கோவை வீரபாண்டி சாலையில் சூழ்ந்த வெள்ளம்.. ஸ்தம்பித்த போக்குவரத்து.. கோவை குற்றாலமும் மூடல்!

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாகப் பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. மேலும், கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

சென்னைக்கு அடுத்து வேகமாக முன்னேறும் மாவட்டமாக கோவை உள்ளது. கல்வி, தொழில், மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கோவை வளர்ச்சியடைந்து வருகிறது. கோவையின் கிளைமேட் மிகவும் ஸ்பெஷலானது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருப்பதால் கோவையின் தட்பவெப்பம் இதமாக இருக்கும். கோவையை சுற்றி ஏராளமான சுற்றுலா தலங்கள் உள்ளன.

coimbatore-rain-floodwater-floods-periyanaickenpalayam-veerappandi-road-kovai-kutralam-closed

கோவைக் குற்றாலம் மூடல்

கோவையின் மற்றொரு கூடுதல் சிறப்பு சிறுவாணி தண்ணீர். கேரளாவில் உள்ள சிறுவாணி அணையில் இருந்து கோவை மாநகருக்கு குடிநீர் எடுக்கப்படுகிறது. போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குட்பட்ட சாடிவயல் அருகே கோவை குற்றாலம் உள்ளது. அதற்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வருகை புரிவார்கள். சிறிய அருவியாக இருந்தாலும் அடர்ந்த காடும், சில்லென்ற காற்றும், உறைய வைக்கும் நீரும் அற்புதமான அனுபவத்தை கொடுக்கும்.

தென்மேற்கு பருவமழையில் கோவை மற்றும் கேரளாவுக்கு போதுமான மழை கிடைக்கவில்லை. இதனால், கோவை குற்றாலத்துக்கான நீர் வரத்து குறைவாக இருந்தது. இந்நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் தற்போது பெய்து வரும் கன மழையால் கோவை குற்றாலம் அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பு கருதி கோவைக் குற்றாலம் சூழல் சுற்றுலா இன்று தற்காலிகமாக மூடப்படுகிறது என்று வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

பெருக்கெடுத்தோடிய வெள்ளம்

அதேபோல, கோவை புறநகர்ப் பகுதிகளில் நேற்று பெய்த கன மழை காரணமாக, பெரியநாயக்கன்பாளையம் - வீரபாண்டி சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி வெள்ளம் சென்றதால் போக்குவரத்து முடங்கியது. மேலும், கழிவுநீர் வாய்க்காலில் நீர் கரைபுரண்டு ஓடியதால், ஆபத்தை உணராமல் வாகனங்களை இயக்க முயன்றவர்களைச் சுற்றி இருந்தவர்கள் தடுத்த பரபரப்பான வீடியோ வைரலாகி வருகிறது.

கோவை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் நேற்று பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக, பெரியநாயக்கன்பாளையத்தில் இருந்து வீரபாண்டி செல்லும் சாலையில் உள்ள ரயில் தண்டவாளம் அருகே உள்ள வாய்க்காலில் நீர்வரத்து அதிகரித்துக் காணப்பட்டது. தரைப்பாலம், சாலையை மூடியபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஸ்தம்பித்த போக்குவரத்து

சாலையின் இருபுறமும் பேருந்துகள், கார்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் கடந்து செல்ல முடியாமல் நின்றன. அப்போது, பெருக்கெடுத்த நீரைக் கடந்து செல்ல முயன்ற சில வாகன ஓட்டிகளை அங்கு இருந்த பொதுமக்கள் உடனடியாகச் சூழ்ந்து தடுத்து நிறுத்தினார்கள். ​இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. வெள்ளப்பெருக்கு ஏற்படும போது, ஆழம் மற்றும் நீரின் வேகத்தை அறியாமல் வாகனங்களை இயக்க வேண்டாம் என மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் தொடர்ந்து எச்சரித்து வருகின்றன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+