பொங்கல் பரிசு காத்திருக்கிறது.. பிரபல நிறுவனங்கள் பெயரில் பலே மோசடி.. வாட்ஸப்பில் தீயாக பரவும் லிங்க்
கோவை: 2026 பொங்கல் பண்டிகை வரும் வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ளது. இதற்கான திட்டமிடல்களில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். பண்டிகை காலத்தை மையப்படுத்தி டிஸைன் டிஸைனான மோசடிகளும் நடைபெறும். கோவையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் பொங்கல் பரிசு காத்திருக்கிறது என்று வாட்ஸப்பில் அதிவேகமாக ஒரு லிங்க் பரவிக் கொண்டிருக்கிறது. பரிசு பொருட்கள், கூப்பன் என்று ரூ.20,000 - 50,000 வரை பரிசு கிடைக்கும் என்று பரவுவது உண்மை என்று நம்பி மக்கள் பரப்பி வருகிறார்கள். ஆனால் அது மோசடி செயல் என்றும் அதை நம்ப வேண்டாம் என்றும் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து கோவை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில், "கோவை மாநகரில் பொங்கல் விழா மற்றும் குழந்தைகளுக்கான விடுமுறையை பயன்படுத்தி பிரபலமான நிறுவனங்களின் பெயரில் மோசடியில் ஈடுபடுகிறார்கள். ஸ்டார்பக்ஸ், கிருஷ்ணா ஸ்வீட்ஸ் உள்ளிட்ட பிரபல நிறுவனங்களின் பெயரில் தவறான செய்திகளை வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பரப்பி வருகிறார்கள்.

லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம்
அந்த நிறுவனத்தின் பெயர்களில் ஆன்லைன் மூலம் பதிவு செய்தால் கலை நிகழ்ச்சிகளுக்கான கூப்பன், பரிசு பொருட்கள், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ளலாம் என்று கூறி மோசடி நடைபெறுகிறது. இதுபோன்ற போலியான லிங்குகளை நம்ப வேண்டாம். லிங்க் பற்றிய உண்மைதன்மை சரிபார்க்காமல், ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம்.
அறியாத லிங்குகளை கிளிக் செய்ய வேண்டாம். முன்பணம் செலுத்துவதற்கு முன்பு சரிபார்க்கவும். சந்தேகமான தகவல்களை நம்ப வேண்டாம், எச்சரிக்கையுடன் இருங்கள். மோசடி தொடர்பான புகார்களுக்கு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம்" என்று கூறியுள்ளனர். இதுதொடர்பான விழிப்புணர்வு பதிவு கோவை மாநகர காவல்துறையின் சமூகவலைதள பக்கங்களில் பகிரப்பட்டுள்ளது.
முற்றிலும் பொய்யான செய்தி
இதுகுறித்து ஶ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "எங்கள் நிறுவனத்தின் பெயரில் 'பொங்கல் சலுகை' (Pongal Offer) எனக் கூறி சில தவறான செய்திகள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் பரவி வருவதை எங்களது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் அனைத்தும் முற்றிலும் பொய்யானவை என்பதை இதன்மூலம் தெளிவுபடுத்துகிறோம்.
எங்களது நிறுவனம் சார்பில் இதுபோன்ற எந்தவொரு சலுகையும் எவ்வித அதிகாரப்பூர்வ வழியிலும் அறிவிக்கப்படவில்லை. எனவே, பொதுமக்கள் இத்தகைய தவறான செய்திகளை பொருட்படுத்த வேண்டாம் என்றும், எங்களது அதிகாரப்பூர்வ இணையதளம் மற்றும் சரிபார்க்கப்பட்ட சமூக ஊடக கணக்குகள் மூலம் வெளியிடப்படும் தகவல்களை மட்டுமே நம்புமாறும் கேட்டுக் கொள்கிறோம்.
உரிய நடவடிக்கை
எனவே சந்தேகமாக உள்ள இணைப்புகளை காண்பின், அவற்றை கிளிக்செய்யவோ அல்லது பகிர்வதோவேண்டாம். எங்களது மதிப்பிற்குரிய வாடிக்கையாளர்களை தவறாக வழிநடத்தும் இத்தகைய தவறான தகவல்களை கடுமையாக கண்டிக்கிறோம். இந்த விவகாரம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் இணைந்து எங்களது குழு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
அந்த போலி செய்தி தொடர்பாக மக்கள் எந்த குழப்பமும் அடைய வேண்டாம். பொங்கலின் மகிழ்ச்சியான தருணங்களில், வதந்திகளை அல்ல மகிழ்ச்சி, நம்பிக்கை மற்றும் உண்மையையே பகிர்வோம்" என்று கூறியுள்ளனர். இதனால் மக்கள் விழிப்புடன் செயல்பட்டு மோசடியில் இருந்து தப்பித்துக் கொள்ளுங்கள் மக்களே.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications