கட்டிங் தராததால் கழுத்தறுத்து கொலை.. நண்பன் உடலுடன் செல்ஃபி! மாவுக் கட்டுடன் மருத்துமனையில் மாதேஷ்
கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவில் குடிபோதையில் நண்பனை கொலை செய்து, உடலுடன் செல்ஃபி எடுத்த சிறுவன் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மது வாங்கி தராததால் ஆத்திரத்தில் நண்பனை கொலை செய்து செல்ஃபி எடுத்ததாக கொலையாளிகள் அதிர்ச்சி தரும் வாக்குமூலம் அளித்துள்ளனர். இந்த நிலையில் கொலையாளிகளில் ஒருவன் தப்பியோட முயன்ற போது பாலத்தில் இருந்து கீழே விழுந்ததில் கை முறிவு ஏற்பட்டதாக கூறி மாவுக்கட்டு போட்டுள்ளனர் போலீசார்.
பொள்ளாச்சி கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த சேர்ந்த கூலித் தொழிலாளி அஸ்வின் என்ற வாலிபர் கடந்த 5 ஆம் தேதி சிக்கலாம்பாளையம் கிராமத்தில் உள்ள அவரது நண்பர் வீட்டில் இருந்துள்ளார். நள்ளிரவில் அவரது வீட்டுக்கு வந்த 16 வயது சிறுவன் மற்றும் மாதேஷ் உள்ளிட்ட இருவரும் கத்தியால் கழுத்தை அறுத்தும் சுத்தியால் அடித்தும் கொடூரமாக கொலை செய்தனர்.

மேலும் கொலை நடந்த போது அதை வீடியோவாக பதிவு செய்தும், கொலைக்குப் பின் வாயில் கத்தியை வைத்து செல்பி எடுத்து அவரது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர். பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த கிணத்துக்கடவு போலீசார் கோவை விசாரணை நடத்தினர்.
கோவை கொலை
மேலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி உத்தரவின் பேரில் நான்கு தனிப் படைகள் அமைத்து, மாதேஷ் மற்றும் சிறுவனை தேடி வந்தனர். இந்த நேற்று கிணத்துக்கிடவு அருகே உள்ள கோடங்கிபாளையம் ரயில்வே பாலத்தில் கொலையாளிகள் இருவரும் அமர்ந்திருந்ததாக வந்த தகவலையடுத்து அங்கு விரைந்துள்ளனர் தனிப்படை போலீசார். அவர்கள் தான் கொலையாளிகள் என உறுதி செய்த அவர்களை போலீசார் கைது செய்ய முற்பட்டனர்.
கையில் மாவுக்கட்டு
அப்போது அங்கிருந்து தப்பிக்க முயன்ற மாதேஷ் பாலத்தின் மீது இருந்து கீழே குதித்த போது வலது கையில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் அவனை கைது செய்த போலீசார் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு சேர்த்து மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
மேலும் தப்பியோட முயன்ற சிறுவனையும் போலீசார் கைது செய்தனர்.
மதுவாங்கும் தகராறு
விசாரணையில் 5 ஆம் தேதி மாலை மாதேஷ் மற்றும் 17 வயது சிறுவன் மது அருந்தி இருந்த நிலையில் மேலும் மதுபானம் வாங்க கடைக்குச் சென்றுள்ளனர். இதை அறிந்த அஸ்வின் மாதேஷை தொடர்பு கொண்டு தனக்கும் மதுபானம் வாங்கி மறுவாரு கூறியுள்ளார். ஆனால் அவர்கள் மதுபானம் வாங்காமல் திரும்பி வந்துள்ளனர். அப்போது ஏற்பட்ட வாய் தகராறு முற்றி அஸ்வின் இருவரையும் தாக்கியுள்ளார்.
கொடூர கொலை
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் மற்றும் மாதேஷ் இருவரும் சுத்தியால் அடித்தும் கத்தியால் கழுத்தில் குத்தியும் கொலை செய்ததாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர். இருவர் மீதும் கொலை வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், கையில் பலத்த காயம் ஏற்பட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாதேஷை மருத்துவ சட்ட நடைமுறைகள் நடைபெற்றவுடன் நீதிமன்றத்தில் ஆஜர் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர். மேலும் சிறுவனை சிறார் சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications
