ஜோஸ் ஆலுக்காஸ் கொள்ளை! ஒல்லிக்குச்சி நபரின் குறியே வேறயாமே! நகைக் கடை இல்லையாமே!
கோவை: கோவை ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் கொள்ளையடிக்கச் சென்ற விஜயின் நோக்கம் நகைக் கடை இல்லை என அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
இதுகுறித்து கோவை காவல் துறை துணை ஆணையர் சந்தீஷ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருப்பதாவது: கடந்த 28ஆம் தேதி அதிகாலை கோவை 100 அடி சாலையில் உள்ள ஜோஸ் ஆலுக்காஸ் நகைக் கடையில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் நகைகள் 5.1 கிலோ கொள்ளையடிக்கப்பட்டது. 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளியை தேடி வந்தோம்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி விஜய் (26). தருமபுரியை சேர்ந்தவர். இவரை நாங்கள் எப்படி கண்டுபிடித்தோம் என்றால் அந்த கடையில் எடுக்கப்பட்ட கைரேகைகளை ஏற்கெனவே நடந்த திருட்டு வழக்கில் எடுக்கப்பட்ட கைரேகைகளுடன் ஒப்பிட்டு பார்த்ததில் ஒரே மாதிரியாக இருந்தன.
இது மட்டுமல்லாமல் நிறைய சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். கிட்டதட்ட 300-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தோம். அவரை ஆனைமலை வரை டிராக் செய்தோம். அங்கு விஜய் அவருடைய நண்பர் சுரேஷ் என்பவரின் வீட்டில் தங்கியிருந்தார். அவரை பிடிக்க முயன்ற போது முடியவில்லை. இந்த நிலையில்தான் அவருடைய மாமியார், மனைவியிடம் இருந்து நகைகளை மீட்டோம்.
அந்த வகையில் மாமியாரிடம் இருந்து 1.1 கிலோ நகைகளும் மனைவியிடம் இருந்து 3 கிலோ நகைகளையும் மீட்டோம். இந்த நகைகளில் வைரம் கிடைக்கவில்லை. அதை தருமபுரியில் உள்ள அகதிகள் முகாமில் ஆங்காங்கே புதைத்து வைத்திருந்தார். விஜய்யை பிடிப்பதில்தான் சவாலாக இருந்தது. தருமபுரியில் மலை பாங்கான பகுதியும் காட்டு பகுதியும் இருந்தது.
சிறு வயது முதலே இந்த பகுதிகளில் வளர்ந்ததால் அவருக்கு எல்லா இடங்களும் தெரிந்தது. இதனால் அங்கு அவரை பிடிக்க முடியவில்லை. 2 அல்லது 3 நாட்கள் கழித்து அவர் வெளியே வந்துவிட்டார். அவரை பின்தொடர்ந்தோம். சென்னை, திருப்பதி, காளஹஸ்தி, நெல்லூர் என தொடர்ந்து பயணம் செய்து கொண்டே இருந்தார்.
இந்த நிலையில் நேற்று விஜய்யை கைது செய்த போது அவரிடம் இருந்து 700 கிராம் வெள்ளியை பறிமுதல் செய்தோம். இந்த வழக்கில் எந்த துப்புமே துலங்காத நிலையில் கடினமாக பணியாற்றி குற்றவாளியை கைது செய்துள்ளோம். அவர் முதலில் மொபைல் கடையில் திருடுவதற்காகத்தான் வந்தாராம். ஆனால் அங்கு ஆட்கள் இருந்ததால் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அப்போதுதான் அவருக்கு ஜாக்பாட் அடித்தது போல் நகைக் கடை கண்களில் தென்பட்டது. இதையடுத்து அங்கு நுழைந்து தனியொருவனாக கொள்ளையடித்துள்ளார் என சந்தீஷ் தெரிவித்துள்ளார்.
-
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications