கோவை சாலையில் தோன்றிய எலான் மஸ்க்கின் இரும்பு ராட்சதன்.. ரூ.5 கோடி மாஸ் வடிவம்.. வியப்பில் மக்கள்
கோவை: தமிழகத்தின் மான்செஸ்டர் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகரம், எப்போதுமே விலை உயர்ந்த சொகுசு கார்களின் புகலிடமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் இன்று கோவை மாநகர சாலைகளில் வலம் வந்த ஒரு விசித்திரமான வாகனம், ஒட்டுமொத்த கோயம்புத்தூரையே ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது.. அப்படி என்ன நடந்தது தெரியுமா???
தமிழகத்தின் மான்செஸ்டர் என பெருமையுடன் அழைக்கப்படும் கோயம்புத்தூர் மாநகர சாலைகளில், சமீப நாட்களாக ஒரு வித்தியாசமான வாகனம் மக்கள் கவனத்தை முழுமையாக கவர்ந்து வருகிறது..

எப்போதும் சொகுசு கார்கள், சூப்பர் பைக்குகள், தொழிலதிபர்களின் ஆடம்பர வாகனங்கள் என பரபரப்பாக இயங்கும் இந்த நகரில், இப்போது பேசுபொருளாக மாறியிருப்பது உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் கனவு வாகனமான டெஸ்லா சைபர் டிரக் தான்..
கோயம்புத்தூர் எலான் மஸ்க்
உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவன தயாரிப்பான "சைபர் டிரக்" (Tesla Cybertruck), கோவையின் முக்கிய சாலைகளில் முதன்முறையாக இன்று காட்சியளித்தது. கோவையின் சாலைகளில் சென்ற அத்தனை பேரின் கவனத்தையும் இன்று ஈர்த்து ஆச்சரியத்தில் ஆழ்த்திவிட்டது இந்த டிரக்..
இதை பார்த்த பொதுமக்கள் வியந்து போன் நின்றனர்.. காரணம், விண்வெளி ஓடம் போன்ற அதன் வித்தியாசமான வடிவமும், துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் ஆன உடலமைப்பும் ஏதோ ஹாலிவுட் படக்கருவி ஒன்று கோவை சாலைக்கு வந்துவிட்டது போன்ற பிரமையை ஏற்படுத்தியது.
இந்தியாவில் முறையாக பதிவு செய்யப்பட்டு ஏற்கனவே சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் தென்பட்ட இந்த 'எலக்ட்ரிக் பீஸ்ட்', தற்போது கோவை மக்களின் கண்களுக்கும் விருந்தளிக்க வந்துவிட்டது..
ரூ.5 கோடி வாகனம்
இந்த வாகனத்தின் மிக முக்கியமான ஸ்பெஷலிட்டி என்ன தெரியுமா? இதன் உறுதித்தன்மைதான். விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட்டுகளில் பயன்படுத்தப்படும் அதே அல்ட்ரா-ஹார்ட் 30X துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் உருவாக்கப்பட்டுள்ள இந்த வாகனம், 9 மிமீ தோட்டாக்களையே தாங்கும் வல்லமை கொண்டது.
விண்வெளி ஓடத்தை நினைவூட்டும் அதன் கோண வடிவமைப்பு, மின்சார வாகன உலகில் முற்றிலும் புதிய தோற்றத்தை உருவாக்கியுள்ளது..
துருப்பிடிக்காத இரும்பு கவசத்தால் ஆன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் எக்ஸோஸ்கெலிட்டன் உடலமைப்பு, இதை ஒரு சாதாரண கார் என்பதைக் காட்டிலும் ஒரு ராட்சத இயந்திரமாக மாற்றுகிறது.. சாலையில் இதைக் கண்ட பலர், ஹாலிவுட் அறிவியல் கற்பனை படங்களில் வரும் எதிர்கால வாகனம் ஒன்று நம்மூர் சாலைக்கு வந்து விட்டதுபோல் உணர்ந்ததாக கூறுகின்றனர்..
விண்வெளி ஓடம்? கார் பிரியர்கள்
இந்தியாவில் முறையாகப் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த டெஸ்லா சைபர் டிரக், ஏற்கனவே சென்னை மற்றும் மும்பை போன்ற பெருநகரங்களில் மட்டுமே அரிதாகக் காணப்பட்டு வந்தது.. தற்போது கோவை மாநகரின் அவினாசி சாலை, ஆர்.எஸ்.புரம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் வலம் வந்தது, கார் பிரியர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது..
அவினாசி சாலை மற்றும் ஆர்.எஸ்.புரம் பகுதிகளில் இந்த சைபர் டிரக் சீறிப்பாய்ந்த போது, கார் பிரியர்கள் உட்பட பொதுமக்கள் உற்சாகமடைந்து தங்கள் செல்போன்களில் வீடியோக்களையும் போட்டோக்களையும் இஷ்டப்படி எடுத்து தள்ளினார்கள்.. இன்று சமூக வலைதளங்களில் இந்த வீடியோக்கள் மிக வேகமாக வைரலாகி வருகின்றன..
கோவையில் வியந்த மக்கள்
சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த மின்சார வாகனம், துப்பாக்கித் தோட்டாக்களையும் தாங்கும் வல்லமை கொண்டது என்பது கூடுதல் ஆச்சரியமாக பேசப்படுகிறது.. ஒருபுறம் இதன் விலை, இறக்குமதி வரி, இந்திய சாலைகளுக்கு ஏற்றதா என்ற விவாதங்கள் எழுந்தாலும், மறுபுறம் இதன் மாஸ் லுக் மற்றும் தொழில்நுட்ப சிறப்பு அனைவரையும் வியக்க வைத்துள்ளது..
பூஜ்ஜியத்திலிருந்து 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.7 விநாடிகளில் எட்டும் திறன் கொண்ட இந்த வாகனம், ஒருமுறை சார்ஜ் செய்தால் சுமார் 500 கிலோமீட்டருக்கும் மேல் பயணிக்கும் ஆற்றல் கொண்டது. இதன் உட்புறத்தில் 18.5 இன்ச் அளவிலான பிரம்மாண்ட தொடுதிரை மற்றும் எதிர்கால தொழில்நுட்ப வசதிகள் நிறைந்துள்ளன.
மாஸ் லுக்
ஒருபுறம் இந்த வாகனத்தின் பிரம்மாண்ட விலை மற்றும் இறக்குமதி வரி குறித்து இணையவாசிகள் விவாதித்தாலும், மறுபுறம் இதன் மாஸ் லுக்தான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
சமீபத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் மும்பை வீதிகளில் இத்தகைய வாகனத்தை ஓட்டி சென்றது இணையத்தில் வைரலானது நினைவிருக்கலாம்.. இப்போது கோவையிலும் இது தென்பட்டுள்ளது.
இந்தியாவில் மிகவும் அரிதாகவே காணப்படும் இத்தகைய நவீன வாகனங்கள் கோயம்புத்தூர் போன்ற ஒரு தொழில் நகரத்தின் சாலைகளில் வலம் வருவது, நகரின் பொருளாதார வளர்ச்சியை சர்வதேச தரத்திற்கு உயர்த்திக் காட்டுவதாக இளைஞர்கள் உற்சாகத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
எப்போதுமே ஒரு வாகனம் சாலையில் ஓடுவது மட்டும் செய்தி அல்ல.. அது ஒரு நகரத்தின் கனவுகளையும், எதிர்காலத்தை நோக்கிய பயணத்தையும் சொல்லும் அடையாளம் ஆகிறது.. அதுதான் கவனிக்க வேண்டிய அம்சம்..!!
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications