கோவையில் இப்படி ஒரு கொடூர அத்தை..7 வயது சிறுவனை துடிக்க துடிக்க.. பகீர் வாக்குமூலம்
கோவை: கோவை சூலூர் அருகே தனியார் மில்லில் 7 வயது சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்த அத்தையை போலீசார் கைது செய்தனர். தாயின் மீதுள்ள கோபத்தில் சிறுவனை கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த ஜாகீர் உசேன் கைரொன்னிஷா தம்பதி சூலூர் அருகே சின்ன கலங்கலில் உள்ள ஸ்பின்னிங் மில்லில் வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கு கைரல் இஸ்லாம் (7) என்ற மகன் உள்ளார். வேலை தேடி அஸ்ஸாமில் குடும்பத்துடன் கோவை வந்தவர்கள், சூலூர் அருகே மில்லிலேயே தங்கி உள்ளார்கள்.

கடந்த செவ்வாய் கிழமை காலையில் வழக்கம்போல் கணவன்-மனைவி இவரும் வேலைக்கு போய்விட்டார்கள். சிறுவன் கைரல் இஸ்லாம் மட்டும் தனியாக இருந்தான். இந்நிலையில் வேலைக்கு போனவர்கள் மதியம் சாப்பிட வந்தார்கள். வீட்டில் மகன் மயங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். இதையடுத்து அவனை சூலூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தார்கள்
சிறுவன் கைரல் இஸ்லாமின் கழுத்து மற்றும் முகத்தில் காயம் இருந்தது. இதுகுறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்த போது, இதில் சிறுவன் பனியன் மூலம் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
சிறுவன் கொலை செய்யப்பட்டது மில் வளாகம் என்பதால் வெளியாட்கள் வரமுடியாது. எனவே மில்லில் உள்ளவர்களிடம் போலீசார் தீவிரமாக விசாரித்தார்கள். அப்போது ஜாகீர்உசேன் அக்காவும், சிறுவனின் அத்தையுமான நூர்ஜாகதுன் (32) என்பவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர் பேச்சில் வித்தியாசம் தெரிந்தது. அவரது பதில்கள் முண்ணுக்கு முண் முரணாக குழப்பும் வகையில் இருந்தது.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் நூர்ஜாகதுனிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் அவர் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். அவர் போலீசிடம் அளித்த வாக்குமூலத்தை கேட்டு சூலூர் போலீசார் ஆடிப்போனார்கள்.
இது தொடர்பாக நூர்ஜாகதுன் போலீசாரிடம் கூறும் போது, நான் (நூர்ஜாகதுன்) கடந்த 1½ ஆண்டுக்கு முன்பு சூலூரில் உள்ள மில்லில் வேலைக்கு சேர்ந்தேன். எனது தனது 7 வயது மகள் மற்றும் கணவருடன் மில் வளாகத்தில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்தேன். பின்னர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது அண்ணன் ஜாகீர்உசேன் குடும்பத்தையும் வேலைக்கு சேர்த்துவிட்டேன். இதையடுத்து அவர்களும் மில் வளாகத்தில் தங்கியிருந்தனர். அப்போது என் மகளும், ஜாகீர்உசேன் மகனும் ஒன்றாக விளையாடி வந்தார்கள்
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மில்லில் வேலை செய்து கொண்டிருந்தபோது எனக்கும் என் அண்ணன் ஜாகீர்உசேன் மனைவி கைரொன்னிஷாக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனை அறிந்த மில் உரிமையாளர் என்னை யூனிட்-1 ல் இருந்து யூனிட்-2 வுக்கு மாற்றினார். நான் வேலைக்கு சேர்த்துவிட்ட கைரொன்னிஷா எனக்கு எதிராக இருந்ததால் ஆத்திரம் வந்தது. என் அண்ணன் குடும்பம் மீதும் கடும் கோபம் ஏற்பட்டது.
இதனால் என் மகளுடன் சிறுவன் கைரல் இஸ்லாம் விளையாடுவது எனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நேற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு மதியம் சாப்பிட வீட்டிற்கு வந்தேன். அப்போது என் மகளுடன் கைரஸ் இஸ்லாம் விளையாடிக்கொண்டிருந்தான். இதனைக்கண்டு ஆத்திரமடைந்த நான், என் மகளை அங்கிருந்து போகச்சொல்லிவிட்டு, அங்கு கிடந்த பனியன் துணியால் சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்தேன்.
பின்னர் எனக்கு ஒன்றும் தெரியாததுபோல வேலைக்கு சென்றுவிட்டேன். போலீசார் விசாரணையில் சிக்கி கொண்டேன். அவனது தாய் மீதான ஆத்திரத்தில் அப்படி செய்துவிட்டேன்" என்று கூறியுள்ளார்.இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications