Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Coimbatore Murder: கோவையில் பட்டப்பகலில்.. நடுத்தெருவில்.. தந்தையை கொடூரமாக கொலை செய்த மகன்

Subscribe to Oneindia Tamil

கோவை: ரத்த பந்த உறவுகளிடம் கூட மிருகத்தனமாக நடந்து கொள்ளும் மனிதர்கள் அதிகரித்து வருகிறார்கள். கோவை மாவட்டம் அன்னூர் அருகே சொத்து தகராறில் பெற்ற வளர்த்த மகனே, தன்னுடைய தந்தையை கல்லை போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பட்ட பகலில் நடைபெற்ற இந்த சம்பவத்தின் வீடியோ காட்சியும் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள ஒன்னக்கரசம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் (61). இவருக்கு திருமணமாகி, ராஜசேகர் என்ற ஒரு மகன் இருக்கிறார். தந்தை மகன் இடையே அவ்வப்போது சொத்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. விஸ்வநாதனுக்கு சொந்தமாக அன்னூரில் ஒரு வீடு இருந்துள்ளது.

coimbatore-murder-coimbatore-son-murder-father-in-asset-issue

தந்தை மகன் பிரச்சனை

அதனை கடந்த 2017 ஆம் ஆண்டு தனது மகன் ராஜசேகருக்கு எழுதி கொடுத்துள்ளார். விஸ்வநாதனை எதிர்காலத்தில் சரியாக பார்த்து கொள்கிறேன் என்று உறுதியளித்து தான் ராஜசேகர் அந்த வீட்டையே வாங்கியுள்ளார். ஆனால் வீட்டை எழுதி வாங்கிக் கொண்ட பிறகு, ராஜசேகர் தன் தந்தை விஸ்வநாதனை முறையாக கவனத்து கொள்ளவில்லை என கூறப்படுகிறது [Coimbatore Murder].

இதனால் மனமுடைந்த விஸ்வநாதன், இதுதொடர்பாக கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியரிடம் புகார் அளித்துள்ளார். அதில், ராஜசேகருக்கு கொடுத்த வீட்டை மீண்டும் தன்னுடைய பெயருக்கு மாற்றித்தர வேண்டும் என்று கூறியிருந்தார். அதனடிப்படையில் அதிகாரிகள் விசாரித்து வந்தனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ராஜசேகருக்கு வழங்கிய பட்டாவை ரத்து செய்து, விஸ்வநாதனுக்கே வீட்டை வழங்க உத்தரவிட்டனர்.

சொத்து பஞ்சாயத்து

இதை எதிர்த்து ராஜசேகர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் கடந்த 2024 ஆம் ஆண்டு வீட்டை ராஜசேகரே வைத்துக் கொள்ளலாம். அதற்கு பதிலாக விஸ்வநாதனுக்கு மாதம் ரூ.5,000 வழங்கி அவரை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் நீதிமன்ற உத்தரவுப்படி ராஜசேகர் நடந்து கொள்ளவில்லை

இதன் காரணமாக விஸ்வநாதன் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த நடவடிக்கைகளால் விஸ்வநாதன் மீது ராஜசேகர் கோபமடைந்துள்ளார். என் வீட்டை உனக்கு எழுதிக் கொடுக்கணுமா என்று தந்தையை மிரட்டி அடித்து வந்துள்ளார். இதில் விஸ்வநாதன் கண் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்துள்ளார்.

கொடூர கொலை

நேற்று விஸ்வநாதனை பார்ப்பதற்காக ராஜசேகர் தன்னுடைய காரில் சென்றுள்ளார். ஒன்னக்கரசம்பாளையம் அருகே விஸ்வநாதன் வரும்போது கார் மூலம் இடித்து ராஜசேகர் அவரை கீழே தள்ளியுள்ளார். அங்கு தகராறு வெடித்த நிலையில், விஸ்வநாதனை மீண்டும் கீழே தள்ளி அருகில் இருந்த கல்லை எடுத்து அவரின் தலையில் போட்டு கொடூரமாக கொலை செய்துள்ளார்.

பிறகு ராஜசேகர் அங்கிருந்து சென்றுள்ளார். இதுதொடர்பாக தகவல் அறிந்த அன்னூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து, விஸ்வநாதனின் உடலை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவத்தின் வீடியோ காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறையினர் ராஜசேகரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+