லாட்டரி அதிபர் மார்ட்டினின் உதவியாளர் மர்ம மரணம்.. ஐடிரெய்டு நடந்த நிலையில் குட்டையில் பிணமாக மீட்பு
கோவை: கோவை காரமடையில் லாட்டரி அதிபர் மாட்டினின் உதவியாளர் பழனி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கோவையைச் சேர்ந்த தொழில் அதிபர் மார்ட்டின். இவர் லாட்டரி தொழில் செய்து வருவதுடன், ரியல் எஸ்டேட் தொழிலும் நாடு முழுவதும் செய்து வருகிறார்.
இந்நிலையில் மார்ட்டின் கணக்கில் காட்டாத பணம் வைத்திருப்பதாக வருமானவரி புலனாய்வு பிரிவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்ட்டினுக்கு சொந்தமாக நாடு முழுவதும் 70 இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 3 நாட்களாக சோதனை நடத்தினார்கள்

வருமான வரிசோதனை
கோவையில் 22 இடங்களிலும், சென்னையில் 10 இடங்களிலும், கொல்கத்தாவில் 18 இடங்களிலும், மும்பையில் 5 இடங்களிலும் வருமான வரித்துறையினர் ஒரேநேரத்தில் சோதனை நடத்தினார்கள்.

கொல்கத்தாவில் மார்ட்டின்
லாட்டரி அதிபர் மார்டினை வருமான வரித்துறையினர் கொல்கத்தா விமான நிலையத்தில் வைத்து அழைத்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்

பழனியிடம் விசாரணை
இதனிடையே வருமானவரி சோதனையில் அவரது தொழில் சம்பந்தமான பல்வேறு முக்கிய ஆவணங்கள் ஆய்வுக்காக பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த 2 நாட்களாக மார்ட்ன் உதவியாளர் பழனியிடம் வருமான வரித்துறை விசாரணை நடத்தி வந்தார்கள்.

உதவியாளர் உயிரிழப்பு
இந்நிலையில் கோவை காரமடையில் பழனி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். கோவை மாநகராட்சி குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் எதிரே குட்டையில் பழனியின் உடல் கண்டெடுக்கப்பட்டு உள்ளது. வருமான வரித்துறை விசாரணையின் போது பழனி தனது கையை அறுத்து கொண்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.
-
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ!












Click it and Unblock the Notifications