கோவை காவலர்களுக்கு மனநல ஆலோசனை.. காவல் நிலையங்களில் "மகிழ்ச்சி அலுவலர்கள்" நியமனம்!
கோவை: காவல் துறையினரின் மனநல பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், காவல்நிலையங்களில் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக காவல்துறையில் டிஜிபி முதல் காவலர்கள் வரை ஆயிரக்கணக்கானோர் காவல் பணி செய்து வருகின்றனர். சட்டம் ஒழுங்கு, ஆயுதப்படை, குற்றப்பிரிவு, போதை பொருள் தடுப்பு பிரிவு என பல்வேறு பிரிவுகள் உள்ளது.
தமிழகத்தைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாகவே காவலர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த ஆண்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்கள் தற்கொலை செய்து கொள்வதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

மகிழ்ச்சி அலுவலர்கள்
இதனால் காவல் நிலையங்களில் காவல்துறையினருக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்த நிலையில் உலக மனநல தினத்தை அனுசரிக்கும் வகையில், கோவை மாநகரக் காவல் துறையின் 15 காவல் நிலையங்களிலும் ஸ்டேஷன் ஹாப்பினஸ் அதிகாரிகள் எனப்படும் மகிழ்ச்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டனர். மாநகர காவல் நிலையங்களில் தலா இரண்டு மகிழ்ச்சி அலுவலர்கள் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு பயிற்சி
காவல் ஆணையரின் பிரதிநிதிகளாக செயல்படும் இவர்கள், காவலர்களுக்கு இடையே நிலவும் மனநலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்கி, அவர்களுக்கு உதவியாக இருப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மகிழ்ச்சி அலுவலர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவது தொடர்பாக பிரத்யேகப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, காவலர்களுக்கு இடையே உள்ள மன அழுத்தத்தை எப்படி மேலாண்மை செய்வது என்பது பற்றி சிறப்புப் பயிற்சி அளிக்கக்கூடிய வகையில், மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் மனநல ஆலோசகர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மனநலம் தொடர்பாக ஆலோசனை
மனநலம் தொடர்பான சவால்கள் உள்ள காவலர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் இவர்கள் மூலம் ஆலோசனை வழங்கப்படும்.
மேலும், கோபத்தை கட்டுப்படுத்த முடியாத காவலர்கள், மக்களிடம் பண்பாகப் பேசுவதில் பிரச்சினைகள் உள்ளவர்கள், மனநலம் தொடர்பான ஆலோசனை தேவைப்படுவோர் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் ஆலோசனைகள் வழங்கப்படும்.

தனி இடம் ஒதுக்கீடு
பல்வேறு குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்கள், அவர்களது குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும், அந்த குற்றத்தால் ஏற்பட்ட மனநல பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபடுவதற்கு ஆலோசனைகள் வழங்கப்படும். இதற்காக தனி இடம் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
அலர்ட்..! 10000 ரூபாய்க்கு மேல் பணம் அனுப்பினால் 'லாக்'.. ஆர்பிஐ கொண்டு வரும் புது ரூல்ஸ்! -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
ஐடி ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த TCS.. மாச மாசம் பணம் சொளையா வரப்போகுது! -
சிறகடிக்க ஆசை: மீனாவிடம் முத்து மறைக்கும் உண்மை! விஜயா பற்றி அண்ணாமலைக்கு தெரிந்த பெரிய ரகசியம்! -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
விஜய்யுடன் சேர்ந்து முதல்வராக முயன்ற எடப்பாடி! நான்தான் முறியடித்தேன்.. போட்டு உடைத்த செங்கோட்டையன்












Click it and Unblock the Notifications