மனசாட்சி வேண்டாமா.. மாணவிகளை இப்படியா நடத்துவது?.. கோவையில் தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

Subscribe to Oneindia Tamil

கோவை: கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே வீட்டுப்பாடம் எழுதாமல் வந்த 5ஆம் வகுப்பு மாணவியை குச்சியால் அடித்த பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மாணவியை தாக்கியதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கல்வித் துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் படித்து வரும் மாணவ, மாணிவிகளை ஆசிரியர்கள் அடிப்பது, தாக்குவது, கழிவறைகள் மற்றும் பள்ளி வளாகங்களை சுத்தப்படுத்த பயன்படுத்தப்படுவது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இது போன்ற சம்பவங்கள் மீது அதிகாரிகள் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தாலும் மீண்டும் மீண்டும் புகார்கள் எழுந்து வருகின்றன. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் தற்போது அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது.

Coimbatore School

மாணவி மீது தாக்குதல்

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தை அடுத்த நாயக்கன்பாளையம் ஊராட்சி, பாலமலை அருகே, குஞ்சூர் பகுதியில் பழங்குடியினர் உண்டு, உறைவிடப் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக கிருஷ்ணபிரியா மற்றும் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இங்கு 43 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் ஒரு மாதத்திற்கு முன்பு வீட்டுப் பாடம் எழுதாமல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், தலைமை ஆசிரியை கிருஷ்ணபிரியா அந்த மாணவியை குச்சியால் முதுகுப் பகுதியில் அடித்துள்ளார். இதில் அந்த மாணவிக்கு காயம் ஏற்பட்டது. இதை அறிந்த மாணவியின் பெற்றோர் பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டனர். அதற்கு அவர் தெரியாமல், நடந்து விட்டதாக கூறியதாக தெரிகிறது.

வெளியான புகைப்படங்கள்

இதற்கு இடையே காயம் அடைந்த மாணவியின் புகைப்படம் மற்றும் பள்ளியின் கழிவறையை மாணவிகள் சிலர் சுத்தம் செய்யும் புகைப்படங்கள் வெளியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக கல்வித் துறை உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். பள்ளித் தலைமை ஆசிரியை வேறு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று மாணவர்கள் கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், தலைமை ஆசிரியரை கட்டாய விடுப்பில் அனுப்பி ஆதிதிராவிடம் மற்றும் பழங்குடியினர் நலத்துறை நடவடிக்கை எடுத்தது. தற்போது தலைமை ஆசிரயரைப் பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+