தாமரை இலை மேல் தண்ணீர் போல்! நான் தற்காலிகம் தான்! கோவையில் ஒட்டி ஒட்டாமல் அமைச்சர் முத்துசாமி!
கோவை: கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக உள்ள அமைச்சர் முத்துசாமி அம்மாவட்ட திமுகவின் உட்கட்சி பஞ்சாயத்துகளில் தலையிடுவதை முற்றிலும் தவிர்த்து வருகிறார்.
''நான் தற்காலிகம் தான்.. விரைவில் செந்தில்பாலாஜி வந்துவிடுவார்'' என்று தான் தன்னை கோவைக்கு பொறுப்பு அமைச்சராக நியமனம் செய்யப்பட்ட நாள் முதல் அங்குள்ள கட்சிக்காரர்களிடம் கூறி வருகிறார் முத்துசாமி. தாம் இறங்கி ஆட வேண்டிய மைதானத்தை எதற்காக ஒதுங்கியே நின்று அமைச்சர் முத்துசாமி வேடிக்கை பார்க்கிறார் எனத் தெரியாமல் கோவை மாவட்ட திமுகவினர் புலம்ப ஆரம்பித்துள்ளனர்.

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக செந்தில்பாலாஜி இருந்தவரை அங்குள்ள கட்சியினர் மத்தியில் சிறிய சலசலப்பு கூட ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டார். செந்தில்பாலாஜிக்கு கட்சித் தலைமையிடம் இருந்த செல்வாக்கை கண்ட கோவை மாவட்ட திமுகவினரும் செந்தில்பாலாஜியை பகைத்துக் கொள்ளாத படி நடந்துக்கொண்டனர். செந்தில்பாலாஜி மீதிருந்த மரியாதை என்று இதை சொல்ல முடியாது, தலைமைக்கு அவர் நெருக்கம் என்ற ஒரே காரணத்தால் பலரும் அமைதி காத்து வந்தார்கள். அவர் சிறைக்கு சென்று 6 மாதங்கள் ஆகும் நிலையில் கோவை மாவட்ட திமுகவில் மீண்டும் கோஷ்டிப்பூசல் தலைதூக்கியுள்ளது.
இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய வேண்டிய பொறுப்பு கோவை மாவட்ட இன்சார்ஜ் அமைச்சரான முத்துசாமிக்கு தான் உண்டு. அவரோ தன்னை தலைமை தற்காலிகமாக தான் கோவைக்கு அனுப்பி வைத்திருப்பதாக சொல்லி கட்சி பஞ்சாயத்துகளில் தலையிடுவதில்லை. கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளராக உள்ள தொண்டாமுத்தூர் ரவி பேச்சையும், தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருக்கும் தளபதி முருகேசன் பேச்சையும் கட்சி நிர்வாகிகள் கேட்பது போல் தெரியவில்லை.
அதே போல் தான் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் சிங்காநல்லூர் கார்த்திக்குடனும் சிலர் மல்லுக்கட்டி வருகின்றனர். மூத்த அமைச்சரான முத்துசாமியை பொறுத்தவரை சற்று பொறுமையானவர். இதனால் இவரிடம் முறையிடுவதை காட்டிலும் திமுக துணை பொதுச்செயலாளரும், நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசாவிடம் பஞ்சாயத்துக்களை கொண்டு செல்கிறார்கள் கோவை மாவட்ட திமுகவினர்.
-
திமுகவில் மீண்டும் ‘செயல் தலைவர்’ பதவி? களமிறக்கப்படும் உதயநிதி - கனிமொழி.. ஸ்டாலின் பிளான் என்ன? -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
தலைமைச் செயலகத்தை தவெக கட்சி அலுவலகமாக மாற்றுவதா? திமுக எம்பி வில்சன் கண்டனம் -
கைய குடுங்க பங்கு.. விஜய்ய முடிச்சு விடனும்! திரைமறைவில் கைகோர்த்த திமுக -அதிமுக! உடைந்த கூட்டணிகள்! -
முன்னுக்குப் பின் முரண்.. ஏன் இவ்வளவு தடுமாற்றம்.. கோவை சிறுமியின் தாயிடம் அடுக்கடுக்கான கேள்வி -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
சூலூர் கொடூரத்தை திசைதிருப்ப.. உதயநிதியை வைத்து ஏஐ போலி படம்.. தீவிரமாக பரவும் வதந்தி.. தவெக மூவ் -
குழந்தை காணாமல் போனது கூட தெரியாமல் போதையில் கிடந்தேனா? வைரல் வீடியோவுக்கு கோவை சிறுமி தாய் மறுப்பு -
கடுங்குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை.. விஜய் அதிரடி உத்தரவு! என் கவுண்டருக்கு தரப்பட்ட கிரீன் சிக்னல்? -
எனக்கே தெரியாமல் குழந்தையை எரிச்சுட்டாங்க! கணவர் மீது கோவை சிறுமியின் தாய் பகீர் குற்றச்சாட்டு -
சூலூர் கொடூரம்.. 'ஹத்ராஸ்' ஆக மாறிய கோவை? உத்தர பிரதேச பாணியில் அவசரத் தகனம் செய்த காவல் துறை! -
கேடிஎம் பைக்கில் வந்த கும்பல்..காதலிக்க மறுத்த பெண் வீட்டில் மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு..கோவை ஷாக்!












Click it and Unblock the Notifications