கோவை எப்எல் 2 பார் கேங்வார்.. அவசரமாக நடந்த மீட்டிங்.. ஸ்ட்ரிக்ட் ஆர்டர் போட்ட போலீஸ்

Subscribe to Oneindia Tamil

கோவை: தவெக ஆட்சிக்கு வந்து 4 மாதங்களுக்கு மேலாகிவிட்டது. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதைபோல சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. கோவையில் மது, போதை கலாச்சாரம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. பீளமேடு அருகே 11 டூ 11 எனப்படும் எப்எல் 2 பாரில் நேற்று இரண்டு கும்பல்களிடையே கேங்வார் ஏற்பட்டது. இதையடுத்து அந்த பாருக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் எப்எல் 2 மற்றும் எப்எல் 3 பார்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறை குறித்து காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில், எப்எல்2, எப்எல்3 மனமகிழ் மன்ற பார் உரிமையாளர்களுடன் காவல்துறையினர் ஆலோசனை நடத்தினர். கோவை எஸ்பி பவன்குமார் ரெட்டி உள்ளிட்ட அதிகாரிகள், மனமகிழ் மன்ற உரிமையாளர்கள் கலந்து கொண்டனர். அப்போது, "எப்எல் 2, எப்எல் 3 உரிமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகள், நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

Coimbatore

மேலும், மதுபானக் கூடங்களின் உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் பொறுப்புடன் செயல்பட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்சனைகள் மற்றும் அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாதவாறு உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் . உறுப்பினர்கள் அல்லாத நபர்களுக்கும், 21 வயதிற்குட்பட்ட நபர்களுக்கும் எந்தச் சூழ்நிலையிலும் மதுபானம் வழங்கக்கூடாது.

குறிப்பாக வெளிமாநிலங்களைச் சேர்ந்த உறுப்பினர் அல்லாத நபர்கள் தொடர்பாக உரிய கவனம் செலுத்தப்பட வேண்டும். மேலும், உறுப்பினர் விவரங்கள் உள்ளிட்ட அனைத்து பதிவேடுகளும் முறையாக புதுப்பிக்கப்பட்ட நிலையிலும் பராமரிக்கப்பட வேண்டும். மதுபானக் கூட வளாகத்திற்குள் அல்லது அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறும் சிறிய தகராறு, வாக்குவாதம், சந்தேகத்திற்கிடமான நடவடிக்கை அல்லது வேறு ஏதேனும் அசம்பாவித சம்பவம் குறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

மதுபானக் கூடத்தின் உட்புறம், வெளிப்புறம், நுழைவு மற்றும் வெளியேறும் பகுதிகள் உள்ளிட்ட முக்கிய இடங்கள் முழுமையாகப் பதிவாகும் வகையில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, அவை முறையாக செயல்படும் நிலையில் பராமரிக்கப்பட வேண்டும். சிசிடிவி பதிவுகள் குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்கு பாதுகாத்து வைக்கப்பட வேண்டும்.

சட்டப்பூர்வ தேவைக்காக காவல்துறையினர் கோரும் போது அவை வழங்கப்பட வேண்டும். உரிமம் பெற்ற வளாகத்திற்குள் அருந்துவதற்காக அனுமதிக்கப்பட்ட மதுபானங்களை எந்தச் சூழ்நிலையிலும் வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்ல அனுமதிக்கக்கூடாது. மதுபான விற்பனை மற்றும் அருந்துதல் தொடர்பான அனைத்து உரிம நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளும் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+