கோவையில் கேஸ் சிலிண்டர் போடுறப்போ பூத்த காதல்.. திசைமாறி சென்ற காதலி! கடைசியில் காதலன் செய்த காரியம்
கோவை: கோவையில் நடந்த சம்பவம் பொதுமக்களை அதிர வைத்து வருகிறது.. 2 வருடமாக உயிருக்கு உயிராக அப்பெண்ணை காதலித்துள்ளார் பிரவீன்.. எந்நேரமும் போனிலேயே மூழ்கியிருந்து, இந்த காதலை வளர்த்து வந்துள்ளார்.. ஒருகட்டத்தில், பிரவீனுடன் பேசாமல் தவிர்த்துள்ளார் அந்த பெண்.. நேற்றைய தினம் இதுகுறித்து கேட்க அந்த பெண்ணின் வீட்டுக்கும் சென்றுள்ளார்.. அங்கு என்ன நடந்தது தெரியுமா?
பொள்ளாச்சி அருகிலுள்ளது வடுகபாளையம்.. இங்கு வசித்து வரும் தம்பதி கண்ணன். - வனிதா.. கார் பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார் கண்ணன்.. இவருக்கு 2 மகள்கள் உள்ளனர்..

இதில் 19 வயதுடைய அஸ்விகா, கோவையிலுள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி, IT 2ம் வருடம் படித்து வருகிறார்.. இவர் பிரவீன்குமார் என்பவரை காதலித்து வந்தார்..
முற்றிய காதல்
பொள்ளாச்சி-உடுமலை ரோடு அண்ணாமலையார் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்.. 23 வயதான பிரவீன்குமார், தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.. ஆரம்பத்தில் நட்பாக துவங்கி, பிறகு இவர்களின் பழக்கம் காதலாக மாறியது.. இதனால் தினந்தோறும் போனிலேயே பேசி தங்கள் காதலை வளர்த்து வந்தனர். ஆனால், சமீப நாட்களாகவே பிரவீன் குமாருடன் பேசுவதை அஸ்விகா தவிர்த்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அஸ்விகாவிடம் இதுகுறித்து நேரிலேயே கேட்டுவிடலாம் என்று நினைத்து அவரது வீட்டுக்குக் சென்றுள்ளார்.. அப்போது அஸ்விகா மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக கூறப்படுகிறது.. அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு முற்றியது..
ஒருகட்டத்தில் ஆவேசம் அடைந்த பிரவீன்குமார் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால், அஸ்விகாவை சரமாரியாக குத்தினார்.. முகம், கழுத்து உள்ளிட்ட 5 இடங்களில் படுகாயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அஸ்விகா நிலைகுலைந்து கீழே விழுந்தார்.
போஸ்ட் மார்ட்டம்
அஸ்விகாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினரும், குடும்பத்தினரும் உடனடியாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் தந்தனர.. போலீசார் விரைந்து வந்து அஸ்விகாவை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அஸ்விகா இறந்துவிட்டதாக அறிவித்தனர்.. இதையடுத்து, அவரது உடல் போஸ்ட் மார்ட்டத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி, பிரவீன்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்குள் பொள்ளாச்சி நகர மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் பிரவீன்குமார் சரண் அடைந்தார். இதையடுத்து தாலுகா போலீசார் அவரை அங்கிருந்து அழைத்துச்சென்று விசாரணை நடத்தினார்கள்.
வாக்குமூலம் தந்த பிரவீன்
அப்போது போலீசாரிடம் பல்வேறு தகவல்களை பிரவீன்குமார் தெரிவித்தார்.. அதாவது 5 வருடங்களுக்கு முன்பு அஸ்விகாவின் வீட்டு பக்கத்திலேயே பிரவீன்குமார் குடும்பத்துடன் வசித்து வந்தாராம்.. அப்போதுதான் 2 பேருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது..
ஒரு நாள் கேஸ் சிலிண்டர் எடுப்பதற்காக அஸ்விகாவின் வீட்டிற்கு பிரவீன்குமார் வந்தபோதுதான், இருவரும் தங்களது காதலை தெரிவித்துக்கொண்டார்களாம்.. கடந்த 2 வருடங்களாகவே தீவிரமாக காதலித்து வந்துள்ளார்கள்.. இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்து, எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், அஸ்விகாவுடன் திருமணம் செய்து வைக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், இதற்கு பிறகு, அண்ணாமலையார் நகருக்கு குடும்பத்துடன் பிரவீன்குமார் குடியேறியிருக்கிறார்..
ஆண் நண்பர் போட்டோ
இப்படிப்பட்ட சூழலில், அஸ்விகா தன்னுடைய ஆண் நண்பருடன் இருக்கும் போட்டோவை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.. இதைப்பார்த்த பிரவீன் குமார், அஸ்விகாவிடம் கேட்டபோது, சரியான பதில் சொல்லவில்லை..
அத்துடன் கடந்த சில நாட்களாக பேசுவதையும் தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பிரவீன்குமார், அஸ்விகா வீட்டில் தனியாக இருப்பதை அறிந்து சென்று கத்தியால் குத்தி கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் தந்துள்ளார்..
திடீர் திருப்பம்
அதாவது, இரு குடும்பத்தினரும் இவர்களுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்து வைத்திருந்தார்களாம்.. ஆனால், அஸ்விகா திடீரென பிரவீனை கழட்டிவிட்டு, இன்னொரு நபருடன் நட்பாக பழகியதாக தெரிகிறது.. அத்துடன், பிரவீனை திருமணம் செய்யவும் அஸ்விதா மறுத்துள்ளார்... இதனால் தன்னை மறந்துவிட்டு வேறு வேறு நபரை அவர் காதலிப்பதாக பிரவீனுக்கு சந்தேகம் எழுந்தது.
நேற்று வீட்டுக்கு சென்று திருமண பேச்சை பிரவின் எடுத்தபோதும், அஸ்விகா மறுத்துள்ளார். கைதாகி உள்ள பிரவீனிடம் தொடர் விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.. இந்த சம்பவம் பொள்ளாச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இது லிஸ்ட்லயே இல்லையே.. கோவை திமுக வேட்பாளர் தேர்வில் ட்விஸ்ட் கொடுத்த செந்தில் பாலாஜி -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு?












Click it and Unblock the Notifications