வாட்ஸ்ஆப்பில் ஆசிரியர் டார்ச்சர்..! கோவை சின்மயா பள்ளி மாணவி தூக்கிட்டு தற்கொலை!
பாலியல் தொலை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார்
கோவை: 12-ம் வகுப்பு மாணவி ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி வருகிறது.. பள்ளி ஆசிரியர் தந்த பாலியல் தொல்லை காரணமாகவே தங்கள் மகள் இறந்துவிட்டதாக பெற்றோர் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
கோவையை சேர்ந்த 17 வயது மாணவி, 11 ம் வகுப்பு வரை ஆர்எஸ் புரம் பகுதியில் உள்ள சின்மயா வித்யாலயா என்ற தனியார் மேல் நிலைப்பள்ளியில் படித்து வந்தார்.
ஆனால், அந்த ஸ்கூலில் தனக்கு படிக்க விருப்பமில்லை என்று சொன்னதால், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் அம்மணியம்மாள் என்ற பள்ளிக்கு மாறினார்.. அந்த பள்ளியில் 12 ம் வகுப்பு சேர்ந்து படித்து வந்தார்.

மாணவி
இந்நிலையில் நேற்று திடீரென தற்கொலை செய்து கொண்டார்.. வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உள் பக்கமாக கதவை தாழ்ப்பாள் போட்டு கொண்ட மாணவி, ஃபேனில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்... வெளியே சென்றிருந்த பெற்றோர், வீட்டிற்கு திரும்பி வந்தபோது, கதவு உட்பக்கம் பூட்டப்பட்டு இருந்தது... நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்த பெற்றோர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர்.

தற்கொலை
அப்போது, தங்கள் மகள் தூக்கில் தொங்கியதை கண்டு அலறினர்.. இது குறித்து உக்கடம் போலீசாருக்கு மாணவியின் பெற்றோர்கள் புகார் அளித்தனர்... அந்த புகாரின் பேரில் போலீசாரும் வழக்கு பதிவு செய்து, விரைந்து வந்து மாணவியின் சடலத்தை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.. பிறகு விசாரணையையும் ஆரம்பித்தனர்.. அப்போதுதான், மாணவிக்கு பாலியல் தொல்லை இருந்து வந்தது தெரியவந்தது. ஏற்கனவே படித்த பள்ளியின் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர், மாணவிக்கு பாலியல் தொல்லை தந்து வந்திருக்கிறார்..

புகார்
இதுகுறித்து வீட்டிலும் மாணவி சொல்லி கதறி அழுதுள்ளார்.. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் இதுபற்றி பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளனர்.. ஆனால், இந்த விஷயம் வெளியே தெரிந்தால் பள்ளியின் பெயர் கெட்டு விடும் என்பதால், அப்படியே மூடி மறைத்து விட்டதாகவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது. அதேபோல, பெற்றோரிடமும் இதை பற்றி வெளியே சொல்ல வேண்டாம் என்று அந்த ஸ்கூல் தலைமை ஆசிரியர் கேட்டுக் கொண்டாராம்..
Recommended Video

தற்கொலை
இதனாலேயே மனமுடைந்து மாணவி தற்கொலை செய்திருப்பதாக உறவினர்களும் பெற்றோர்களும் குற்றஞ்சாட்டுகின்றனர். மாணவியின் செல்போனுக்கு அடிக்கடி மெசேஜ் அனுப்பி வந்தாராம் சம்பந்தப்பட்ட ஆசிரியர்.. கடந்த வருடம் ஏப்ரல் மாதத்தில் ஒருநாள், மாணவியை ஸ்கூல் ஆடிட்டோரியத்திற்கு வரவழைத்த மிதுன் சக்கரவர்த்தி, மேல் ஆடையை கழற்றி பாலியல் தொல்லையும் அளித்துள்ளதாகவும், இது குறித்தும் பள்ளி நிர்வாகத்திடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்றும் தற்கொலை செய்து கொண்ட மாணவியின் நண்பர்கள் தெரிவிக்கிறார்கள்.

கடிதம்
எனினும், மாணவி தற்கொலைக்கான காரணத்தை போலீசார் விசாரித்து வருகிறார்கள்.. அதேபோல தற்கொலைக்கு முன்பு மாணவி கடிதம் ஒன்றை எழுதியுள்ளாராம்.. அதையும் போலீசார் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர். சென்னையிலும் இப்படித்தான் சில பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் தரப்பட்டு, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் கைதாகி உள்ள நிலையில், கோவையிலும் அடுத்த சம்பவம் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications