புற்றுநோயை குணப்படுத்தும் அரிய கண்டுபிடிப்பு.. கிடைத்தது காப்புரிமை.. சாதித்த கோவை பேராசிரியர்கள்
கோவை: புற்றுநோய் செல்களை மட்டும் தேடி தேடி அழிக்கும் அரிய கண்டுபிடிப்பை செய்திருக்கிறார்கள் கோவை பாரதியார் பல்கலைக்கழக பேராசிரியர்கள் . அவர்கள் கண்டுபிடித்த நானோ துகள் கண்டுபிடிப்புக்கு காப்புரிமை கிடைத்துள்ளது. இதையடுத்து பலரும் பேராசிரியர்களை பாராட்டி வருகிறார்கள்.
கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் உயிர்வேதியியல் துறை உதவி பேராசிரியையாக கே.எம்.சாரதா தேவி பணியாற்றி வருகிறார். இதேபோல் பாரதியார் பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறை உதவி பேராசிரியராக குருசரவணன் பணியாற்றி வருகிறார்கள்.

இவர்கள் இருவரும் தமிழ்நாட்டின் மாநில மலரான செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து புற்றுநோயை குணப்படுத்தும் வெள்ளி நானோ துகள்களை கண்டுபிடித்துள்ளார்கள். இந்த வெள்ளி நானோ துகள் கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசு காப்புரிமை வழங்கி உள்ளது.
இதுகுறித்து பேராசிரியர்கள் சாரதாதேவி மற்றும் குருசரவணன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசும் போது, "தற்போது உள்ள புற்றுநோய் மருந்துகள் புற்றுநோய் பாதித்த செல்களை அழிக்கின்றன. அது மட்டுமின்றி புற்றுநோய் பாதிக்காத செல்களையும் இப்போது உள்ள புற்று நோய் மருந்துகள் அழிக்கின்றன.

ஆனால் நாங்கள் செங்காந்தள் செடியின் கிழங்கின் சாற்றில் இருந்து கண்டுபிடித்துள்ள வெள்ளி நானோ துகள்கள் புற்றுநோய் பாதித்த செல்களை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்கள் எளிதில் கண்டறிந்து அழிக்கிறது.
இதன்மூலம் புற்றுநோயில் இருந்து மீள இந்த துகள்கள் உதவுகின்றன. மேலும் புற்றுநோய் தாக்காத செல்கள் அழிக்கப்படாமலும் இந்த வெள்ளி நானோ துகள்கள் பாதுகாக்கின்றன.
முதற்கட்டமாக இந்த நானோ துகள்கள் எலிக்கு செலுத்தி வெற்றி அடைந்து உள்ளோம். மனிதர்களின் பயன்பாட்டிற்கு இந்த நானோ துகள்களை கொண்டு வர சில ஆண்டுகள் பிடிக்கும் என்று அவர்கள் ஆராய்ச்சி குறித்து கூறினார்கள்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications