கோவையில் எம்பி யார்? அண்ணாமலைக்கு சான்ஸ் இல்லையா? அப்போ திமுக கணபதி? தந்தி டிவி கணிப்பு
கோயம்புத்தூர்: கோவையில் திமுக - அதிமுக - பாஜக இடையே கடும் இழுபறி நிலவுவதாக தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது.
கோவையில் திமுக கணபதி ராஜ்குமார் 31.5% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது. கோவையில் அதிமுக சிங்கை ஜி. ராமச்சந்திரன் 31 % வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது.

பாஜக அண்ணாமலை கோவையில் 30.5% வாக்குகளை பெறுவார் என்று தந்தி டிவி கணிப்பு தெரிவித்து உள்ளது.
கோவை தொகுதி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி ஆர் நடராஜன் இங்கே 571,150 வாக்குகள் பெற்று வென்றார். பாஜக சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் இங்கே 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் கல்யாண் சுந்தரம் 60,519 வாக்குகள் வென்றார்.
கடந்த 10 லோக்சபா தேர்தல்களில் இங்கே காங்கிரஸ் 3 முறை, திமுக 1 முறை, சிபிஎம் 2 முறை, பாஜக 2 முறை, சிபிஐ 1 முறை, அதிமுக 1 முறை வென்றுள்ளது.
தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்று கோவை ஆகும். கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.
அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸாக களமிறக்கப்பட்டார்.
கடும் போட்டி: கடுமையான மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் திமுகவின் கை ஓங்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் சிங்கை கடுமையான போட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று எண்ணப்படும் வாக்குகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாம் தமிழர் சார்பாக இங்கே கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
2019 பொதுத் தேர்தல்: கடந்த 2019 பொதுத் தேர்தலில் கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திடம் சேர்ந்து உள்ளது. மக்கள் நீதி மய்யத்திடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன?












Click it and Unblock the Notifications