கோவை அரசு பஸ்ஸில் கருப்பா? சீட்டில் தொப்புனு வந்து விழுந்ததுமே.. ஆடிப்போன கோயம்புத்தூர், பொள்ளாச்சி

Subscribe to Oneindia Tamil

கோவை: அரசு பஸ்களில், சீட்டு பிடிப்பதற்கு கர்ச்சீப் அல்லது பையை போடுவது வழக்கம்.. ஆனால் சீட்டில் கர்ச்சீப்புக்கு இதை கொண்டு வந்து போடுகிறார்களே? என்று பொதுமக்கள் அதிர்ந்துபோய்விட்டார்கள்.. இது தொடர்பான வீடியோ, போட்டோக்கள்தான் இணையத்திலும் வைரலாகி கொண்டிருக்கிறது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியை பொறுத்தவரை, கிராமப்புறங்கள், வெளியூர்களுக்கு செல்வதற்கு, 50க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.. கிராமப்புறங்களில் கூலித்தொழிலாளர்கள், வேலைக்கு செல்வோர், மாணவ, மாணவிகள் என அனைவரும் பயணிப்பதற்கு இந்த பஸ்கள் உதவி கொண்டிருக்கின்றன.

Coimbatore Government Bus Kovai

கிராமப்புறங்கள்: எனினும், கிராமப்புறங்களுக்கு இயக்கப்படும் இந்த பஸ்களில் எப்போதுமே கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது.. இதனால், பயணிகளுக்கு இந்த பஸ்களில் சீட் பிடிக்கவே படாதபாடு பட வேண்டியிருக்கிறது.. இதற்காகவே, ஒருவருக்கொருவர் போட்டி நேரத்தில், இடம் பிடிக்க போட்டா போட்டி போடுவது வழக்கமாகியுள்ளது. பலரும், துணிப்பை, கர்ச்சீப் போன்றவைகளை சீட்டில் போட்டு இடம் பிடித்து வருகிறார்கள்.

இந்நிலையில், பொள்ளாச்சியிலிருந்து, தமிழக எல்லையில் உள்ள கோபாலபுரம் செல்லும் அரசு பஸ்சில் (வழித்தட எண்: 5C) சீட் பிடிக்க 2 அரிவாள்கள் வைக்கப்பட்டிருந்தன.. இதை பார்த்து பயணிகள் ஒருவித அச்சத்தில் அமைதியாகவே இருந்துள்ளனர். அதேபோல அந்த பஸ்ஸின் கண்டக்டருக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பஸ்சில் பயணித்த பொதுமக்களில் சிலர் இதனை வீடியோ, போட்டோ எடுத்து, சோஷியல் மீடியாவிலும் பதிவிட்டுவிட்டனர்..

ஒரு படத்தில் நடிகர் வடிவேலு, பாம்பை போட்டு அரசு பஸ்சில் இடம் பிடிக்கும் காமெடி சீனை போல, வீச்சரிவாளை போட ஆரம்பித்துவீட்டீர்களே? என்று இணையத்தில் கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

அரிவாள்: இதனிடையே, பஸ்சில் இடம் பிடிக்க அரிவாள் போடுவதா? என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.. சீட்டில் இந்த அரிவாளை போட்டவர்கள் யார் என்று தெரியவில்லை.. எனவே, இதுகுறித்து போலீசார், போக்குவரத்து அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டனர்.. பஸ் கண்டக்டர், டிரைவரிடம் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அப்போதுதான், பஸ்சில் வந்த தேங்காய் பறிக்கும் தொழிலாளர்கள் சிலர், டீ குடிக்க சென்றபோது சீட்டில் யாரும் உட்காராமல் இருக்க, கூடாது என்பதற்காக, கையில் வைத்திருந்த அரிவாளை வைத்துவிட்டு சென்றதாகவும், அதன்பிறகு அரிவாளை எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது. ஆனாலும், போலீசார் சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு ஆய்வு செய்து வருகிறார்கள்.

கோரிக்கை: எனினும், வழக்கமாக இந்த வழித்தடங்களில் பஸ்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால்தான், சீட் பிடிப்பதில் முண்டியடிக்க வேண்டியிருக்கிறது.. பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்தபடியே உள்ளதால், பஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+