கோவை கவுண்டம்பாளையத்தில் வரப்போகும் சூப்பர் திட்டம்.. மாற்றுத் திறனாளிகளுக்கு குட்நியூஸ்
கோவை: கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு வளாகத்தில் கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 15 கோடியில் பாராலிம்பிக் ஸ்டேடியம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்துக்கு நிர்வாக அனுமதி கோரி தமிழக அரசுக்கு கருத்துருவும் அனுப்பப்பட்டுள்ளது.
சென்னைக்கு அடுத்தபடியாக பெரிய மாவட்டமாக கோவை மாவட்டம் உள்ளது. ஐடி நிறுவனங்கள், கல்வி, மருத்துவம், தொழில், வேலைவாய்ப்பு என பல்வேறு தேவைகளுக்காக பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் இங்கு வசித்து வருகின்றனர். அடுத்தடுத்து பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதேபோல, ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என முன்னணி நிறுவனங்களும் கோவை மாவட்டத்திலேயே முதலீடுகளைச் செய்து வருகின்றனர். கோவை மாநகராட்சி சார்பில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவை மாநகராட்சி சார்பில் ரூ. 15 கோடியில் கவுண்டம்பாளையத்தில் பாராலிம் பிக் ஸ்டேடியம் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நிர்வாக அனுமதி
கோவை - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள கவுண்டம்பாளையம் ஜீவா நகர் பிரதான சாலையில் பழைய குப்பைக் கிடங்கு வளாகத்தில் ரூ. 15 கோடியில் பாராலிம்பிக் ஸ்டேடியம் அமைக்க மாநகராட்சி திட்ட அறிக்கை தயாரித்துள்ளது. இந்த அறிக்கையை நிர்வாக அனுமதி கோரி தமிழ்நாடு நகராட்சிகளின் நிர்வாக இயக்குநரகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
வரப்போகும் வசதிகள்
இதுகுறித்து, கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறியுள்ளதாவது: இந்த பாராலிம்பிக் ஸ்டேடியம் தரைத்தளம், முதல் தளம், மாடி என மூன்று தளங்களாகப் பிரிக்கப்பட்டு 43 ஆயிரத்து 380 சதுரடியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தில் பல்வேறு வசதிகளும் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. தேநீர் அருந்துவதற்கான கஃபே அமைக்கப்படவுள்ளது. வரவேற்பறை, மேலாளர், கருத்தரங்கு அறைகள், லாக்கர் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
லிப்ட் வசதி, ரேம்ப்
மேலும், டென்னிஸ் விளையாடுவதற்கான மைதானம், மாற்றுத் திறனாளிகள் அனைவரும் பயன்படுத்தும் வகையில் கழிப்பறை வசதி மேற்கொள்ளப்படவுள்ளது. அதேபோல அமர்ந்தபடி வாலிபால் விளையாடுதற்கான மைதானம், உடற்பயிற்சிக் கூடம், யோகா செய்வதற்கென்ற தனியறை, மருத்துவ அறை, ரேம்ப் மற்றும் லிப்ட் வசதி போன்றவை மேற்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications