அதிமுகவினருடன் தொடர்பு.. கோவை திமுக நிர்வாகியின் பதவியை பறித்த ஸ்டாலின்.. பின்னணியில் நடந்தது என்ன?
கோவை: கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் பிவி மகாலிங்கத்தின் பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்து நடவடிக்கை எடுத்துள்ளார். கோவை மாவட்ட திமுக நிர்வாகிகள் உடனான ஒன் டூ ஒன் ஆலோசனையின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் 5 மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், திமுக இம்முறை தங்களின் பிரச்சாரத்தை வித்தியாசமாக அணுகி வருகிறது. அதிமுக, தவெக உள்ளிட்ட கட்சிகள் மக்களை நேரடியாக சந்தித்து பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. ஆனால் திமுக ஒவ்வொரு தொகுதியிலும் நிர்வாகிகளுக்கு இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

அதற்காகவே "உடன்பிறப்பே வா" என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் ஒவ்வொரு தொகுதிகளிலும் திமுகவினரை அழைத்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். குறிப்பாக திமுகவுக்கு சவாலாக இருக்கும் மாவட்டங்களில் இம்முறை ஸ்டாலின் கூடுதல் செலுத்தி வருகிறார். அந்த வகையில் கோவை மாவட்ட நிர்வாகிகளுடன் ஒன் டூ ஒன் சந்திப்பு நேற்று நடைபெற்றது.
சூலூர், கிணத்துக்கடவு, வால்பாறை ஆகிய சட்டசபைத் தொகுதி நிர்வாகிகளுடன் முதல்வர் ஸ்டாலின் நடத்திய ஆலோசனை பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. அப்போது கோவை மாவட்ட பொறுப்பாளர் செந்தில் பாலாஜிக்கு, கோவையின் பெரும்பாலான தொகுதிகளில் திமுக வெல்ல வேண்டும் என்று உத்தரவிட்டார்.
இதற்கு முன்பாகவே நெல்லை உள்ளிட்ட தொகுதிகளில் திமுக வெல்லவில்லை என்றால், திமுக நிர்வாகிகள் அத்தனை பேரின் பதவியும் பறிக்கப்படும் என்று ஸ்டாலின் வார்னிங் கொடுத்திருந்தார். இந்த நிலையில் கோவை மாவட்ட நிர்வாகிகளுடனான ஒன் டூ ஒன் சந்திப்புக்கு பின் கோவை மாவட்டம் சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றியச் செயலாளர் பிவி மகாலிங்கத்தின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அதிமுக நிர்வாகிகளுடன் தொடர்பில் இருப்பது திமுக தலைமைக்கு தெரிய வந்திருக்கிறது. இதையடுத்து உடனடியாக பதவியை பறித்து ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். இதையடுத்து கோவை சுல்தான் பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளராக ரமேஷ் என்பவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலமாக தேர்தல் பணிகளில் திமுக எந்த சமரசமும் செய்ய தயாரில்லை என்று பார்க்கப்படுகிறது.
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அதிமுகவை பாஜக விலைக்கு வாங்கிவிட்டது.. திருவாரூரில் தேர்தல் பரப்புரையை தொடங்கிய ஸ்டாலின்! ‘அட்டாக்' -
ஊதி தள்ளிடலாம் செந்தில் பாலாஜியை, "நாம 4 அடி வெச்சா திமுக 8 அடி வைக்குதே" எடப்பாடியிடம் சொன்னது யார் -
சிதறும் கிறிஸ்தவ வாக்குகள்? தமிழகத்தில் இதுவரை நடக்காத சைலண்ட் மாற்றம்! கள நிலவரம் என்ன? -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
மேயர் பிரியாவுடன் Pose! இன்னும் ஓரிரு நாட்களில் நல்ல செய்தி! சத்யராஜ் மகள் பதிவு! என்னவா இருக்கும்? -
முதல்வர் ஸ்டாலின் சொத்து மதிப்பு எவ்வளவு? சொந்தமாக வாகனம், நகை எதுவும் இல்லை! -
பெரும் பணக்காரர்களுக்கு செல்வ வரி விதிக்கப்படுமா? நாடாளுமன்றத்தில் திமுக எம்.பி. வில்சன் கேள்வி -
திமுக தலைவர் ரோட் ஷோ நடத்தலாம்..விஜய் மைக்குடன் பிரச்சாரம் செய்யக் கூடாதா? தவெக அடுக்கடுக்காக கேள்வி -
திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்த முன்னாள் MLA செ.கு.தமிழரசன்! இரட்டை இலையில் வென்றவர்! அதான் ஹைலைட் -
வில்லிவாக்கத்தில் கொடி நாட்டுவாரா ஆதவ் அர்ஜுனா? சுத்துப் போட்ட திமுக! சூடு பிடிக்கும் களம் -
கோவையில் தொடங்கிய திமுக ஆட்டம்.. ஃபயர் மோடில் செந்தில் பாலாஜி.. பரபரக்கும் களம்












Click it and Unblock the Notifications