கோவை ஒரு ரூபாய் இட்லி பாட்டிக்கு வந்த சோதனை.. மகேந்திரா குரூப் கட்டிக் கொடுத்த வீட்டின் நிலை தெரியுமா?
கோவை: கோவை புறநகர் பகுதியில் ஒரு ரூபாய்க்கு இட்லி விற்று நாடு முழுவதும் பிரபலமடைந்தவர் கமலாத்தாள் பாட்டி. அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்து உதவிகள் கிடைத்தன. இந்நிலையில் மகேந்திரா குழுமம் அவருக்கு கட்டிக் கொடுத்த வீட்டின் சமீபத்திய நிலை சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
கோவை மாவட்டம், ஆலாந்துறை அருகே உள்ள வடிவேம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் கமலாத்தாள். 90 வயதைக் கடந்த கமலாத்தாள், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இட்லி வியாபாரம் செய்து வருகிறார். தொடக்கத்தில் ஒரு இட்லி 25 பைசாவுக்கு விற்றவர், கடந்த சில ஆண்டுகளாக ஒரு இட்லி ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறார்.

ஒரு ரூபாய் இட்லி பாட்டி என்று தமிழ்நாடு முழுவதும் கமலாத்தாள் வைரலானார். பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, கொரோனா வைரஸ் போன்ற காரணங்களால் விலைவாசி தாறுமாறாக எகியுள்ளது. ஆனால், இவ்வளவு நெருக்கடிகளுக்கு மத்தியலும் கமலா பாட்டி 1 ரூபாய்க்குதான் இட்லி விற்கிறார். மேலும் தனது கடைசி மூச்சு இருக்கும்வரை 1 ரூபாய்க்குதான் இட்லி கொடுப்பேன் என்று கொள்கை முடிவு எடுத்திருக்கிறார்.
கொரோனா காலத்தில் அந்த ஊரில் பலரது பசியை போக்கியது கமலாத்தாள் பாட்டி தான். யாரின் உதவியும் இல்லாமல் கமலாத்தாள் தனி ஒருவராக செய்யும் இந்த சேவைக்கு இந்தியா முழுவதும் பாராட்டுகள் குவிந்தன. பல்வேறு தரப்பில் இருந்தும் கமலாத்தாள் பாட்டிக்கு உதவிக்கரம் நீண்டது.
கேஸ் ஸ்டவ், சிலிண்டர், க்ரைண்டர், மிக்ஸி, அரிசி, பருப்பு ஆகியவற்றில் தொடங்கி நிலம், வீடு என்று பல உதவிகள் செய்யப்பட்டன. மகேந்திரா குழுத்தின் ஆனந்த் மகேந்திரா கமலாத்தாள் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி என்று உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்களும் கமலாத்தாள் பாட்டியை சந்தித்தனர்.
வேலுமணி தரப்பில் கமலாத்தாள் பாட்டிக்கு 2 சென்ட் நிலம் வாங்கி பாட்டியின் பெயரில் பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். இந்நிலையில் மகேந்திரா லைஃப் ஸ்பேசஸ் நிறுவனம் சார்பில் கமலாத்தாள் பாட்டிக்கு நிலம் வாங்கி பத்திரப்பதிவு செய்து வீடு மற்றும் கடை கட்டிக் கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் கமலாத்தாள் பாட்டி வீட்டுக்கு சென்ற யூடியூபர்கள் மகேந்திரா குழுமம் வழங்கிய வீட்டின் தற்போதைய நிலை குறித்து வீடியோ எடுத்து பகிர்ந்துள்ளனர். அது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மழையில் மேல் தளம் ஓதமாகி, மழை பெய்யும் போது தண்ணீரும் ஒழுகி வந்ததாம்.
நாளடைவில் ஓதம் பெரிதாகி, அங்கு மாட்டப்பட்டிருந்த ஃபேன் கழன்று கீழே விழுந்துவிட்டதாம். இந்த சம்பவம் நடப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு தான் பாட்டி அந்த இடத்தில் படுத்து தூங்கியுள்ளார். அதிர்ஷ்டவசமாக ஃபேன் விழுகும்போது பாட்டி அந்த இடத்தில் இருந்து சென்றுவிட்டாராம். இதனால் எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. மகேந்திரா குழுமம் பாட்டிக்கு வீடு கட்டி கொடுத்து மூன்று ஆண்டுகள் தான் ஆகின்றன. "வீடு கட்டி கொடுத்தது நல்ல விஷயம் தான். ஆனால் அதை சற்று தரமாகவும், பாதுகாப்பானதாகவும் செய்திருக்கலாமே." என்று நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications