SIR.. வீடு வீடாக வரும் அதிகாரிகள்.. யாருடைய பெயரெல்லாம் நீக்கப்படும்.. விவரம்
கோவை : கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணியின் ஒரு பகுதியாக, மூன்று முக்கியமான பிரிவுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களைப் பட்டியலில் இருந்து நீக்குவதற்கு மாவட்ட ஆட்சியர் தாசில்தார்களுக்கு அதிகாரம் அளித்துள்ளார்.
வாக்காளர் பட்டியலை திருத்தும் பணி
கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் சேர்த்து சுமார் 32.25 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் உள்ளனர். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில், வாக்குச் சாவடி அலுவலர்கள் நவம்பர் 4-ஆம் தேதி முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரை வீடு வீடாகச் சென்று வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நீக்கப்பட உள்ள வாக்காளர்களின் பிரிவுகள்
வாக்குச் சாவடி அலுவலர்கள் வீடு வீடாகச் சென்று சேகரிக்கும் தகவல்கள் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில், மூன்று பிரிவுகளில் வரும் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளன:
பூட்டிக் கிடக்கும் வீடுகளின் முகவரியில் உள்ளவர்கள்:
வாக்குச் சாவடி அலுவலர்கள் மூன்று முறை சென்றும் பூட்டியே கிடந்த வீடுகள் கணக்கிடப்பட்டுள்ளன.
இந்த வீடுகளைப் பார்வையிட்டதற்கான ஆதாரங்களை (புகைப்படம், அருகில் உள்ளவர்கள் மற்றும் கட்சிப் பிரதிநிதிகளின் கையெழுத்துகள்) அலுவலர்கள் சேகரித்துள்ளனர்.
இறந்தவர்கள்:
காலமான வாக்காளர்களின் உறவினர்களிடம் இருந்து இறப்புச் சான்றிதழ் நகல் அல்லது வேறு ஏதேனும் ஆதாரம் பெறப்பட்டுள்ளது.
ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பெயர் உள்ளவர்கள்:
ஒரு வாக்காளர் இரண்டு முகவரிகளில் அல்லது ஒரே முகவரியில் இரண்டு வெவ்வேறு வாக்குச் சாவடிகளில் வாக்களிக்கப் பெயர் வைத்திருந்தால், அவரது வாக்காளர் அடையாள அட்டை மற்றும் புகைப்பட நகல் ஆதாரம் சேகரிக்கப்பட்டுள்ளது.
நீக்குவதற்கான சிறப்பு அதிகாரம்
- மேற்கண்ட மூன்று பிரிவுகளில் உள்ள வாக்காளர்களின் பெயர்களை நீக்குவதற்காக, கோவை மாவட்ட ஆட்சியர் 10 சிறப்பு தாசில்தார்களை நியமித்து அதிகாரம் வழங்கியுள்ளார்.
- மாநிலத்திலேயே இரண்டாவது பெரிய தொகுதியான கவுண்டம்பாளையம் தொகுதிக்கு மட்டும் இரண்டு சிறப்பு தாசில்தார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- நியமிக்கப்பட்ட சிறப்பு தாசில்தார்கள், தேர்தல் நடத்தும் அலுவலர், உதவி அலுவலர் மற்றும் தொகுதிக்கு நியமிக்கப்பட்ட வருவாய் அலுவலர் ஆகியோரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே வாக்காளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்பட்டு நீக்கப்படும்.
- இந்த அதிரடி நடவடிக்கை, வாக்காளர் பட்டியலை பிழையின்றி, மிகவும் துல்லியமாகப் பராமரிக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications