ரூ.1000 த்துக்கு 1.95 லட்சம்.. என்ன நியாயமா குமாரே.. கோவை My v3 ads அடுத்த பஞ்சாயத்து
கோவை: ரூ.1000 மதிப்புள்ள பொருட்களை 1.95 லட்சம் என்ற பெயரில் ஏமாற்றி தருவதாக கோவை My v3 ads நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக iRoBo_V3.0 என்ற நெட்டிசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சக்தியானந்தன் என்பவர் கோவையை தலைமையிடமாகக் கொண்டு My v3 Ads என்ற ஆப்பை நடத்தி வருகிறார். இவர் யூடியூப் சேனலும் நடத்தி வருகிறார். இந்த My v3 Ads யூடியூப் சேனலில் தினமும் 2 மணி நேரம் விளம்பரம் பார்ப்பதன் மூலமும், புதிய நபர்களை சேர்ப்பதன் மூலமும் அதிக வருமானம் பார்க்கலாம் என விளம்பரம் செய்யப்பட்டிருக்கிறது.

அதாவது 360 ரூபாய் முதல் ஒரு லட்சத்து 21 ஆயிரம் ரூபாய் வரை உள்ள பல்வேறு பிரிவுகளில் பணம் செலுத்தி உறுப்பினராக சேரலாம் என்றும், தினசரி மொபைல் போனில் விளம்பரம் பார்ப்பதன் மூலம் 5 ரூபாய் முதல் 1800 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என்று My v3 Ads இல் கூறப்பட்டுள்ளது.
மேலும் பணம் செலுத்தும் நபர்களுக்கு அவர்கள் செலுத்திய பணத்திற்கு ஏற்ப ஆயுர்வேத கேப்சூல்கள் வழங்கப்படுகிறதாம். மேலும் புதிய நபர்களை சேர்க்கும் நபர்களுக்கு தனியாக பணம் வழங்கப்படுகிறதாம். தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை நம்பி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் முதலீடு செய்துள்ளனர். தமிழ்நாட்டை தாண்டி, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா உள்பட பல்வேறு மாநிலத்தவரும் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். முதலீட்டாளர்களுக்கு கூறியபடி அந்நிறுவனம் மாதம்மாதம் பணம் வழங்கி வந்ததாக பணம் கட்டியவரகள் கூறி வருகிறார்கள்.
இந்நிலையில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி மாத்திரைகளை வழங்குவது சட்டத்திற்கு புறம்பானது என்று புகார் எழுந்தது. மேலும், தினசரி விளம்பரம் பார்ப்பதால் அதிக வருமானம் பார்க்கலாம் என ஆசைக்காட்டி பொதுமக்களை ஏமாற்றி பெரும் தொகையை வசூலித்து வருவதாக My v3 Ads நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் எழுந்தது. அந்த புகாரின் பேரில் My v3 Ads மீது சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதனிடையே My v3 Ads நிறுவனத்திற்கு ஆதரவாகவும், பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறி கோவை நீலாம்பூர் பைப்பாஸ் சாலையில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி அன்று 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஒன்று கூடியதால் அந்த பகுதியே ஸ்தம்பித்து போனது. இதையடுத்து பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், கலைந்து போக செய்தனர்.. அதேநேரம் சட்டவிரோதமான கூட்டத்தில் ஒன்றுசேர ஆட்களை சேர்த்தல், முறையற்ற தடுப்பு, பொது இடங்களில் தொல்லை கொடுத்தல் ஆகிய 3 பிரிவுகளில் My v3 Ads நிறுவனத்தினர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இது ஒருபுறம் எனில், கோவை My v3 Ads நிறுவனம் ரூ.1000 மதிப்புள்ள பொருட்களை 1.95 லட்சம் என்ற பெயரில் ஏமாற்றி தருவதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக iRoBo_V3.0 என்ற நெட்டிசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது: "இந்த மாத்திரை எதுக்கு சாப்பிடுறது,ஏன் சாப்பிடுறதுனு தெரியல myv3adsல சேர்ந்தவுங்களுக்கு..!

40 boxம் குடுத்து 1.21L வாங்குறாங்க myv3adsல சேர..! வாங்கி 4 மாசமா வீட்ல வச்சிருக்கார்..! அட்டைய கூட பிரிக்கல..! வாங்கின ஆட்களும் யூஸ் பன்னல..! ஒரு box Rs.3900 போடுறாங்க.. அவ்வளவு வொர்த் எல்லாம் கிடையாது.. இதே ஆயிர்வேத கேப்ஸ்யூல் Rs.500குள்ள மார்கெட்ல கிடைக்குது..! Money rotation க்காக வாங்குற பணத்தை கணக்கு காட்ட இந்தபொருள ஓவர் ப்ரைஸ்வச்சி அதுக்கு GST கட்டி ஏமாத்திட்டு இருக்காங்க..!
இதுல இருக்கதெல்லாம் பார்த்துட்டு என்னமோ ஹெவியா இருக்குனு நினைக்க வேண்டாம்.. நாட்டு மருத்துகடைல சல்லீசா கிடைக்ககூடிய பொருட்கள்தான்..
1. முருங்கை பிசின்
2. பூவரசம் பூ
3. தூதுவளை
4. கசகசா
5. நெல்லிக்காய்
6. அதிமதுரம்
7. ஆலம் விதை
8. அரச விதை
9. வட்டதுத்தி
10. ஓமம்
11. தான்றிக்காய்
12. நெருஞ்சி
13. தேத்தான் கொட்டை
14. நீர்முள்ளி
15. அமுக்கிரா
16. பாதாம்
17. ரோஜாப்பூ
18. ஜாதிக்காய்
19. கிராம்பு
20. பட்டை
21. வால் மிளகு
22. திப்பிலி
23. கரு மிளகு
24. ஏலக்காய்
25. உளுந்து
26.பிஸ்தா
27. ஒரிதழ் தாமரை
28. பூனைக்காலி
29. பேரீச்சம்பழம்
இதைதான் மாத்திரையா போட்டு ஒரு டப்பா 3900,40 டப்பா 1.21லட்சம்னு கணக்கு காட்டி ஏமாத்துறாங்க.. சந்தேகம் இருந்தா பக்கத்து நாட்டுமருந்து கடைல இந்த லிஸ்ட்ட காட்டி என்ன ரேட் வரும்னு கேளுங்க..!
விக்ஸ்ச V னு சுத்தி சுத்தி எழுதுற கதைதான்..!
இதுல இருக்க மொத்த பொருளும் 100grams each வாங்கினா ரூ.1000குள்ளவருது..! (நாட்டு மருந்துகடைல இப்ப விசாரிச்சது) 3கிலோ பொருட்கள் வருது..! 6000 மாத்திரைகள் தயாரிக்கமுடியும்..! 60பாக்ஸ்க்கு தேவையான மாத்திரை..! மற்ற செலவுகள் எல்லாம் வச்சி கழிச்சகூட 50பாக்ஸ்கான மாத்திரைகள் கிடைக்கும்..! Myv3ads MRP படி 1.95L..!
ரூ.1000த்துக்கு 1.95லட்சம்..!
என்ன நியாயமா குமாரே..!" இவ்வாறு அந்த நெட்டிசன் தனது பதிவில் கூறியுள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள நெட்டிசன் ஒருவர், இந்த மாத்திரைகளை உட்கொண்டவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது நல்லது.சிலருக்கு liver toxin ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications