மின் கட்டணம் தாறுமாறு.. சின்னதாய் மாற்றி யோசித்த கோவை ஹாஸ்டல்.. இப்போது ரூ.2,34,000 மிச்சம்
கோவை: மின் கட்டணம் தாறுமாறாக வந்ததை கண்ட கோவையில் உள்ள ஒரு ஹாஸ்டல், சின்னதாய் மாற்றி யோசித்தது. அதன் பெரிய பிரச்சனைக்கு தீர்வு கிடைத்துள்ளது. கோவையில் உள்ள ஹாஸ்டல் சோலார் பவர் பிளாண்ட் மூலம் ஆண்டுக்கு இனி ரூ.2,34,000 சேமிக்க போகிறது. இதுபற்றி சோலார் நிபுணரான பாலு வெளியிட்ட தகவல்களை இந்த பதிவில் பார்ப்போம்.
கோவையில் ஒரு ஹாஸ்டலில் மின்சார யூனிட் அதிகமாக செலவு ஆகிறது என்றார்கள். அதற்காக 3 மாதத்தின் இபி செக் செய்து 4 நாள் பவர் லோடு அனாலிசஸ் செய்து அந்த டேட்டாவை செக் செய்து பார்த்த போது, தண்ணீர் உபயோகத்திற்காக மோட்டார்கள் அதிக நேரம் ஓடி அதற்கான யூனிட் எடுத்து இருப்பது தெரியவந்தது.

ஹாஸ்டலில் 200 அடி ஃபோரில் இருந்து 1.5" பைப் மூலம் தரைதள தொட்டிக்கு ஒரு நாளைக்கு சுமார் 13 ஆயிரம் லிட்டர் தண்ணீர் கொண்டுவர 5hp மோட்டர் 24 மணி நேரத்திற்கு சுமார் 5 மணி நேரம் ( இதை செக் செய்ய 24 மணி நேரம் டிஜிட்டல் டைமர் மாட்டி செக் செய்தோம் ) ஓடுகிறது. இதற்கான யூனிட் லோடு மேனேஜரில் எடுத்த டேட்டா ஒரு நாளைக்கு 5hp போர்வெல் மோட்டார் 37 யூனிட் Consume செய்கிறது, அடுத்து தரைத்தள தொட்டியில் இருந்து 5ஆவது மாடிக்கு 2hp மோட்டார் வழியாக தண்ணீரை எடுத்து சென்று அங்கு உள்ள பூரிபயர் டேங்க் வழியாக ஓவர் டேங்கிற்க்கு தண்ணீர் செல்கிறது. இந்த மோட்டார் 24 மணி நேரத்தில் சுமார் 5 மணி நேரம் ஓடுகிறது.
இதற்கான யூனிட் லோடு மேனேஜரில் எடுத்த டேட்டாவில் பார்த்தால் ஒரு நாளைக்கு 2 மணி நேரம் தண்ணீர் பம்ப் செய்ய மோட்டார் 15 யூனிட் ஆகிறது. இந்த ஹாஸ்டல் கனைக்சன் LM 51 இல் இருப்பதால் சோலார் பவர் பிளாண்ட் போட்டு, கிரிட்டுக்கு கொடுப்பதில் அவ்வளவாக யூனிட்க்கான பில் தொகையை குறைக்க நீண்ட காலம் எடுக்கும்.
சோலார் பவர் பிளாண்ட்க்கான செய்யும் முதலீடு எடுக்க அதிக காலம் எடுக்கும் என்பதால்... குறைவான செலவில் 8KW க்கு சோலார் பவர் பிளாண்ட் நிறுவி அதில் VFD Drive மாட்டி அதில் இருந்து பகல் நேரத்தில் சோலார் பவர் வழியாக 5hp & 2hp மோட்டார்களை ஓட்டி தண்ணீரை 25 லிட்டர் ரிசர்வு செய்யும் அளவுக்கு செட் செய்து அதற்கான ஒரு ஆட்டோமேட்டிக் ( பகல் நேரத்தில் சோலார் பவர் வழியாக ஓட்டி இரவு நேரங்களில் EB பவர்ல ஆன் ஆவது போல ) கன்ட்ரோல் பேனல் ரெடி செய்து ஆன் செய்தோம்.
சோலார் பவர் VFD Drive வழியாக பகல் நேரங்களில் 5hp 2hp மோட்டார்களை ஓட்டுவதால் தினமும் சரசரியாக EB யூனிட் 50 +-5% மிச்சம் ஆகிறது ஆக மாதம் சுமார் 1,500 யூனிட் 1,500*13= ₹19,500, வருடம் ₹2,34,000 சேமிப்பாகும்.

கோவை ஹாஸ்டல் நிர்வாகம் செய்த முதலீட்டை 1.5 வருடம் இல்ல 2 வருடத்தில் எடுத்து விடலாம். மீதம் இருக்கும் 18 ஆண்டுகள் ஹாஸ்டல் நிர்வாகத்திற்கு போனஸ் தான்.. 1.5 வருடம் இல்ல 2வருடம் எறு எதற்கு சொல்கிறேன் என்றால, அந்த ஏரியா வருடம் முழுவதும் உள்ள சூரிய வெளிச்சத்தை பொருத்து VFD Drive (Variable Frequency Drive) ரன் ஆகும் .
சிறு நிறுவனங்கள், அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்கூல், ஹாஸ்டல், மருத்துவமனைகள் என அதிகமாக தண்ணீர் தேவை இருப்பவர்கள் உபயோகிக்கும் மோட்டார் Hpக்கு ஏற்றவாரு ஆட்டோமேட்டிக்கு கன்ட்ரோல் பேனல் கனைக்ட் செய்து சோலார் பவர் பிளாண்ட் அமைத்தால் நீண்ட நாள் பவர் உற்பத்தியுடன் மின் கட்டண செலவை குறைத்து கொள்ள முடியும்.. விவசாய பயன்பாட்டுக்கு ஆட்டோமேட்டிக் கன்ட்ரோல் பேனல் தேவையில்லை. சோலார் பவர் பிளாண்டில் இருந்து VFD Drive வழியாக டைரக்டாக மோட்டார் ஆன் செய்யலாம்." இவ்வாறு பாலு தனது பதிவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications