கோவை மக்களின் நீண்டநாள் கனவு.. 3 மேம்பாலங்களின் வடிவமே மாறுது.. மத்திய அரசுக்கு போன புது ரிப்போர்ட்
கோவை: கோவை மாநகரில் சிங்காநல்லூர் உள்பட மூன்று இடங்களில் மேம்பாலம் அமைப்பதற்காக ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிலையில், மெட்ரோ ரயில் பணிகளுக்கான மேம்பால வடிவம் திருத்தி அமைக்கப்பட்டு மத்திய அரசிடம் புதிதாக சமர்பிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக வளர்ந்த நகரமான கோயம்புத்தூரில் வாகன பெருக்கம் காரணமாக நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது. போக்குவரத்து நெரிசலை தவிர்க்க திருச்சி சாலை, மேட்டுப்பாளையம் சாலையில் கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு கடந்த ஆண்டு திறக்கப்பட்டன.
இதேபோல் அவிநாசி சாலை, உக்கடம்- பொள்ளாச்சி சாலையில் மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவையில் அதிக போக்குவரத்து நெரிசல் உள்ள மூன்று இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத் துறையின் சார்பிலும், ஓரிடத்தில் மாநில நெடுஞ்சாலைத் துறையின் சார்பிலும் புதிதாக மேம்பாலங்கள் கட்டப்பட உள்ளன. அதன்படி, சிங்காநல்லூர் சந்திப்பு, என்.எஸ்.ஆர் சாலை - சிவானந்தா காலனி சாலை சாய்பாபா கோயில் சந்திப்பு, சரவணம்பட்டி - காளப்பட்டி சாலை ஆகிய 3 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

மேம்பாலம்
சிங்காநல்லூர் சந்திப்பில் ஒண்டிப்புதூர்-ராமநாதபுரம் வழித்தடத்தில் ரூ.141 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பபட திட்டமிடப்பட்டுள்ளது. சாந்தி சோஷியல் சர்வீஸ் அருகிலிருந்து உழவர் சந்தை வரை இம்மேம்பாலம் கட்டப்பட உள்ளது. அதேபோல் மேட்டுப்பாளையம் சாலையில் என்.எஸ்.ஆர் சாலை பிரிவு சந்திப்பு அருகிலிருந்து சிவானந்தாகாலனி செல்ல திரும்பும் சாலை வரை 2 சிக்னல்கள் உள்ளன. இப்பகுதியில் ரூ.60 கோடி மதிப்பில் 900 மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் கட்டப்பட இருக்கிறது. என்.எஸ்.ஆர் சாலை பிரிவிலிருந்து புதிய பேருந்து நிலையம் வரை புதிய மேம்பலாம் அமைக்கப்பட உள்ளது.

எப்படி பாலங்கள்
கோவை சத்தி சாலையில் சரவணம்பட்டி-காளப்பட்டி சாலை சந்திப்புப் பகுதியில் ரூ.80 கோடி மதிப்பில் 1.40 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. இந்த 3 மேம்பாலங்களும் 4 வழிப்பாதையாக, 17.2 மீட்டர் அகலத்தில் அமைக்கப்பட உள்ளன. விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதல் பெறப்பட்டு பணிகள் கடந்த ஆண்டே தொடங்குவதாக இருந்தது.

வடிவத்தில் மாற்றம்
ஆனால் கோவையில் மெட்ரோ ரயிலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கு ஏற்ப மேம்பாலங்கள் வடிவமைப்பு திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. கோவை மாநகரில் முன்மொழியப்பட்ட மூன்று மேம்பாலங்களுக்கான திருத்தப்பட்ட வடிவமைப்புகளை மாநில நெடுஞ்சாலைத்துறை மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது.

பணிகளை பாதிக்காது
இந்த புதிய மேம்பாலங்கள் இருபுறமும் 7.5 மீட்டர் அகலம் கொண்டதாகவும், மையத்தில் நான்கு மீட்டர் இடைவெளியில் மெட்ரோ ரெயிலுக்காகவும் அமைக்கப்படும். புதிய வடிவமைப்புகளின் நிலை குறித்த தெளிவான படம் ஒரு வாரத்திற்குள் வெளியாகும் என்று அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன. புதிய வடிவமைப்பு காரணமாக திட்டச் செலவில் சிறிய அளவில் மாறுதுல்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. அதேநேரம் இவை மேம்பால பணிகளை பாதிக்காது என்றும் நிச்சயமாக இந்த மூன்று இடங்களில் மேம்பாலங்கள் வரும் என்றும் அரசு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

நிதி ஒதுக்கீடு
இந்த மூன்று திட்டங்களுக்கும் மத்திய அரசு ஏற்கனவே ஒப்புதல் அளித்து நிதியும் அளித்துள்ளது. ஆனால், கோயம்புத்தூருக்கு மெட்ரோ ரயில் சேவையை தமிழக அரசு திட்டமிட்டதால் மேம்பாலங்கள் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கோவையில் மெட்ரோ ரயிலுக்கான ஏற்பாடுகளை வழங்குவதற்காக மேம்பாலங்கள் தற்போது மறுவடிவமைப்பு செய்யப்பட்டு, மத்திய அரசுக்கு மீண்டும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

தாமதிக்கக்கூடாது
இதனிடையே கொங்கு குளோபல் ஃபோரத்தின் இயக்குனர் ஜே.சந்தீஷ் இதுபற்றி ஆங்கிலம் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில், இந்த மூன்று திட்டங்களும் ஏற்கனவே தாமதமாகிவிட்டதாகவும், கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக விவாதங்கள் நடைபெற்று வருகிறது. நடைமுறைச் சிக்கல்கள் காரணமாக இவற்றைச் செயல்படுத்துவதில் இனியும் தாமதிக்கக் கூடாது. பொதுமக்கள் நலனுக்காக செயல்பட வேண்டிய நேரம் இது, ஏனெனில் இவை நகரத்தின் முக்கியமான தேவைகள்" என்றார்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சொதப்பிட்டீங்களே.. இப்போ பாருங்க போக முடியல.. கடுப்பான விஜய்.. காரணம் புஸ்ஸி, ஆதவ்? என்னாச்சு? -
திடீரென வீடியோ வெளியிட்டு மதுரை மத்திய தொகுதி வேட்பாளர் சுந்தர் சி உருக்கம்! பிடிஆர் இருக்காரே! -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்?












Click it and Unblock the Notifications