கோவை மக்களே செம்மொழி பூங்காவை விடுங்க.. சூப்பரான ஸ்பாட்டில் பிரமாண்டமாக அமையும் மூங்கில் பூங்கா

Subscribe to Oneindia Tamil

கோவை: தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக கோவை வேகமாக முன்னேறி வருகிறது. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் நகரம் என்று பெயரெடுத்த கோவை நாட்டின் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் உள்ளது. ஆனால் பொழுதுபோக்கு அம்சம் மிகவும் குறைவாகவே உள்ளது. சமீபத்தில் காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. இந்நிலையில் மாநகரின் மற்றொரு மைய பகுதியில் பிரம்மாண்டமாக மூங்கில் பூங்கா அமைக்கும் பணி நடந்து வருகிறது.

கோவை மாவட்டம் கல்வி, தொழில், மருத்துவம் ஆகியவற்றில் பெரிய வளர்ச்சியை எட்டி வருகிறது. இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதி மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. ஏற்கனவே கோவையின் பல்வேறு பகுதிகளில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. விமான நிலையம் ரயில் நிலையம் மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. நீண்ட காலமாக மெட்ரோ ரயில் திட்டமும் காத்திருப்பில் உள்ளது.

coimbatore-corporation-constructing-bamboo-park-in-sihs-colony

கோவை பொழுதுபோக்கு அம்சம்

விளையாட்டு துறையிலும் கோவை முன்னேற்றமடைந்து கொண்டிருக்கிறது. தடகளம், ஹாக்கி, கிரிக்கெட் உள்ளிட்ட பல விளையாட்டுகளில் தேசியளவிலும், சர்வதேசளவிலும் தடம் பதித்து கொண்டிருக்கிறது. ஆர்எஸ்புரம் பகுதியில் சமீபத்தில் சர்வதேச ஹாக்கி மைதானம் திறக்கப்பட்டது. இதேபோல ஒண்டிப்புதூர் பகுதியில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து மக்கள் கோவைக்கு குடிபெயர்ந்து வருகிறார்கள். இதற்கு கோவை கிளைமேட் முக்கிய காரணமாக இருந்தாலும் பொழுதுபோக்கு அம்சம் குறைவாக உள்ளது. கோவை காந்திபுரம் பகுதியில் இருந்த வ.உ.சி உயிரியல் பூங்கா மூடப்பட்டுவிட்டது. நகரப் பகுதிகளில் ஆங்காங்கே குளங்களை ஒட்டியுள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காக்கள், ஷாப்பிங் மால்கள், தியேட்டர்கள் தான் கோவை மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களாக உள்ளன.

வருகிறது மூங்கில் பூங்கா

சமீபத்தில் காந்திபுரம் பகுதியில் செம்மொழி பூங்கா திறக்கப்பட்டது. சுமார் 40 ஏக்கர் பரப்பளவில் ரூ.200 கோடி மதிப்பில் திறக்கப்பட்டுள்ள இந்த பூங்காவுக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மாநகரின் மையப் பகுதியில் இருப்பது கூடுதல் வசதியாகவுள்ளது. வார இறுதி மற்றும் விடுமுறை நாட்களின் அங்கு மக்கள் கூட்டம் அதிகமாக உள்ளது. விடுமுறை நாட்களில் சராசரியாக 30,000 மக்கள் செம்மொழி பூங்கா செல்கிறார்கள்.

இந்நிலையில் சிங்காநல்லூர் அருகே எஸ்.ஐ.எச்.எஸ் காவிரிநகர் பகுதியில் கோவை மாநகராட்சி நிர்வாகம் சார்பில் மூங்கில் பூங்கா அமைத்து வருகிறது. 4.5 ஏக்கர் பரப்பளவில் ரூ.2 கோடி மதிப்பில் மூங்கில் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது. 4.5 ஏக்கர் பரப்பளவில் 10 வகையான 2,000க்கும் மேற்பட்ட மூங்கில் மரங்கள் வைக்கப்படவுள்ளன. மேலும் பல மூலிகை மரம், செடிகள் வைக்கப்படவுள்ளன.

பிப்ரவரியில் திறப்பு

சிறுவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், நடைபயிற்சி தளம், இருக்கை வசதி, குடிநீர், கழிப்பறை வசதி அமைக்கப்படவுள்ளது. திருப்பூரில் உள்ள மூங்கில் பூங்கா அடிப்படையில் இந்த பூங்காவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வருகிற பிப்ரவரி மாத இறுதிக்குள் பணிகளை நிறைவு செய்து, மூங்கில் பூங்காவை திறப்பதற்கு மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+