பொள்ளாச்சியில் ஓட்டல் ரூமில் தாலியை கட்டி குதூகலம்.. வீடியோ வந்தாச்சு! ஐடி பெண் கோவை போலீசில் புகார்
கோவை: டெக்னாலஜி அதிகரித்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில், இணையத்தில் மோசடிகளும் அதிகமாகிவிட்டன.. புதுபுது ஆப்களை பயன்படுத்தி, புதுவிதமான மோசடிகளும் நடக்கின்றன. அதேபோல தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் நகை பறிக்கும் செயல்களும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.. மற்றொருபுறம் காதல் என்ற பெயரில் நெருங்கி பழகி ஏமாற்றும் போக்கும் அதிகரித்து விட்டன.. இதற்கு ஆண், பெண் இரு தரப்புமே விலக்கில்லை.. இப்போது கோவையில் என்ன நடந்தது தெரியுமா?
பொள்ளாச்சி ஓட்டல் அறையில் வைத்து தாலி கட்டி திருமணம் செய்து ஏமாற்றிய வாலிபர் குறித்து பெண் ஐடி ஊழியர் கோவை போலீசில் புகார் அளித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சமூக விரோத செயல்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மாநகர போலீஸார் தொடர்ந்து எடுத்து வருகிறார்கள்.. எனினும் புதிய புதிய உத்திகளைப் பயன்படுத்தி களமிறங்குகின்றனர் சமூக விரோதிகள்.
அதேபோல விபச்சாரம், பாலியல் குற்றங்களும் பெருகி வருகின்றன.. எனவே, அடுக்குமாடி குடியிருப்புகள், சொகுசு விடுதிகள், ஓட்டல்கள், லாட்ஜ்களில் அதிரடி ரெயிடுகளை நடத்தி, அங்கெல்லாம் விபச்சாரம் நடப்பது உறுதியானால் சம்பந்தப்பட்டவர்களை போலீஸார் கைது செய்து சிறையில் அடைக்கின்றனர்.. மீட்கப்படும் அப்பாவி பெண்களை காப்பகத்தில் ஒப்படைக்கும் செயலிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
கோவை பொள்ளாச்சி ஓட்டல்
இந்நிலையில், இளம்பெண் ஒருவர் காதலனுடன் ஓட்டலில் அறை எடுத்து தங்கி, தாலியும் கட்டிக்கொண்டு, தன்னுடைய வாழ்க்கையையும் தொலைத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை தந்துவருகிறது.
கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த 26 வயது இளம்பெண், கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீசிலிலும், கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும் புகார் ஒன்றை தந்துள்ளார்..
இதுகுறித்து அந்த பெண் சொல்லும்போது, "நான் கோவையில் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறேன். பீளமேட்டில் உள்ள ஜிம்மிற்கு சென்று வந்த போது மயிலாடுதுறையை சேர்ந்த கிஷோர் (28) அறிமுகமானார். ஜிம்மில் நட்புடன் பழகியபோது, திடீரென கிஷோர் என்னிடம் ஒரு மோதிரத்தை பரிசளித்து என்னை காதலிப்பதாக கூறினார்..
ஓட்டல் ரூமில் தாலி கட்டி திருமணம்
இதற்கு பிறகு நாங்கள் இருவரும் காதலித்து வந்தோம். 2 வருடங்களுக்கு முன்பு, பொள்ளாச்சியில் உள்ள ஓட்டல் அறையில் வைத்து எனக்கு கிஷோர் தாலி கட்டினார். அதன் பின்னர் என்னை பல முறை வற்புறுத்தி பாலியல் உறவு வைத்தார்.
நான் கருவுற்ற நிலையில், என்னை ஏமாற்றி தவிக்கவிட்டுவிட்டு, வேறொரு பெண்ணுடன் கிஷோர் தொடர்பை ஏற்படுத்தி கொண்டார்.. இதற்கு பிறகு என்னுடைய வயிற்றில் வளரும் கருவை கலைக்க கிஷோரும், அவரது அக்கா யாழினி என்பவரும் சேர்ந்து மிரட்டுகிறார்கள்..
கிஷோரால் நான் கருவுற்றதை அவரது வீட்டிற்கு சென்று தெரிவித்தேன். அப்போது அவரது அக்கா யாழினி கூகுளில் பார்த்து ஏதாவது மருந்தை சாப்பிட்டு கருவை கலைக்க சொல்லி வற்புறுத்தினார். குழந்தை பிறந்தால் வீட்டில் அனுமதிக்க மாட்டோம் என்று என்னை தகாத வார்த்தைகளால் திட்டி விரட்டிவிட்டார்.
ஐ.டி. பெண் கண்ணீர் புகார்
எனக்கு தாலி கட்டியது குறித்து கிஷோரிடம் கேட்டதற்கு, "தாலி என்பது வெறும் கயிறு தான், அதை எப்படி திருமணம் என சொல்ல முடியும்?" என்று என்னிடம் கேட்கிறார். இதனால் அதிர்ச்சி அடைந்த நான், போதுமான வீடியோ, போட்டோ ஆதாரங்களுடன் இதுகுறித்து மகளிர் ஸ்டேஷனில் புகார் தந்தேன்.. ஆனால், அதில் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.. எனவே தற்போது காவல் ஆணையரிடம் புகார் தந்துள்ளேன்.
கிஷோர் எனக்கு தாலி கட்டிய வீடியோ, அவர் என்னுடன் நெருக்கமாக இருந்த வீடியோ உள்ளிட்டவைகளையும் ஆதாரங்களையும் அளித்துள்ளேன்" என்று கண்ணீருடன் கூறினார். இதையடுத்து, இளம்பெண் அளித்த புகார் தொடர்பாக மகளிர் போலீசார் சிஎஸ்ஆர் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், சம்பந்தப்பட்ட பெண்ணுடன், கிஷோர் பல்வேறு இடங்களில் சுற்றித்திரிந்த வீடியோ, ஓட்டல் ரூமில் தாலி கட்டிய வீடியோ போன்றவை சோஷியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.












Click it and Unblock the Notifications