Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

கோவை அரசு பள்ளியில் கழிவறையை சுத்தம் செய்த பட்டியல் மாணவர்கள்.. தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவதாக இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் புகார் அளித்தனர். மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்த நிலையில், மாணவர்களைக் கொண்டு கழிவறையை சுத்தம் செய்ய வைத்த புகாரில் அரசு பள்ளி தலைமை ஆசிரியை பணியிட மாற்றம் செய்யப்பட்டிருக்கிறார்.

இந்திய மாணவா் சங்கம், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபா் சங்கம் ஆகியவை சாா்பில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவரிடம் வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்ட மனுவில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம், தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 100-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இந்தப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படிக்கும் 5 மாணவா்களுக்கு கடந்த ஜூன் மாதம் முதல் கடுமையான அநீதிகள் நடைபெற்று வருகின்றன.

Coimbatore government school headmistress transferred due to students being made to clean toilets


கழிவறையை சுத்தம் செய்த மாணவர்கள்

தொட்டிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கடந்த 2025-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை பள்ளி கழிப்பறை, மாணவிகள் கழிப்பறை, ஆசிரியர்கள் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் 5-ம் வகுப்பு மாணவர்கள் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். வருகை பதிவேட்டின் வரிசைப்படி தினமும் காலை 2 மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்படுத்தும் கழிப்பறைகள், ஆசிரியா்கள் பயன்படுத்தும் கழிப்பறைகளை சுத்தம் செய்யும் பணியில் நாள்தோறும் காலை, மாலை என 2 வேளைகளும் இந்த 5 மாணவா்களும் ஈடுபடுத்தப்படுகின்றனா்.

பட்டியல் சமூகத்தினர்

மேலும் அந்த மாணவர்கள் மட்டும் தரையில் அமர வைக்கப்பட்டு உள்ளனர். இந்த விஷயத்தை பெற்றோரிடம் தெரிவிக்கக் கூடாது என்றும், அவ்வாறு தெரிவித்தால் மாற்றுச் சான்றிதழை வழங்கி பள்ளியில் இருந்து விரட்டி விடுவேன் என்றும் தலைமை ஆசிரியா் மிரட்டி வருவதாகவும் கூறப்படுகிறது. பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் இத்தகைய தீண்டாமை சார்ந்த செயல்பாடுகள் நடந்து உள்ளதாக எங்களுக்கு தெரிய வருகிறது. இது கல்வி உரிமைகளுக்கு எதிரானது.

சட்டரீதியான நடவடிக்கை

எனவே மாணவர்களை தீண்டாமை கொடுமைக்கு உள்ளாக்கியவர்கள் மீது சட்டரீதியான மற்றும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள துப்புரவு பணியாளா் மற்றும் பாதுகாவலா் பணியிடங்களை உடனடியாக வேண்டும். அனைத்துப் பள்ளிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் அமைப்பதை உறுதி செய்ய வேண்டும்" இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைமை ஆசிரியை பணியிட மாற்றம்

இது தொடர்பாக அந்த பள்ளியில் கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை உமா மகேஸ்வரியை, கோவை மாவட்டம் அன்னூர் வட்டாரம் கோனார்பாளையம் அரசு பள்ளிக்கு பணியிட மாற்றம் செய்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். கோவை போன்ற வளர்ந்த ஒரு நகரத்தின் அருகே, அதுவும் வருங்காலத் தூண்களாக வளர வேண்டிய சிறுவர்களிடம் "தீண்டாமை" எனும் விஷம் விதைக்கப்படுவது உண்மையிலேயே வெட்கக்கேடானது என்று சமூக ஆர்வல்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+