படுத்தப்படும் செல்போன் ஆப் ஆகும்.. இந்த செயலி மூலம் பொதுமக்கள், தங்களது அடிப்படை பிரச்சனைகள் குறித்து புகார் அளிக்கலாம்.. இந்த புகார்கள் உடனடியாக பதிவு செய்யப்பட்டுவிடும். பிறகு பதிவு செய்யப்பட்ட புகார்கள் நேரடியாகவே அதிகாரிகள் கவனத்துக்கு சென்று, அவைகள் சரி செய்யப்படும்.
அதேபோல, தாங்கள் வசிக்குமிடத்தில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த தகவல்களையும் பெறலாம். தன்னார்வலர்கள் நகர மேம்பாட்டுக்கு, தங்களை ஈடுபடுத்திக் கொள்ளவும் இந்த செயலியில் ஆபஷன்கள் உள்ளது.
சொத்துவரி: அதேபோல, சொத்து வரி, பிறப்பு - இறப்பு பதிவு போன்ற வெப்சைட்களின் லிங்க்குகளும் இந்த செயலியில் இருக்கும்.. இதனை தேவைப்படுவோர் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.. அதேபோல, பஸ் ஸ்டாண்ட்டுகள், ரயில்வே ஸ்டேஷன், பூங்காக்கள், பள்ளிகள், போலீஸ் ஸ்டேஷன்கள், தீயணைப்பு நிலையங்கள் பற்றிய தகவல்களை பெறலாம்.
கலையரங்கம், சமுதாய நல கூடங்கள் மற்றும் திருமண மண்டபங்களை இணைய வழி மூலமாக முன்பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படும். சுற்றுலா பற்றின தகவல்களும் இந்த , "நம்ம கோவை சிட்டிசன் செயலி"யில் உள்ளன.
இத்தனை வசதியுள்ள, இந்த செயலி விரைவில் அறிமுகமாகப்போகிறதாம். , "நம்ம கோவை சிட்டிசன் செயலி" நடைமுறைக்கு வரும்பட்சத்தில், கோவை மக்களின் குறைகள் தீர்வதுடன், மாவட்டத்தின் வளர்ச்சியும் இதன்மூலம் உயரும் என்று நம்பப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு!












Click it and Unblock the Notifications