அர்ஜுன் சம்பத் மகன் ஓம்கார் பாலாஜிக்கு 14 நாட்கள் நீதிமன்றக் காவல்.. கோவை நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
கோவை: பத்திரிகையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத்தின் மகன் ஒம்கார் பாலாஜியை வரும் 28 ஆம் தேதி வரை, 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையில் நேற்று கைது செய்யப்பட்ட இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவர் ஓம்கார் பாலாஜி கோவை அழைத்துச் செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின் கோவை குற்றவியல் நீதிமன்றத்தில் ஓம்கார் பாலாஜியை போலீசார் ஆஜர்படுத்தினர். ஓம்கார் பாலாஜியை 28 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க கோவை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவையில் உள்ள ஈஷா மையம் குறித்தும், அந்த மையத்தின் நிறுவனர் ஜக்கி வாசுதேவ் குறித்தும் நக்கீரன் இதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வருகிறது. இதனால், ஈஷா யோகா மையத்திற்கு ஆதரவாக கடந்த அக்டோபர் 27ஆம் தேதி கோவையில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தலைமை வகித்த இந்த ஆர்ப்பாட்டத்தில், அர்ஜூன் சம்பத்தின் மகனும், இந்து மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவருமான ஓம்கார் பாலாஜி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது ஓம்கார் பாலாஜி, நக்கீரன் இதழ் குறித்தும், நக்கீரன் ஆசிரியர் குறித்தும் ஆவேசமாகப் பேசியிருந்தார். நக்கீரன் கோபாலின் நாக்கை அறுத்துவிடுவேன் என்றெல்லாம் ஓம்கார் பாலாஜி பேசி இருந்த நிலையில், அவரது பேச்சுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். இதனை தொடர்ந்து, திமுக பிரமுகர் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில், ஓம்கார் பாலாஜி மீது கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே தன் மீதான வழக்கில் முன் ஜாமீன் கேட்டு ஓம்கார் பாலாஜி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜெகதீஸ் சந்திரா, வழக்கு தொடர்பாக நேரில் ஆஜராகி மன்னிப்பு கோரி மனு தாக்கல் செய்யுமாறு ஓம்கார் பாலாஜிக்கு உத்தரவிட்டிருந்தார். அதன்படி, ஓம்கார் பாலாஜி, புதன்கிழமை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி, நீதிமன்ற உத்தரவுப்படி மன்னிப்பு கேட்டு மனுத்தாக்கல் செய்வதாக தெரிவித்தார்.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, 'உயர்நீதிமன்ற உத்தரவுப்படி என்று இல்லாமல் தாமாக முன்வந்து மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்பதாக தான் மனுத்தாக்கல் செய்ய வேண்டும்' எனத் தெரிவித்தார். மேலும், இந்த வழக்கில் எந்தவொரு இடைக்கால உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என்று கூறி, இந்த வழக்கின் விசாரணையை வரும் 19ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார். இதையடுத்து ஐகோர்ட் வளாகத்திலேயே ஓம்கார் பாலாஜி கோவை போலீசாரால், கைது செய்யப்பட்டு கோவைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து இன்று கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது இந்த வழக்கை விசாரித்த கோவை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அருண்குமார், இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி தலைவரும், அர்ஜுன் சம்பத்தின் மகனுமான ஓம்கார் பாலாஜியை 14 நாட்களுக்கு அதாவது வரும் 28 ஆம் தேதி வரை, நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து, சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் ஓம்கார் பாலாஜி.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications