இது "கஞ்சா" மருதாச்சலம் செருப்பாச்சே.. சிசிடிவியில் பதிந்த செருப்பை வைத்தே துப்பு துலக்கிய போலீஸ்!
கோவை: சூலூரில் சிசிடிவி கேமராவில் பதிவான செருப்பை வைத்து துப்பு துலக்கி திருடர்களை துரத்திச் சென்று பிடித்த போலீசார் அவர்களிடம் இருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.
Recommended Video
கோவை மாவட்டம், சூலூர் அருகே தொடர் வழிப்பறி திருட்டு மற்றும் வீடு புகுந்து திருடும் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த நபர்களை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் முத்துகவுண்டன்புதூர் பகுதியில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் தொடர்பாக அங்கு தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது தேனீர் கடை ஒன்றில் சந்தேகத்துக்கு இடமான வகையில் 3 நபர்கள் நின்று கொண்டிருந்த நபர்களை பிடித்து போலீசார் விசாரிக்க முயற்சித்தனர்.

தப்பி ஓட்டம்
அப்போது போலீசாருக்கு பயந்து அந்த நபர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர். இதையடுத்து அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கொண்டு தப்பியோடிய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டிருந்தனர். இதேபோல் ஒரு கும்பல் பல்லடம் பகுதியில் உள்ள செல்போன் கடையில் திருடும் சிசிடிவி காட்சி ஒன்று போலீஸாருக்கு கிடைத்தது.

கால் செருப்பு
அதில் பதிவாகியிருந்த நபரின் கால் செருப்பை ஆய்வு செய்து விசாரித்தபோது, அந்த செருப்பு, கஞ்சா வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மருதாச்சலம் என்பவருடையது என தெரியவந்தது. கால் செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார், கலங்கல் பகுதியில் பதுங்கியிருந்த மருதாச்சலத்தை பிடித்து அவரிடம் நடத்திய விசாரணை நடத்தினர்.

வழிப்பறி
சிவானந்தா காலனியைச் சேர்ந்த சேர்ந்த சதீஷ், கணபதி பகுதியை சேர்ந்த நடராஜன் ஆகியோருடன் சேர்ந்து வழிப்பறி மற்றும் வீடுகளில் கொள்ளை அடிக்கும் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. இதில் நடராஜன் தனது 14 வயதில் இருந்து திருடி தற்போது 51 வயதிலும் திருட்டு தொழில் செய்து ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து வந்ததும், இவர் மீது வழிப்பறி,கொள்ளை உள்ளிட்ட 80 வழக்குகள் மீது உள்ளதும் தெரியவந்தது.

பல்லடம்
அதேபோல பல்லடம் பகுதியில் செல்போன் கடையை நோட்டமிட்டு திருடிய கும்பலும் இவர்கள்தான் என்பது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்த போலீஸார், அவர்களிடமிருந்து 30 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் பணத்தை பறிமுதல் செய்தனர்.
-
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
ஏற்கனவே வேலை நடக்கும் சாலை பணிகளுக்கு.. டெல்லியில் மீண்டும் அனுமதி கேட்ட ஆதவ் அர்ஜுனா? பின்னணி -
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications