முதலமைச்சர் விஜய் வசமுள்ள உள்ளாட்சித்துறையில் லஞ்சம்.. கையும் களவுமாக சிக்கிய கோவை பெண் ஊழியர்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சியமைத்து 4 மாதங்கள் ஆகப்போகிறது. தேர்தல் பிரச்சாரம் தொடங்கி சட்டமன்றத்தில் நடைபெற்று வரும் மானிய கோரிக்கை வரை, திமுக மீது பல்வேறு ஊழல் புகார்களை தவெக கூறி வருகிறது. முதலமைச்சர் விஜய் வசமுள்ள உள்ளாட்சித்துறையிலேயே லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கோவை மாநகராட்சியில் காலி இடத்திற்கு வரி விதிக்க ரூ.40,000 கேட்ட பெண் பில் கலெக்டரை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாகப் பிடித்த கைது செய்தனர்.

தமிழகத்தில் அரை நூற்றாண்டுக்கு பிறகு திராவிட கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. கட்சி ஆரம்பித்த 2 வருடங்களிலேயே இரு பெரும் திராவிட கட்சிகளை வீழ்த்தி தவெக ஆட்சியமைத்தது. தேர்தல் பிரச்சாரத்தில் தவெக பல்வேறு வாக்குறுதிகளையும், திமுக அதிமுக மீது பல்வேறு குற்றச்சாட்டுகளையும் வைத்தனர். அதில் முதன்மையானது லஞ்சம், ஊழல். தவெக ஆட்சியமைத்தவுடன் லஞ்சம், ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவோம் என்று முதலமைச்சர் விஜய் கூறினார்.

coimbatore-corporation-woman-staff-arrested-for-getting-bribe

காலியிடத்துக்கு லஞ்சம்

உள்ளாட்சித்துறை முதலமைச்சர் விஜய்யின் நேரடி கட்டுப்பாட்டில் உள்ளது. மக்களின் அன்றாட அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் துறை. கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் உள்ளாட்சித்துறையில் கவுன்சிலர்கள், அதிகாரிகள் மீது ஏராளமான ஊழல் முறைகேடு புகார் வெடித்தது. அதனால் தான் உள்ளாட்சித்துறையை விஜய் தன்னுடைய நேரடி கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். ஆனால் ஆட்சி மாறினாலும் காட்சி மாறவில்லை என்பதற்கு முதலமைச்சர் வசமுள்ள உள்ளாட்சித்துறையே சாட்சி.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ். இவர் அந்த பகுதியில் 39 சென்ட் நிலத்தை குத்தகைக்கு எடுத்து தியேட்டர் கட்ட முடிவு செய்தார். காலியிட வரிக்காக மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் விண்ணபித்துள்ளார். பில் கலெக்டர் யமுனா தேவி என்பவர் அந்த காலியிடத்தை ஆய்வு செய்தார். சில நாட்களாகியும் எந்த பதிலும் இல்லை. இதுகுறித்து பிரகாஷ் யமுனா தேவியை நேரில் சந்தித்து கேட்டுள்ளார்.

சிக்கிய பெண் ஊழியர்

அதற்கு யமுனா தேவி, "உங்கள் ஆவணத்தை உயரதிகாரிகளின் அப்ரூவலுக்கு அனுப்ப வேண்டும் என்றால் ரூ.40,000 லஞ்சம் தர வேண்டும்" என்று நேரடியாக கேட்டுள்ளார். பிரகாஷ்க்கு லஞ்சம் கொடுப்பதில் உடன்பாடு இல்லை. அதனால் கோவை மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரின் ஆலோசனைப்படி, ரசாயனம் தடவிய பணத்தை பிரகாஷ் எடுத்து சென்றுள்ளார். சுந்தராபுரத்தில் உள்ள ஒரு பேக்கரியில் அமர்ந்து பிரகாஷிடம் இருந்து ரூ. 40,000 லஞ்ச பணத்தை யமுனாதேவி வாங்கியுள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். 6 மணி நேர விசாரணைக்கு பிறகு அவர் சிறையில் அடைக்கப்பட்டார். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. யமுனா தேவிக்கு வயது 59. இவர் இந்த வருட இறுதியில் பணி ஓய்வு பெறவுள்ளார். சுதந்திர தினவிழா கொண்டாட்டத்தில் அவருக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்டிருப்பது மாநகராட்சி ஊழியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+