Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை டிஐஜி விஜயகுமார் தற்கொலை.. பல ஆண்டுகால மன அழுத்தம்.. அரசியலாக்காதீர்கள்.. ஏடிஜிபி அருண் தகவல்

Subscribe to Oneindia Tamil

கோவை: மன அழுத்தம் காரணமாகவே கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக ஏடிஜிபி அருண் கூறியுள்ளார். அவருக்கு பணிச்சுமையோ குடும்பத்தில் பிரச்சினையோ இல்லை என்றும் விஜயகுமாரின் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஏடிஜிபி அருண் கேட்டுக்கொண்டுள்ளார்.

கோவை சரக டி.ஐ.ஜியாக பணியாற்றி வந்த விஜயகுமார் ஐ.பி.எஸ் இன்று காலை 6.45 மணியளவில் வழக்கம் போல டிஐஜி விஜயகுமார் நடைபயிற்சி மேற்கொண்டு பின்னர் கேம்ப் அலுவலகத்திற்கு வந்துள்ளார். அதன் பிறகு தனது பாதுகாப்பு அதிகாரியிடம் துப்பாக்கியை பெற்றுக்கொண்டு அவரது அறைக்கு சென்ற விஜயகுமார் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

Coimbatore DIG Vijayakumar committed suicide due to stress says ADGP Arun

2009 பேட்ச் ஐ.பி.எஸ் அதிகாரியான விஜயகுமார் காஞ்சிபுரம், கடலூர், நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி உள்ளார். நேர்மையான அதிகாரி என பெயர் பெற்றுள்ள விஜயகுமார் குறிப்பாக சிபிசிஐடி எஸ்.பியாக இருந்த போது தமிழகத்தை உலுக்கிய சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் கொலை வழக்கை விசாரிக்கும் அதிகாரியாக நியமிக்கப்பட்டார். மேலும் சுரானா வழக்கில் சிபி.ஐ வசம் இருந்த 103 கிலோ தங்க நகைகள் மாயமான விவகாரத்திலும் விசாரணை அதிகாரியாக விஜயகுமார் செயல்பட்டார்.

அதன் பின்னர் அண்ணா நகர் துணை ஆணையராக பணியாற்றிய போது அரும்பாக்கத்தில் பட்டப்பகலில் பெட் வங்கியில் நடந்த 20 கோடி மதிப்பிலான தங்க நகைகள் கொள்ளை வழக்கை திறம்பட கையாண்டு ஒரே நாளில் குற்றவாளியை கைது செய்து பாராட்டை பெற்றார்.

கடந்த ஜனவரி மாதம் டி.ஐ.ஜியாக பதவி உயர்வு பெற்ற விஜயகுமார் கோவை சரக டி.ஐ.ஜியாக நியமிக்கப்பட்டு பணிப்புரிந்து வந்துள்ளார். குறிப்பாக கடந்த சில நாட்களாக டி.ஐ.ஜி விஜயகுமார் மன அழுத்தத்தில் இருந்து வந்ததால் உயரதிகாரிகள் மூலம் அவருக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டு வந்ததாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்கள் விஜயகுமாருடன் கடந்த மூன்று நாட்களாக இருந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

விஐயகுமாரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை அளித்துள்ளது. ஆளுநர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் விஜயகுமாரின் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தனது அறிக்கையில் விஜயகுமாருக்கு மரணத்திற்கு விசாரணை தேவை என்று தெரிவித்துள்ளார். எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

இதனிடையே விஜயகுமாரின் மரணம் குறித்து பேசிய டிஜிபி சங்கர் ஜிவால், 'மன உளைச்சலில் இருந்த விஜயகுமாருக்கு சில நாட்கள் விடுமுறையும் வழங்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக தூக்கமில்லாமல் மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார் என்று தெரிவித்தார். டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்கு பணிச்சுமை காரணம் அல்ல. ஒரு நேர்மையான அதிகாரியை காவல்துறை இழந்துள்ளது என்று விளக்கமளித்துள்ளார். இதனிடையே விஜயகுமார் மரணம் குறித்து நேரில் சென்று விசாரிக்க சட்டம் ஒழுங்கு ஏடி.ஜிபி அருண் கோவைக்கு வந்துள்ளார்.

விஜயகுமாரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய ஏடிஜிபி அருண், டிஐஜி விஜயகுமார் தற்கொலைக்குக் காரணம் மன அழுத்த பிரச்சினைதான். கடந்த சில ஆண்டுகாலமாகவே அவர் மன அழுத்த பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக விஐயகுமார் சிகிச்சையையும் பெற்று வந்தார்.
மன அழுத்தம் வேறு மன உளைச்சல் வேறு என்று கூறிய ஏடிஜிபி, குடும்பத்திலோ, பணியிலோ அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. அருமையான குடும்பம். பணியில் திறம்பட செயல்பட்டார். காவல்துறையினருக்கு முன் உதாரணமாக திகழ்ந்தவர்.

2 ஆண்டுகாலமாக அவர் மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்தார். அவருடைய மருத்துவரிடமும் விசாரணை நடத்தியுள்ளோம். டிஐஜி விஜயகுமார் யாரும் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். விஐயகுமாருக்கு எந்த மாதிரியான மன அழுத்தம் இருந்தது என்று மருத்துவர்களிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம் என்றும் அருண் தெரிவித்தார். எஸ்.பி, காவல்துறை உயரதிகாரிகளிடம் தனது மன அழுத்த பிரச்சினையை கூறி ஆலோசனை பெற்றுள்ளார் எனவே விஜயகுமாருக்கு மன அழுத்த பிரச்சினை இருந்தது உறுதியாகியுள்ளது.

காவல்துறையில் திறம்பட பணியாற்றியவர். ஐபிஎஸ் அதிகாரியாக ஆவதற்கு முன்பே காவல்துறையில் பணியாற்றியுள்ளார். குடும்பத்திலோ, பணியிலோ அவருக்கு எந்த பிரச்சினையும் இல்லை. எந்த மாதிரியான மன அழுத்தம், எதனால் ஏற்பட்டது என்று மருத்துவர்களிடம் கேட்டு வருகிறோம் எனவே விஐயகுமார் மரணத்தை அரசியலாக்க வேண்டாம் என்றும் ஏடிஜிபி அருண் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாரின் உடல் பிரோத பரிசோதனைக்குப் பிறகு அஞ்சலிக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அஞ்சலிக்குப்பிறகு சொந்த ஊரான தேனியில் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+