கோவை இதய துடிப்பில் வரப்போகும் மாற்றம்.. நீண்ட கால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு
கோவை: கோவை மாநகரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பெரியளவு வெடித்துக் கொண்டிருக்கிறது. அதிலும் பல முக்கிய பகுதிகளை இணைக்கும் லங்கா கார்னர் சந்திப்பில் போக்குவரத்து நெரிசால் மக்கள் தினசரி அவதிப்பட்டு வருகிறார்கள். அந்தப் பிரச்சனைக்கு விரைவில் நிரந்த தீர்வு காண கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்காக சென்னை ஐஐடி யுடன் இணைந்து அதி நவீன தொழில்நுட்பத்துடன் ஆய்வு செய்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னைக்கு அடுத்து கோவை மாவட்டம் மிகப்பெரிய வளர்ச்சியை அடைந்து வருகிறது. கல்வி, மருத்துவம், தொழில் நிறுவனங்கள், ஐடி துறை, தங்கநகை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இந்தியளவில் வேகமாக முன்னேறும் இரண்டாம் கட்ட நகரங்களில் கோவை முக்கிய இடத்தில் இருக்கிறது.

கோவை வளர்ச்சி
இதனால் கோவையின் உள்கட்டமைப்பு வசதியை மேம்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. கோவை விமான நிலைய விரிவாக்கம், மெட்ரோ ரயில், சர்வதேச கிரிக்கெட் மைதானம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் காத்திருப்பில் உள்ளன. கோவை விமான நிலையத்தை கடந்த 6 மாதங்களில் 17 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தியுள்ளனர். கடந்த காலங்களை விட விமான நிலையத்தை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 11 சதவீதம் அதிகரித்துள்ளது.
கோவை ரயில் நிலையத்தை சராசரியாக வருடத்திற்கு 2 கோடி பயணிகள் பயன்படுத்தி வருகிறார்கள். சேலம் ரயில்வே கோட்டத்தில் அதிக வருமானம் ஈட்டும் பகுதியாக கோவை ரயில் நிலையம் உள்ளது. போக்குவரத்து நெரிசல் தான் கோவையின் பெரிய பிரச்சனையாக உருவெடுத்து கொண்டிருக்கிறது. மக்கள் தொகைக்கு ஏற்ப வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
போக்குவரத்து நெரிசல்
அவிநாசி சாலை, திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலை, சத்தி சாலை, பாலக்காடு சாலை, தடாகம் சாலை உள்ளிட்ட அனைத்து பிரதான சாலைகளிலும் அதிகளவு போக்குவரத்து நெரிசல் இருந்து வருகிறது. அதை குறைப்பதற்காக மேம்பாலங்கள் கட்டப்பட்டு, ரவுண்டானா, யூடர்ன் வசதிகள் அமல்படுத்தப்பட்டன. ஆனாலும் போக்குவரத்து நெரிசல் குறையவில்லை.
அதிலும் டவுன்ஹால், ரயில் நிலையம், திருச்சி சாலை ஆகிய மூன்று முக்கிய பகுதிகளை இணைக்கும் லங்கா கார்னர் பகுதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சிறிய மழை பெய்தாலும் அங்கு அதிகளவு நீர் தேங்கி பொது மக்களுக்கு கடுமையான சிரமத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
லங்கா கார்னர் பிரச்சனை
லங்கா கார்னரில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையை சரி செய்வதற்காக, கோவை மாநகராட்சி நிர்வாகம் சென்னை ஐஐடியுடன் இணைந்து ஆய்வு மேற்கொண்டு வருகிறது. அங்கு செல்லும் வாகனங்களின் நடமாட்டங்களை கண்காணித்து அங்கு மணல் மூட்டைகளில் ரவுண்டானா வைத்திருந்தனர். ஆனால் அந்த முறை சிரமமாக இருப்பதாக வாகன ஓட்டிகள் புகார் தெரிவித்தனர்.
அதனால் ரவுண்டானாவை நீக்கிவிட்டு டிராபிக் சிக்னல் முறை அமல்படுத்தினார்கள். இருப்பினும் பீக் ஹவர்ஸ்களில் வாகனங்கள் நீண்ட நேரம் நிற்க வேண்டியுள்ளது. இதுகுறித்து சென்னை ஐஐடி குழு டிரோன் உள்ளிட்ட அதி நவீன தொழில்நுட்ப உதவியுடன், அங்கு நீண்ட காலத்திற்கு பயனளிக்கும் வகையில் நிரந்தர தீர்வு கொடுக்க ஆய்வு செய்து வருகின்றனர்.
நிரந்தர தீர்வு
இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் சிவகுரு பிரபாகரன் கூறுகையில், "சென்னை ஐஐடி மூலம் 15 முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க ஆய்வு நடத்தி வருகிறோம். சில இடங்களில் தற்காலிக சோதனை முயற்சிகளை செய்து வருகிறோம். லங்கா கார்னர் பகுதியில் நீண்ட காலத்திற்கு தீர்வளிக்கும் வகையில் ஆய்வு நடத்தி வருகிறோம். விரைவில் ஆய்வுகள் முடிந்து அங்கு நிரந்தர தீர்வு எட்டப்படும்." என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications