சார் வீடியோ எடுக்காதீங்க! வாடிக்கையாளரிடம் கெஞ்சிய மேனேஜர்! கோவை லூலூ மாலில் அழுகிய சிக்கன் விற்பனை
கோவை: கோவை லூலூ மாலில் வாங்கிய சிக்கனில் துர்நாற்றம் வீசியதால் மால் நிர்வாகத்தினரிடம் வாடிக்கையாளர் முறையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணேஷ் லால். இவர் நேற்று அவினாசி சாலையில் உள்ள லூலூ மாலில் சிக்கன் வாங்குவதற்காக சென்றுள்ளார்.

முக்கால் கிலோ சிக்கன் பதப்படுத்தப்பட்ட பாக்கெட்டை ரூ 165 க்கு வாங்கியுள்ளார். வீட்டில் வந்து சிக்கன் பாக்கெட்டை பிரித்து பார்த்தார். அப்போது அந்த சிக்கனில் இருந்து துர்நாற்றம் வீசியது.
இதையடுத்து லூலூ மால் நிர்வாகத்தில் மேனேஜரிடம் தகவலை தெரிவித்தார். இதையடுத்து கெட்டுப் போன சிக்கனுடன் லூலூ மால் வந்து முறையிட்டுள்ளார். அப்போது அங்கு நடப்பதை வீடியோவும் எடுத்தார். உடனே அந்த மேனேஜர் சார் சார் ப்ளீஸ் வீடியோ எடுக்காதீங்க, வாங்க தனியாக பேசிக்கலாம் என கேட்டுக் கொண்டார்.
இதைத் தொடர்ந்து சிக்கனை வாங்கி பார்த்த மேனேஜர் தவறை ஏற்றுக் கொண்டு மாற்றி தருவதாக சொன்னார். இருப்பினும், கணேஷ் லால் இது குறித்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பாக்கெட் இறைச்சி விற்பனை கூடங்களை ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதுகுறித்து லூலூ மால் நிர்வாகிகளிடம் கேட்ட போது அவர்கள் கூறுகையில் வாடிக்கையாளர் குறை இருப்பதாக கூறியதும் நாங்கள் அந்த பொருளை மாற்றி தருகிறோம் என சொன்னோம். அது போல் அவர் அந்த பொருளை கொடுத்ததும் அதற்கான பணத்தையும் நாங்கள் திருப்பி கொடுத்துவிட்டோம்.
ஆனாலும் அந்த வாடிக்கையாளர் கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார் என நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து வாடிக்கையாளர் கணேஷ்லால் கூறியதாவது: லூலூ மாலில் எப்படி பழைய சிக்கனை கொடுக்கலாம். பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு உள்ளது. உணவு பாதுகாப்பு அதிகாரி அலுவலக அதிகாரிகளிடம் புகார் கொடுத்துள்ளோம் என கணேஷ்லால் தெரிவித்தார்.
லூலூ மால் என்பது துபாயில் மிகவும் பிரபலமான நிறுவனம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யூசுப் அலி கேரளாவை சேர்ந்தவர். இவர் துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளில் தொழில் துறையில் சிறந்து விளங்குகிறார். இவருடன் நிறுவனம் தமிழகத்தில் கூட வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications