கோவை யானை தாக்குதல்: வாக்கிங் போனவரை மிதித்தே கொன்ற யானை.. புறநகரில் பொதுமக்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை புறநகர் பகுதிகளில் காட்டு யானை தொல்லை தொடர்ந்து வருவதால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இன்று காலை, தடாகம் அருகே நடைப்பயிற்சி சென்ற நபர் யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில மாதங்களாக, கோவை அருகே உள்ள கிராமங்களில் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து பயிர்களை நாசப்படுத்தி வருகின்றன. இதனால் விவசாயிகள் பெரும் இழப்பை சந்தித்து வருகின்றனர். வனத்துறையினர் யானைகளை விரட்ட முயற்சி செய்தாலும், மீண்டும் மீண்டும் யானைகள் ஊருக்குள் நுழைவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

elephant

இன்று காலை, தடாகம் அருகே உள்ள தாளியூர் கிராமத்தில் நடைப்பயிற்சி சென்ற நடராஜ் என்ற நபர், திடீரென தாக்கிய காட்டு யானையால் பலியானார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்த தடாகம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். ஆனால், அப்பகுதி மக்கள் உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

இந்த தொடர்ச்சியான யானைத் தாக்குதல்களுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், ஆக்ரோஷமாக சுற்றித் திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டு செல்ல வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி. அருண்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறி, வனத்துறையிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+