கோவையில் வீழ்ந்தார் அண்ணாமலை.. திமுக கணபதி அசத்தலான வெற்றி.. 3வது இடத்திற்கு தள்ளப்பட்ட அதிமுக
கோயம்புத்தூர்: கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். 589454 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். 445950 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார் . அதிமுக சிங்கை 228858 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் ஸ்டார் தொகுதிகளில் ஒன்று கோவை ஆகும். கோவை தொகுதி பாஜக வேட்பாளராக அண்ணாமலை களமிறக்கப்பட்டார். ஏற்கனவே கோவை லோக்சபா தொகுதி வேட்பாளராக திமுக சார்பாக கணபதி ராஜ்குமார் களமிறக்கப்பட்டார். பலரின் பெயர்கள் இதற்காக சுற்றி வந்த நிலையில் சர்ப்ரைஸாக கணபதி ராஜ்குமார் போட்டியிடுகிறார்.

அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார். ராமச்சந்திரன் கோவிந்தராசு என்றும் அழைக்கப்படும் சிங்கை ஜி. ராமச்சந்திரன் அந்த கட்சியின் சர்ப்ரைஸாக களமிறக்கப்பட்டார்.
கடும் போட்டி: கடுமையான மும்முனை போட்டி நிலவும் இந்த தொகுதியில் திமுகவின் கை ஓங்கி உள்ளதாக கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதிமுகவின் சிங்கை கடுமையான போட்டி அளிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடம் பிடிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கணிப்புகள் தெரிவிக்கின்றன. பாஜக தலைவர் அண்ணாமலை மூன்றாம் இடம் பிடிக்க வாய்ப்புள்ளதாக கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில் இன்று எண்ணப்படும் வாக்குகளில் யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. நாம் தமிழர் சார்பாக இங்கே கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகிறார்.
2019 பொதுத் தேர்தல்: கடந்த 2019 பொதுத் தேர்தலில் கோவையில் அதிமுக + பாஜக + பாமக +தேமுதிக + தமிழ் மாநில காங்கிரஸ் சேர்ந்து வாங்கிய வாக்குகள் 31% மட்டுமே. திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வாங்கியது 46%. இப்போது திமுக கூட்டணி அப்படியே உள்ளது.
ஆனால் பாஜக கூட்டணியில் அதிமுக , தேமுதிக இல்லை. திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்திடம் சேர்ந்து உள்ளது. மக்கள் நீதி மய்யத்திடம் 11% வாக்கு வேறு கோவையில் உள்ளது. அப்படி இருக்க அண்ணாமலைக்கு கோவை களநிலவரம் சாதகமாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் போட்டியிட்ட சிபிஎம் வேட்பாளர் பி ஆர் நடராஜன் இங்கே 571,150 வாக்குகள் பெற்று வென்றார். பாஜக சார்பாக சிபி ராதாகிருஷ்ணன் இங்கே 3,92,007 வாக்குகள் பெற்றார். மக்கள் நீதி மய்யம் சார்பாக ஆர் மகேந்திரன் 1,45,104 வாக்குகள் பெற்றார். நாம் தமிழர் கட்சியின் கல்யாண் சுந்தரம் 60,519 வாக்குகள் வென்றார்.
கடந்த 10 லோக்சபா தேர்தல்களில் இங்கே காங்கிரஸ் 3 முறை, திமுக 1 முறை, சிபிஎம் 2 முறை, பாஜக 2 முறை, சிபிஐ 1 முறை, அதிமுக 1 முறை வென்றுள்ளது.
அண்ணாமலை தோல்வி: இந்த நிலையில் கோவையில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். 589454 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றி பெற்றுள்ளார். 445950 வாக்குகள் பெற்று பாஜக வேட்பாளர் அண்ணாமலை தோல்வி அடைந்துள்ளார் . அதிமுக சிங்கை 228858 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications