பிஎஃப்ஐ.. "ஆமாசாமி போடணுமா".. கோவையில் சீறிய முஸ்லீம் பெண்கள்! "கிளம்பிடுங்க".. அனுப்பி வைத்த போலீஸ்
கோயம்புத்தூர்: பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா தடையை தொடர்ந்து கோவையில் உக்கடம் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக பிஎஃப்ஐ மற்றும் SDPI அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பிற்கு 5 ஆண்டுகளுக்கு தடை விதித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அமைப்பிற்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடத்தப்பட்டு வந்த நிலையில் மொத்தமாக அதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த அமைப்புடன் தொடர்புடைய கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாணவர் அமைப்பு ரிஹாப் இந்தியா ஃபவுண்டேசன், என்.சி.எச்.ஆர்.ஓ மனித உரிமை அமைப்புக்கும் தடை விதிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா
இந்த தடை காரணமாக நாடு முழுக்க போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. போலீசார் நாடு முழுக்க பல இடங்களில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டங்கள் வெடிக்க கூடாது என்பதற்காக கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. பதற்றம் நிறைந்த பகுதிகளில் விரைவு படை போலீசார், சிறப்பு படை பிரிவினர், அவசர படை பிரிவு போலீசார் என்று ஒவ்வொரு மாநிலங்களில் உள்ள போலீஸ் பிரிவினர் குவிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.

தடை
தமிழ்நாட்டிலும் இந்த தடை காரணமாக போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. முக்கியமாக கோவை, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்தான் கோவையில் உக்கடம் பகுதியில் போராட்டம் நடத்துவதற்காக பிஎஃப்ஐ மற்றும் SDBI அமைப்பை சேர்ந்த இஸ்லாமிய பெண்கள் திரண்டனர். இஸ்லாமிய பெண்கள் பலர் திரண்டு கோஷங்களை எழுப்பினர். அதேபோல் பிஎஃப்ஐ அமைப்பு குறித்தும், அவர்களுக்கு ஆதரவாகவும் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து அவர்களிடம் பேச முயன்றனர். இந்த விஷயம் அறிந்து அங்கு போலீசார் குவிந்தனர். போலீசார் 100க்கும் மேற்பட்டோர் குவிந்து கூட்டத்தை கட்டுப்படுத்த முயன்றனர். ஆனால் அதை மீறி கோவையில் இஸ்லாமிய பெண்கள் கூடி போராட்டம் செய்தனர். இவர்களிடம் கோவை மாநகர காவல் துறையினர் சமாதானம் செய்து வைக்க முயன்றும் அவர்கள் செல்லவில்லை.

கோவை
அங்கு இருந்த போலீசாரிடம்.. நீங்க எல்லாம் பண்ணுவீங்க. நாங்க பார்த்துகிட்டு இருக்கணுமா? நீங்க எங்களை இதை சாப்பிடாத.. இந்த உடையை போடாதன்னு சொல்லுவீங்க. அதை நான் பார்த்துகிட்டு இருக்கணுமா? நீங்க சொல்றதுக்கு எல்லாம் நாங்க ஆமா சாமி போடணுமா என்று போலீசாரிடம் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அங்கு வந்து உயர் அதிகாரிகள் சிலர் பெண்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.












Click it and Unblock the Notifications