வெறும் 500 ரூபாய்.. கோவை கோர்ட்டில் 28 வருடங்கள் கழித்து நடந்த விநோதம்! வாயை பிளந்த கோயம்புத்தூர்
கோவை: கோவையில் ஒரு விநோதமான சம்பவம் நடந்து ஆச்சரியத்தை கிளப்பி வருகிறது.. எனினும் நீதித்துறையின் இந்த முயற்சி பலராலும் பாராட்டை பெற்றும் வருகிறது.
கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் கதிர்மதியோன்.. கடந்த 1996ம் ஆண்டு, தன்னுடைய வீட்டிற்கு மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்வதற்காக அதிகாரிகளிடம் விண்ணப்பித்திருக்கிறார்..

மின் இணைப்பு: ஆனால், மின் இணைப்பில் பெயர் மாற்றம் செய்ய வேண்டுமானால், 500 ரூபாய் லஞ்சம் தர வேண்டும் என்று ஒரு அதிகாரி கேட்டிருக்கிறார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த கதிர்மதியோன், இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு துறைக்கு தகவல் தந்தார்.
உடனே லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், 100 ரூபாய் நோட்டுகள் 4, 50 ரூபாய் நோட்டுகள் 2 போன்றவற்றில் ரசாயனம் கலந்து, மொத்தம் 500 ரூபாய் பணத்தை கதிர்மதியோனிடம் தந்தார்.
அதிகாரிகள்: கதிர்மதியோனும், ரசாயனம் கலந்த பணத்தை, லஞ்சம் கேட்ட அதிகாரியிடம் கொடுத்துள்ளார்.. அப்போது லஞ்ச ஒழிப்புத் துறையினர் மறைந்திருந்து, லஞ்சப்பணம் வாங்கும்போது, கையும் களவுமாக பிடித்து கைது செய்துவிட்டார்கள். இதற்கு பிறகு, கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.
லஞ்சம் வாங்கிய அதிகாரி சிறை சென்றபோதிலும், இந்த வழக்கு தொடர்ந்து நடந்து வந்தது.. கடைசியில் 2001ம் ஆண்டு முடிவுக்கும் வந்தது.. ஆனாலும், கதிர்மதியோன் கொடுத்த 500 ரூபாய் பணம் அவருக்கு திரும்ப வழங்கப்படவேயில்லை.. எனவே, இதுதொடர்பாக 2007ல், கதிர்மதியோன் கோர்ட்டில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்... அந்த மனு மீது பலமுறை விசாரணையும் நடந்தது..
500 ரூபாய்: அப்போது, கதிர்மதியோனை கோர்ட்டில் நேரில் ஆஜராகி 500 ரூபாய் பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளுமாறு கடிதம் அனுப்பப்பட்டிருந்தது...
அதன்படியே, கோர்ட்டில் ஆஜரான கதிர்மதியோனிடம், இப்போதுதான் அந்த 500 ரூபாய் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.. அதாவது 28 வருடங்களுக்கு பிறகு, அந்த பணம் கதிர்மதியோனிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது. இந்த பணத்தை பெற்றுக் கொண்ட கதிர்மதியோன் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.. ஆனால், முக்கிய கோரிக்கை ஒன்றையும் விடுத்திருக்கிறார்.
கோரிக்கை: இதுகுறித்து அவர் சொல்லும்போது, "28 வருடம் என்பது கொஞ்சம் தாமதமாக தெரிகிறது.. இதுதான் எனக்கு கவலையை தருகிறது.. லஞ்சம் தொடர்பாக புகார் அளிக்க நிறைய பேர் தயங்குவதற்கு காரணமே இதுதான்.. பணத்தை இப்படி கொடுத்துவிட்டு, அதனை திரும்பப் பெறுவற்கு பல வருடங்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை இருக்கிறது.. எனவே, நீதிமன்றம் விரைவாக பணத்தை உரியவர்களிடம் வழங்க, உரிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதில் ஹைலைட் என்னவென்றால், கதிர்மதியோனிடம் திரும்ப வழங்கப்பட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகள் எதுவுமே, தற்போது புழக்கத்தில் இல்லை...!!!
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications